புதுச்சேரி சுற்றுலாவின் மேம்படுத்த வலிறுத்தி சுற்றுலாத்துறை இயக்குனரிடம் பாஜக மனு

புதுச்சேரி சுற்றுலாவின் மேம்படுத்த வலிறுத்தி சுற்றுலாத்துறை இயக்குனரிடம் பாஜக சமு்க ஊடக பிரிவு சார்பில் மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி சுற்றுலாத்துறை இயக்குனர் முரளிதரனை சந்தித்து பாரதிய ஜனதா கட்சி சமூக ஊடக மாநில தலைவர் ஶ்ரீ மகேஷ் ரெட்டி தலைமையில் வளர்ச்சி அடைந்த பாரதம் மாநில பொறுப்பாளர், ரௌத்திரம் சக்திவேல், பாஜக முக்கிய பிரமுகர் செல்வகுமாரன் முன்னிலையில் புதுச்சேரி சுற்றுலாவின் மேம்படுத்த மற்றும் முறைப்படுத்த சுற்றுலாத்துறை இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது; புதுச்சேரியை ஆன்மீக சுற்றுலா தளமாக அறிவிப்பு வெளியிட்டு சித்தர்கள் உடைய கையேட்டை வெளியிட்ட முதலமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

புதுச்சேரி மாநிலம் அமைதி மாநிலம் என்று நமது மாநிலத்தை உலக அளவில் சுற்றுலாவை அமைதியும் ஆன்மீகமும் நிலைக்கட்டும் என்ற நாதத்தை மையப்படுத்தி இந்த ஆண்டு புதுச்சேரி உலக சுற்றுலா தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சுற்றுலா வளர்ச்சி என்பது உள்ளூர் மக்களின் அன்றாட வாழ்வில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் சுற்றுலாத்துறை ஆனது தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் உள்ளூர் போக்குவரத்து நெரிசல், முறையற்ற தங்கும் விடுதி அமைத்தல், ஆட்டோ, இருசக்கர வாகனம் வாடகை விடுவதை கண்காணித்தல், எண்ணிக்கைகளை முறைப்படுத்துதல், பார்க்கிங் வசதிகளை மேம்படுத்தல், வெளியூர் வாகனங்கள் பார்க்கிங் விடுவதற்கான இடத்தினை அடையாளம் காணுதல் போன்ற பணிகளை மேம்படுத்திட வேண்டும்.

மேலும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் 100 விதமான மது மற்றும் கேளிக்கை தொடர்பான நிகழ்வு நடக்கும்போது அதே அளவிற்கான ஆன்மீக நிகழ்வு மற்றும் கலாச்சார சொற்பொழிவுகளும் நடத்தப்பட வேண்டும், அதற்கு சுற்றுலா துறையும் கலை பண்பாட்டு துறையும் இணைந்து செயல்பட வேண்டும், அதற்கான ஆண்டு வரைவு திட்டங்களை வெளியிடப்பட வேண்டும்.

மேலும் ஆன்மீக சுற்றுலா புதுவையில் உள்ள சித்தர்களுடைய ஜீவ சமாதியை சுற்றி தரிசிக்க புதுச்சேரி சுற்றுலாத் துறையும், போக்குவரத்து துறையும் இணைந்து முற்றிலுமாக இலவச பேருந்தை அறிமுகப்படுத்த வேண்டும். இது தொடர்பாக திட்டங்கள் வரையறபடுத்தப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

சுற்றுலா வளர்ச்சியினால் உள்ளூர் மக்கள் நிம்மதி காக்கும் வகையில் புதுச்சேரி சுற்றுலாத் துறையும், போக்குவரத்து காவல்துறையும் இணைந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்து வருகின்ற பண்டிகை காலமான தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகிய நிகழ்வுகளை அமைதியாக, சந்தோஷமாகவும் கடந்திட புதுச்சேரி மக்களை மையப்படுத்தி செயல்பட கேட்டுக் கொள்கின்றோம். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவது மூலமாக மாண்புமிகு பாரத பிரதமரின் திரு நரேந்திர மோடி அவர்களுடைய கனவு கொள்கையான பெஸ்ட் BEST புதுச்சேரியில் (Spiritual) ஸ்பிரிச்சுவல் மற்றும் (Tourism) டூரிசம் ஆகியவை இணைந்துள்ளது.

பிரதமரின் இந்த நோக்கத்தை நிறைவேற்றிட அரசும், அரசாங்கமும் இரு கரங்கள் கோர்த்து முன்னேறி மக்களின் சமூக பாதுகாப்பையும் உறுதி செய்திடும். மேலும் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும் நபர்களை கௌரவப்படுத்தும் விதமாக அவர்களை மக்கள் மத்தியில் கவுரவ படுத்த வேண்டும். மேலும் நமது மாகி பிராந்தியத்தில் உள்ள கடற்கரைப் பகுதியை திருமதி ரம்யா அவர்களுடைய குழு சிறப்பாக பணியாற்றியதை பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக பகிர்ந்து கொண்டார் அப்படி இருக்கும் அந்த நபரை நம் சுற்றுலாத்துறை தொடர்பு கொண்டு அவருக்கு ஒரு பாராட்டினை தெரிவிக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி பட்டியல அணியின் மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் தகவல் தொழில் நுட்பத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சார்லஸ் பட்டியலெனியின் மாநில செயற்குழு உறுப்பினர்கார்த்திகேயன் மாநில செயற்குழு உறுப்பினர் கணேஷ் சமூக ஊடக மாநில செயற்குழு உறுப்பினர் செல்வம் கலந்து கொண்டனர்..

Related posts

Leave a Comment