கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.

இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட கருணாபுரம் கிராமத்திற்கும் உதயநிதி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள உடல்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்களுக்கு ரூ.10 லட்சம் காசோலையை வழங்கினார்.

Related posts

Leave a Comment