போர்களால் உலகளாவிய தெற்கு நாடுகள் உணவு, எரிபொருள், உரம் நெருக்கடியால் பாதிப்பு- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவியை பிரேசில் வகித்து வருகிறது. பிரேசில் நாட்டில் ஜி20 மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. சமூக உள்ளடக்கம் மற்றும் பட்டினி, வறுமைக்கு எதிரான போராட்டம் என்ற தலைப்பில் நடப்பு ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றுகிறது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

போர்களால் உலகின் தெற்கு நாடுகள் (Global South) உணவு, எரிபொருள், உரம் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, உலகின் தெற்கு நாடுகளின் சவால்கள் மற்றும் முன்னுரிமைகளை மனதில் கொள்ளும்போதுதான் நமது விவாதங்கள் வெற்றிபெற முடியும். டெல்லி உச்சிமாநாட்டின் போது ஆப்பிரிக்க யூனியனுக்கு G20-ன் நிரந்தர பிரதிநிதி அந்தஸ்தை வழங்கியதன் மூலம் உலகின் தெற்குப் பகுதியின் குரலை வலுப்படுத்தியதுபோல், உலகளாவிய நிர்வாக அமைப்புகளை சீர்திருத்துவோம்.

இவ்வாறு பிரதம் மோடி கூறினார்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி மாநாட்டிற்கிடையே பிரான்ஸ் அதிபர் மற்றும் இங்கிலாந்து, இந்தோனேசியா, போர்ச்சுக்கல், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடு பிரதமர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

Related posts

Leave a Comment