தர்மாபுரி ஸ்ரீ அங்காளம்மன்ஆலய திருப்பணிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடைஎதிர்கட்சித் தலைவர் சிவா முன்னிலையில் வழங்கப்பட்டது

புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட தருமாபுரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு இந்திராநகர் திமுக பிரமுகர் பசுபிக் சங்கர் ஆலய திருப்பணிக்கு ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையை, மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான . சிவா முன்னிலையில்‌ வழங்கினார்‌. தொடர்ந்து ஆலய‌ திருப்பணிகளை பார்வையிட்டார்.

தொகுதி செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஊர் முக்கியஸ்தர்கள் ஆலய அறங்காவலர் குழு தலைவர் முருகன், நிர்வாகிகள் தன்ராஜ், சரவணன், ரகு, குமரன் மற்றும் திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர்கள் வடிவேலு, சக்திவேல், தியாகராஜன், நிர்வாகிகள் ஆறுமுகம், பிரபு, சுப்பிரமணியன், செல்லதுரை, தேவநாதன், பாலு, பாஸ்கர், பூபாலன், ஜெகதீஷ், கோதண்டம், ராஜா, ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

Leave a Comment