விவசாயிகளால் தான் இந்த மண்ணும் மக்களும் மகிழ்ச்சியாக மன நிறைவோடு இருக்கிறார்கள்-தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்பேச்சு

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வேளாண் உழவர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தும், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

டெல்டா பாசனத்ததுக்கான தண்ணீரை நாளை மேட்டூர் அணையில் இருந்து திறந்து நான் வைப்பதற்கு முன், இன்று மேற்கு மண்டல வேளாண் குடி மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம் வேளாண் துறையினர் ஈரோட்டில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக முதலில் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த பிரமாண்ட கண்காட்சி அரங்கை பார்வையிட்டபோது என் மகனதில் அளவில்லாத மகிழ்ச்சி உண்டாகியது. அதற்காக எனது வணக்கத்தையும் நன்றியும் தெரிவிக்க விரும்புகிறேன். விவசாயிகளால் தான் இந்த மண்ணும் மக்களும் மகிழ்ச்சியாக மன நிறைவோடு இருக்கிறார்கள்

தமிழ்நாட்டின் வேளாண் துறை மக்கள் எல்லோரும் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இந்த ஈரோட்டில் ஈர மனதுடன் தெரிவித்து கொள்கிறேன்.

கண்காட்சி, கருத்தரங்கை நடத்துவற்கு ஈரோடு மாவட்டத்தை ஏன் தேர்ந்து எடுத்தார்கள் என்றால் ஈரோடு வேளாண்மையில் வளர்ச்சிப்பெற்ற பல முன்னோடி விவசாயிகளை கொண்ட மாவட்டம்.

குறிப்பாக சொல்ல வேண்டும் வேளாண் உற்பத்தியில் மாநிலத்தில் 8-வது இடம்.

வேளாண் துறைக்கு என நிதி நிலை ஒதுக்கீடு செய்துள்ளோம். அதன் பயன்களை எடுத்து சொல்ல வேண்டும் என்றால் 4 நான்கு ஆண்டுகளில் 488 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து சாதனைப்படைத்து உள்ளோம்.

கூட்டுறவு துறையின் மூலம் 81 லட்சம் விவசாயிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 லட்சம் வேளாண் மின் இணைப்பு கொடுக்கு இலக்கு நிர்ணியக்கப்பட்டு 1 லட்சத்து 84 ஆயிரம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச மின்சாரத்துக்கு 26 ஆயிரத்து 223 கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம்.

தமிழ்நாட்டில் சிலர்தோளில் துண்டுப்போட்டு கொண்டு ஏமாற்றுகிறார்கள். விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் நாங்கள் தான் கேள்வி கேட்போம்.

விவசாயிகளுக்கு அவர்கள் துரோகம் செய்தனர். 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடியபோது அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதனால் தேர்லில் அவர்கள் தோற்கப்பட்டனர். தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

Leave a Comment