மணவெளி தொகுதி ஆண்டியார் கிராமத்தில் எழுந்தருளியுள்ள உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ வீரன் ஆலயம் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் செய்வதற்கான பூமி பூஜை இன்று காலை கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக பூமி பூஜையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.