கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில், வர்த்தக மற்றும் தொழில் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் இதற்கான முதற்கட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வரைபடத் தயாரிப்பு மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கு ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரியுள்ளது. இதன் மூலமாக அங்கு ஐடி துறையில் தலா 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: தமிழ்நாடு
திராவிட இயக்கத்தின் 3வது குழல் விசிக- காஞ்சிபுரம் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேச்சு
காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக பவள விழா பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், “திராவிட கட்சியின் மூன்றாவது குழல்தான் விசிக என ஒருமுறை கருணாநிதி முன்னிலையில் கீ.வீரமணி குறிப்பிட்டார். அந்த வகையில் மூன்றாவது குழலாக நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். இந்திய அளவில் அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் வழிகாட்டும் பேரியக்கம் திமுக. அதிகாரத்தை நோக்கி இயங்கும் சராசரி அரசியல் கட்சி அல்ல. அதனால் தான் 75 ஆண்டுகளாக அதே வீரியத்துடன் வீறு கொண்டு வெற்றி நடை போடும் இயக்கமாக 6-வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. சமூக நீதி இயக்கமாக திமுக செயல்படுகிறது. பெரியார் வழியில் அறிஞர் அண்ணா மதராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினார். இருமொழிக் கொள்கையை உறுதிப்படுத்தினார் அண்ணா. இந்தி திணிப்பை எதிர்த்தார் கருணாநிதி. தேசிய கல்விக் கொள்கையின்…
அண்ணா நினைவு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். அங்கு, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு, ” மாநில உரிமைகளை பெற அண்ணா, கலைஞர் வழியில் அயராது உழைப்போம்” என அண்ணா நினைவு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு” – முதல்வர் ஸ்டாலின் தகவல்
இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழகம்தான் முதல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில், திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். 31 லட்சம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.28) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில். 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழகம்தான் முதல்…
மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமர் மோடியிடம்தான் உள்ளது-தமிழக முதல்வர் ஸ்டாலின் பேட்டி
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சாணக்கியாபுரத்தில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். இன்று காலையில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சென்று சந்தித்தார். பிரதமருக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டார். அதன் பிறகு பிரதமருடன் அமர்ந்து பேசினார். தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பரிசளித்தார். பிரதமர் மோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழைநார் கூடை, பனை ஓலை பெட்டியை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி இன்னும் கிடைக்காததை சுட்டிக்காட்டினார். மத்திய அரசின் நிதியை விடுவிக்க…
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமின் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி…
மது அருந்தியவர்கள் மாநாட்டுக்கு வரக் கூடாது: தவெக தலைவர் விஜய் அதிரடி உத்தரவு
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் பற்றி விஜய், கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். மாநாட்டு பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில் மாநாட்டில் பங்கேற்க வரும் போது மேற்கொள்ளக் கூடிய பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி தொண்டர்களுக்கு கட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:- மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நாகரீகமான முறையில் வரவேண்டும். எந்த வகையிலும் நமது கட்சி தலைவர் விஜய் மீதுள்ள மரியாதை குறையாத வண்ணம் தொண்டர்களும் நிர்வாகிகளும் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மாநாட்டுக்கு பெண்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். அவர்களது பாதுகாப்பை மாவட்ட…
சென்னையில் இயங்கும் அனுமதியின்றி செயல்படும் கன்சல்டன்சிகள்- போலீசார் அதிரடி சோதனை
சென்னையில் 10க்கும் மேற்பட்ட சட்டவிரோத கன்சல்டன்சி தொடர்பான இடங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உரிய அனுமதியின்றி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக நடத்தப்படும் கன்சல்டன்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 70க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத கன்சல்சிக்கு தொடர்புடையவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் சுற்றித்திரிந்த வங்கதேச நாட்டினர் உரிய ஆவணங்கள் இல்லாததால் சிறையில் அடைப்பு
வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் தங்கி பணியாற்றுவது அதிகரித்து வருகிறது. அவ்வாறு பதுங்கி இருப்பவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றனர். இந்தநிலையில் திருப்பூர் தெற்கு போலீசார் மற்றும் அதிவிரைவுப்படையினர் திருப்பூர் மத்திய பஸ் நிலைய பகுதியில் சுற்றித்திரிந்த வெளிமாநில தொழிலாளர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக வந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை. விசாரணையில் அவர்கள் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவர்கள் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்கு வடமாநில தொழிலாளர்கள் போல் வேலைக்கு வந்துள்ளனர். அந்த நிறுவனத்தில் வேலை செய்தபோது, பனியன் நிறுவன…
தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் துளியும் இல்லை.. சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர் கூறியதாவது:- தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் என்பது துளியும் இல்லை. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் அல்ல. விமர்சனங்களை பார்த்து பழகியவர் அல்ல. தந்தையின் நிழலில் வளர்ந்தவர் தான். பணியில் ஒருவர் இறந்தால் கருணை அடிப்படையில் வழங்குவது போல தான் தி.மு.க. தலைவர் ஆகியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதுபோலத்தான் தமிழகத்தில் முதல்வராகவும் ஆகியிருக்கிறார். உண்மைகளை சவுக்கு மீடியா ஏறக்குறைய 8 மாதங்கள் எடுத்துக் கூறியதன் காரணமாக தான் சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடக்கும் உண்மைகள் எந்த வகையில் வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் மற்றும் அவரது…
