மாநிலங்களவையும் அமளியால் முடக்கம்.. முடிவுக்கு வந்தது குளிர்கால கூட்டத்தொடர்

பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, “எதிர்க்கட்சிக ளுக்கு அம்பேத்கர் பெ யரை தொடர்ந்து பல முறை முழக்கம் இடுவது வாடிக்கையாக இருக்கி றது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்ச ரித்தால் அவர்களுக்கு சொர்க்கத் தில் இடம் கிடைத்து இருக்கும்” என்று கூறினார்.

இதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அம்பேத்கரை அமித்ஷா அவமரியாதை செய்து விட்டதாக கூறி குற்றம் சாட்டினார்கள். இதற்காக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பேத்கரை காங்கிரஸ் கட்சிதான் இழிவுப்படுத்தி இருப்பதாக ஆவண ஆதா ரங்களுடன் பா.ஜ.க. தலை வர்கள் தகவல்களை வெளியிட்டனர். இதையடுத்து அம்பேத்கர் தொடர்பான பேச்சு மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

நேற்று பாராளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. எம்.பி.க்களும், இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் போட்டி போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட் டத்தை முடித்து விட்டு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத் துக்குள் செல்ல வந்தபோது அங்கு நுழைவுவாயில் பகுதியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பா.ஜ.க. எம்.பி.க்களுடன் தள்ளுமுள்ளில் ஈடுபட நேரிட்டது.

இந்த மோதலில் பா.ஜ.க. எம்.பி.க்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து தள்ளுமுள்ளுவுக்கு ராகுல்தான் காரணம் என்று பா.ஜ.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். இது தொடர்பாக பாராளுமன்ற வளாக போலீஸ் நிலையத் தில் ராகுல் மீது புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் 5 பிரிவுகளில் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்துள்ள னர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினரும் பாராளுமன்ற வளாக போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. எம்.பி.க்களும், இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். பா.ஜ.க. எம்.பி.க்கள் காந்தி சிலை முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அவர்கள் ராகுல்காந்தியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். ராகுல் காந்தியை பாராளுமன்றத் தில் இருந்து சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

இதற்கிடையே இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் விஜய்சவுக் பகுதியில் இருந்து பாராளுமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அவர்கள் அமித்ஷாவை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். அமித்ஷா மத்திய மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் ஊர்வலத்துக்கு பிரியங்கா தலைமையேற்று நடத்தி வந்தார். 2-வது நாளாக பாராளுமன்ற வளாகத்தில் பாஜக-இந்தியா கூட்டணி போட்டி போராட்டம் நடத்தியதால் இன்று காலை 10.30 மணியில் இருந்து பாராளுமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

இதற்கிடையே பாராளுமன்ற அலுவல்களை இன்று ஒத்திவைத்து விட்டு அம்பேத்கர் விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று மேல்சபை துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஒரேநாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு குழுவுக்கு அனுப்புவது தொடர்பான தீர்மானத்தை இன்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு நிறை வேற்றியது.

அந்த கூட்டுக்குழுவில் அனைத்துக்கட்சிகளைச் சேர்ந்த 39 எம்.பி.க்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். இந்த நிலையில் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று பாராளுமன்றத்தில் மக்களவையில் எம்பிக்கள் அமளியால் முதலில் மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் முடங்கியது. இதனால், அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

இதனால் பாராளுமன்ற கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் நிறைவு பெற்றது.

Related posts

Leave a Comment