பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி இன்று பதவியேற்றார்.
மேலும் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்பட பலர் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான எல்.முருகன் மத்திய இணை மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். இவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி