ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு 3 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில், புனித தலத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இதில், 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ரஜோரி, பூஞ்ச் மற்றும் ரியாசியின் மேற்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதக் குழு என தெரியவந்துள்ளது.

Related posts

Leave a Comment