காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மருத்துவக் கல்லூரியின் 5வது மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.மாணவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மருத்துவக் கல்லூரி முன்பு குவிந்துள்ள மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மருத்துவக் கல்லூரியில் 5ம் ஆண்டு பயன்று வந்த மாணவி, தற்கொலை செய்துக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
Category: தமிழ்நாடு
அமெரிக்காவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 400 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி இரவு அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றார். அந்த வகையில் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் 400 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அனைத்து மாவட்டங்களில் இருக்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதிப்படுத்தவும் தமிழக அரசு தொடர்ச்சியாக இத்தகைய பயணங்களை 4-வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுஇருக்கிறார். அமெரிக்காவில் மின்பொருள் மற்றும் கனரக தொழிற்சாலைகளுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பார்முலா 4 கார் பந்தயம்- முக்கிய போட்டிகள் தொடங்கியது
சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. எப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் நேற்று கால தாமதம் ஆன நிலையில், பார்முலா 4 பந்தயம் நேற்று இரவு 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. நேற்று பயிற்சி போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் பார்முலா 4 கார் பந்தயத்தின் முக்கிய போட்டிகள் தொடங்கியது. போட்டிகளை ஆர்வமாக திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டு கண்டுகளிக்கின்றனர். நடிகர்கள் நாக சைதன்யா, ஜான் ஆபிரகாம், நடிகர் திரிஷா உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
பூலித்தேவரின் வரலாற்றை தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுதந்திரப் போராட்ட வீரர் புலித்தேவரின் 309-வது பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-ஆங்கிலேய ஆட்சியை வேரறக் களையப் போர்க்கொடி உயர்த்திய பூலித்தேவரின் 309-வது பிறந்தநாள்!மண்ணின் மானம் காக்க வாழ்ந்த வீரம் செறிந்த அவரது வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்! இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
வியப்பூட்டும் அனுபவம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்குச் சென்று பார்வையிட்டது வியப்பூட்டும் அனுபவமாக அமைந்தது. பல்வேறு வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் பற்றி கலந்துரையாடினோம். இந்தக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்த உறுதிபூண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ராமேசுவரம் மீனவர்கள் 2 பேருக்கு சிறை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு- தமிழக மீனவர்கள் அதிர்ச்சி
ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஜூன் மாதம் 22ஆம் தேதி அன்று மீன் பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை அடித்து விரட்டினர். மேலும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். ரோந்து கப்பலை வைத்து படகுகளில் மோதச் செய்தனர். இதில் படகு உடைந்தது. இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் ராமேசுவரம் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த ஈசாக் ராபின், செல்வகுமார் ஆகியோரின் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வந்திருந்த சகாய ராபர்ட்(வயது49), ராதா (44), முத்துராமலிங்கம் (51), யாக்கோபு (24), ஹரிகிருஷ் ணன் (50), இவரது மகன்கள் பொன்ராமதாஸ்(26), ராம்குமார்(24) மற்றும் லிபின்ராஜ் உள்பட…
சென்னை பார்முலா கார் பந்தயம் பொதுமக்ககளுக்கு கடும் கட்டுபாடுகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையில் பார்முலா கார் பந்தயம் வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை பார்வையிட வருவோர் பிறருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்தப் பொருளும் அரங்குக்குள் எடுத்து வரக்கூடாது. அப்படி எடுத்து வந்தால் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்படும். அவை திரும்பத் தரப்பட மாட்டாது. கூர்மையான பொருட்களான பிளேடுகள், கத்திகள், கத்திரிக்கோல் ஆயுதங்கள், பாக்கெட் கத்திகள் மற்றும் பெப்பர் ஸ்பிரே, பெரிய சங்கிலிகள், ஆயுதங்கள்-துப்பாக்கிகள், சுவிஸ் ராணுவ கத்திகள் போன்றவற்றை கொண்டு வரக்கூடாது. மேலும் லேசர்ஸ்-லேசர் லைட்டுகள், விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள், ஒலி அமைப்புகள் – ஏர் ஹார்ன்கள், விசில் போன்ற சத்தம் எழுப்பக்கூடிய பொருட்கள், மெகா போன்கள், இசைக்கருவிகள், போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் ஆகியவற்றை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.…
அமெரிக்கா சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 19 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 27-ந்தேதி இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்கா சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கலிபோர்னியாவில் வாழும் தமிழர்கள் விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ்- 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? மத்திய அரசுக்கு உயர்நீதி மன்றம் சரமாரி கேள்வி
மதுரையை சேர்ந்த பாஸ்கர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதால், ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களின் வாழ்க்கை தரம் உயர உதவியாக இருக்கும். தென் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் சிறந்த மருத்துவ வசதியை பெறவும் வாய்ப்பாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தாலும் 2018 ஆம் ஆண்டு தான் மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. பிரதமர் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். இருப்பினும் இன்னமும் கட்டுமான பணிகள் நடைபெறாமல், நீண்ட காலமாக கிடப்பிலேயே உள்ளது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இதுவரை கட்டுமான பணிகளை…
சென்னையில் 55 முக்கிய சந்திப்புகளில் நவீன சிக்னல்சென்சார் மூலம் கண்காணிப்பு
சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகி வரும் மக்கள் நெருக்கமும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது. மெட்ரோ ரெயில், புதிய மேம்பாலம் போன்றவற்றின் மூலம் இதனை தீர்க்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் போக்குவரத்து நெரிசல் என்பது சென்னை மக்களோடு இணைந்த ஒரு செயலாகவே மாறிவிட்டது. போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்தி நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரின் முக்கியமான சாலைகளில் தினமும் சிக்னலில் வாகன ஓட்டிகள் காத்து நிற்பதன் மூலமும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சிக்னல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதற்கு தீர்வு காண திட்டமிட்டுள்ளனர். சென்னையில் முக்கிய சாலைகளில் உள்ள 55 சந்திப்புகளில் “அடாப்டிவ்” சிக்னல்களை நிறுவி வருகிறார்கள். இது பழைய பாரம்பரிய சிக்னல்களை போல் அல்லாமல் தற்போதைய…
