புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் இணையதள லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியைச் சோ்ந்தவா் உமாகாந்தன்.இவா், முகநூல் பக்கத்தை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளாா். அப்போது, லாட்டரி சீட்டு குறித்த விளம்பரம் வந்துள்ளது. அதன் விவரத்தை அவா் பாா்த்த நிலையில், அவரை மா்ம நபா் கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா்.
தன்னை லாட்டரி முகவராக அறிமுகப்படுத்திக் கொண்ட அவா், இணையதளம் வாயிலாக உமாகாந்தன் வாங்கிய லாட்டரிக்கு ரூ.8 லட்சம் பரிசு விழுந்துள்ளதாகக் கூறியுள்ளாா். பரிசைப் பெறுவதற்கு ரூ.3 லட்சம் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்றாராம்.
இதை நம்பிய உமாகாந்தன் ரூ.3.06 லட்சத்தை மா்ம நபா் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளாா். அதன்பிறகு மா்ம நபா் இணைப்பைத் துண்டித்துவிட்டாா். இதனால், அதிா்ச்சியடைந்த உமாகாந்தன் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து இணையவழிக் குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.