சிங்கார வேலர் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி சபாநாயா மாலையணிவிப்பு

சிந்தனை சிற்பி சிங்காரவேலன் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அவருடைய திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

சிந்தனை சிற்பி சிங்காரவேலன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் இன்று கொண்டாடப்பட்டது புதுச்சேரி, கடலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார் உடன் சட்டமன்ற தலைவர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார்,
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமன்,திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் எதிர்கட்சி தலைவர் சிவா,முன்னாள் அமைச்சர் எஸ்,பி,சிவகுமார், சட்டமன்ற உறுப்பினர் அனிபால்கென்னடி, கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் சலிம், விசுவநாதன், நாராகலைநாதன், பாரதிய ஜனதா கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார்,ரிச்சர்ட் ஜான்குமார், கல்யாண சுந்தரம், மற்றும் மீனவ விடுதலை வேங்கையின் தலைவர் மங்கையர்செல்வன்,
மற்றும் அனைத்து மீனவ கிராம மக்கள் கலந்து கொண்டு சிங்காரவேலன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

Related posts

Leave a Comment