தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனா. இவர் 45 ஆண்டு காலம் சினிமாவில் பயணித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.
இவரது கணவர் உடல்நலக்குறைவால் கடந்த 2022-ம் ஆண்டு உயிரிழந்தார். மீனாவுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. நைனிகா விஜயுடன் ‘தெறி’ படத்தில் நடித்து உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள மீனா பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட மீனா குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக மத்திய அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள மீனாவுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

குஷ்பு, சரத்குமார், ராதிகா வரிசையில் தற்போது மீனாவும் பா.ஜ.க.வில் இணைகிறாரா? என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்துள்ளது.
……………………………………………………