புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை

அங்கன்வாடி ஊழியருக்கு ஐந்து மாத சம்பளமும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு 10 மாத தொகுப்பூதியம் நிலுவையில் உள்ளது.

அங்கன்வாடி மையங்களுக்கு இந்த வருடத்திற்கான அனுமதி ஆணை உணவுப் பொருட்கள் மற்றும் சத்துணவு பெறுவதற்கான அனுமதி ஆணை இன்னும் சப்ளையர்களுக்கு வழங்கப்படவில்லை.

டெண்டர்களை தடையின்றி கோர தடையாய் இருக்கிற கோர்ட் உத்தரவுகளை விளக்கிக் கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன.

அங்கன்வாடி பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய விடுமுறை சத்துணவு இன்னும் ஆறு மாத காலத்திற்கு உண்டானது வழங்கப்படவில்லை அதற்குண்டான காரணங்கள் என்ன.

நிலுவையில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பணி நியமன நடவடிக்கைகள் தற்போது எந்த நிலையில் உள்ளன.

ஆதிதிராவிட நலத்துறையில் உள்ளது போல் ஈமச்சடங்கு நிவாரண நிதி உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

சிஎம் கேர் என்ற திட்டத்தின் கீழ் இதனால் வரையில் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எடுத்து நடவடிக்கைகள் என்ன ரூபாய் 50000 உதவித்தொகை வழங்கக்கூடிய திட்டம் நிறைவேற்றப்பட ஆவண செய்ய வேண்டும்.

நிலுவையில் உள்ள பல்வேறு நீதிமன்ற வழக்குகள் அதனுடைய தற்போதைய நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.

கொரோனா காலத்தில் தங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்திலே கொடுத்த வாக்குறுதியின் படி அவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண நிதி திட்டம் என்ன நிலையில் உள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் பெண்கள் ஆணையம் பணி மற்றும் இத்தட்டி தன் மூலம் பயனடைந்த பயனாளிகள் எத்தனை பேர் செலவிடப்பட்ட நீதி எவ்வளவு போஸ்கோ வழக்குகள் மற்றும் அதனுடைய தற்போதைய நிலை என்ன என்பது பற்றிய விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மகளிர் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளன.

முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் தற்போது புதிய தாக வந்துள்ள விண்ணப்பங்கள் எண்ணிக்கை எவ்வளவு தற்போதைய நிலை என்ன. சமூகநலத்துறை நல அதிகாரியின் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன. அதேபோன்று அதே போன்று நல அதிகாரி பதவியில் இருந்து உதவி இயக்குனர் பதவிக்கு பதவி உயர்வு தர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன. (RECALL THE DEPUTATION WELFARE OFFICERS).

போர்வை மற்றும் காலணிகள் வழங்குவதற்கு பயனாளிகளின் வயது உச்சவருமை தளர்த்துவது குறித்தும் அதன் மூலம் கூடுதலான பயனாளிகளை திட்டத்திற்குள் இணைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தது தற்போது விளக்கிக் கொண்ட பிறகு அளிக்கப்பட வேண்டிய திட்ட பயன்கள் சப்ளை ஆர்டர்கள் செலவின அனுமதிகள் அனைத்தும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

புதிய திட்டப் பணிகள் மாணவர்களுக்கான உதவித்தொகைகள் உள்ளிட்ட பயன்கள் இந்த நடப்பு நிதியாண்டில் (2024-2025) செய்ய வேண்டிய அனைத்து பணிகளும் தகுந்த காலத்திற்குள் செய்து முடிக்கப்பட வேண்டும். உள்ளிட்ட ஆலோசனைகள் நடந்தது.

Related posts

Leave a Comment