முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-
பண்டிட்ஜியின் இந்து, பாபுவின் அன்புக்குரியவர், அச்சமற்றவர், துணிச்சலானவர், நீதியை விரும்புபவர் – இந்தியாவின் இந்திரா! பாட்டி, தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான உங்கள் தியாகம், பொது சேவையின் பாதையில் நம் அனைவரையும் எப்போதும் ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்