புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா ஐவர் கால்பந்து விளையாட்டுப் போட்டி உப்பளம் இந்திரகாந்தி விளையாட்டு அரங்கில் நேற்றும் இன்றும் நடைபெற்றது.
மாாில இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் ரோ. நித்திஷ் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், புதுச்சேரி, கேரளா, தமிழகத்தின் சென்னை, தின்டிவனம், கடலூர், எண்டியூர், கோவளம், சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 52 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் முதல் இடத்தை கோரிமேடு பிளே மேக்கர்ஸ் அணியும், திமுக அணி இரண்டாம் இடத்தையும், பிளே மேக்கர்ஸ்–3 அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.
கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்ருபு விழா இன்று மாலை 7.00 மணியளவில் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நடந்தது.
இந்த விழாவிற்கு, மாநில கழக அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தலைமை தாங்கினார்.
மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூ. மூர்த்தி வரவேற்று பேசினார்.
விழாவில், கழக கொள்கைப் பரப்புச் செயலாளர், முன்னாள் துணைவேந்தர் முனைவர் சபாபதிமோகன் அவர்கள் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்த அணிக்கு ரூ. 25 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ. 15 ஆயிரம், மூன்றாமிடம் பிடித்த அணிக்கு ரூ. 10 ஆயிரம் மற்றும் கேடயம், சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
கால்பந்து விளையாட்டுப் போட்டியை மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் தாமரைக்கண்ணன், ரெமிஎட்வின், தமிழ்ப்பிரியன், உத்தரம், பஜிலுதீன், மாநில அயலக அணி துணை அமைப்பாளர் சிவா, உப்பளம் தொகுதி துணைச் செயலாளர் ஆரோக்கியராஜ், நிர்வாகிகள் ராஜா, ராஜி, ரமேஷ், கல்யாணசுந்தரம், சுரேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், ஏ. கே. குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.எம்.பி. லோகையன், டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.கோபால், வே. கார்த்திகேயன், மு. பிரபாகரன், ராமசாமி, செல்வராதன், பழநி, டாக்டர் மாயக்கிருஷ்ணன், அமுதாகுமார், நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், செ. நடராஜன், கோ. தியாகராஜன் என்கிற ராஜா, கலியகார்த்திகேயன், சீத்தாராமன், ராஜாராம், ராதாகிருஷ்ணன், அணிகளின் அமைப்பாளர்கள் எஸ்.பி. மணிமாறன், முகம்மது ஹாலிது, வீரய்யன், காயத்ரி ஸ்ரீகாந்த், அருண்குமார், முகிலன், மாநில துணை அமைப்பாளர்கள் காளி, கலிமுல்லா, சந்தோஷ்குமார், எமில், தேவேந்திரன் உருளையன்பேட்டை தொகுதி பொருளாளர் சசிகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.