பணி ஆணையை வழங்கினார் முதலமைச்சர் ரங்கசாமி.

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் கீழ் நேரடி நியமனத்திற்காக 27.08.2023 அன்று இள நிலைஎழுத்தர் பதவிக்கான எழுத்துத்தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 157 பேர்களில், இதுவரை 151 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இவர்களில் 131 நபர்கள் பணியில் சேர்ந்து உள்ளனர். மீதமுள்ள காலிப்பணியிடங்களுக்கு, காத்திருப்போர் பட்டியலிலிருந்து 19 நபர்களுக்கு (10-ஆண்கள், 9-பெண்கள்) பணி ஆணைகளை, முதலமைச்சர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் வழங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம். வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் இந்நிகழ்ச்சியின்போது உடனிருந்தனர்.

Related posts

Leave a Comment