அரியானாவில் அக்.15ம் தேதி பாஜக ஆட்சியமைப்பு

அரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. முதலில் காங்கிரஸ் 50 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சுமார் ஒரு மணி நேரம் கழித்து பா.ஜ.க முன்னிலை விகித்து இறுதியாக 90 இடங்களில் 48 இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

பெரும்பாலான தொகுதியில் இழுபறி நிலவியது. முன்னணி வகித்தவர்கள் பின்தங்குவதும், பின் தங்கியவர்கள் முன்னணி வகிப்பதுமாக இருந்தது. இதனால் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி வாக்குகள் வித்தியாசம் மிகவும் குறைவாக இருந்தது.

இறுதியாக, அரியானா மாநிலத்தில் பாஜக 3 ஆவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

இந்நிலையில், அரியானா மாநிலத்தில் பாஜக அரசின் பதவி ஏற்பு விழா அக்டோபர் 15ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய முதல்வராக இருக்கும் நயாப் சிங் சயானியே மீண்டும் முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Leave a Comment