உதகை இத்தலாரில் மழை பாதித்த பகுதிகளில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு

உதகை அருகே உள்ள இத்தலாரில் மழையால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன், பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக கூறினார். நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம் இத்தலார் ஊராட்சி ஹட்டி பகுதியில் தென்மேற்கு பருவ மழையால் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமசந்திரன், “தென்மேற்கு பருவ மழை நீலகிரி மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ளது. மழையால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. மீட்பு பணிகளுக்காக 3 மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இத்தலார் ஹட்டி பகுதியில் சுமார் 20 மீட்டருக்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண் அருகில்…

தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே- அவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்: நீதிபதி கருத்து

ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் வக்கீல் தீரன் திருமுருகன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகம் மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்குமான பிரச்சனை அதிகரித்து வருகிறது. ஜூன் 2-ம் வாரத்தில் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஜூன் 23-ந்தேதி நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்தனர். கடந்த 1-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் குற்றவாளிகள் போல கைது செய்வதோடு, கிருமி நாசினியை அவர்கள் மீது தெளித்து மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2021-ல் குஜராத்தை சேர்ந்த மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்கப்பட்டபோது மத்திய அரசு, பாகிஸ்தான்…

டெல்லியில் வரும் 24-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 24-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர், டெல்லியில் நடக்கும் கூட்டத்திற்கு வருமாறு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசு அதிகாரிக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு கர்நாடக மாநில அணைகளில் இருந்து தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், கர்நாடக அரசு அதை நடைமுறைப்படுத்த வில்லை. இதனால் கர்நாடக மாநில அரசுக்கு எதிராக அனைத்து தமிழக சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசு வழக்கு தொடர உள்ளது. இந்த…

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அல்லி இந்த வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஒரு மனுவில் வங்கிகள் அளித்துள்ள ஆவணங்களுக்கும், அமலாக்கதுறை வழங்கிய ஆவணங்களுக்கும் இடையில் வேறுபாடு இருப்பதாக தெரிவித்திருந்தது. அமலாக்கத்துறை வழங்கியுள்ள ஆவணங்களில் கையால் எழுதி திருத்தப்பட்டுள்ளது. மேலும், தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி ஆராய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொரு மனுவில் சட்ட விரோத…

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ஹரிஹரன் த.மா.கா.-வில் இருந்து நீக்கம்-ஜி.கே.வாசன் அறிவிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ஹரிஹரனை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஹரிஹரன் ஏற்கனவே தமாகா மாநில மாணவரணி துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நிலையில் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்க்கொடி சேகர் அதிமுக-விலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்தார் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த ஏழுமலை – நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மலர்க்கொடி அதிமுக-வில் இருந்து நீக்கம்- எடப்பாடி அறிவிப்பு

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அ.தி.மு.க. இணை செயலாளர் மலர் கொடி கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம், திருவல்லிக்கேணி மேற்கு பகுதி கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த மலர்கொடி சேகர் ( திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர்)…

கடல் கண்டு, மலை கண்டு, களங்கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க..! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ!

: தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு என பெயர் சூட்டும் தீர்மானத்தில் முன்னாள் முதல்வர் அண்ணா சட்டசபையில் பேசியதை சமூக வலைதளத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை, தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சங்கரலிங்கனார் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி உயிர்நீத்தார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 1957-ல் கொண்டுவ ந்த தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அதைத்தொடர்ந்து, 1961 ஆம் ஆண்டிலும், 1963-ஆம் ஆண்டிலும் இதுதொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களும் தோல்வி கண்டன.1967ல் திமுக முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு தான் இதற்கு ஒரு தீர்வு ஏற்பட்டது. பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சரானதும் சென்னை மாகாணம் (மெட்ராஸ் ஸ்டேட்)…

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாணயம் விலை ரூ.2,500-மத்திய நிதித்துறை அதிகாரி தகவல்

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரான ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது. இதற்காக ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதி அமைச்சகத்திடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வருடம் கோரிக்கை வைத்தார். இந்த நாணயத்தை தயாரித்து வெளியிட மத்திய அரசு அனுமதி அளித்து கடந்த 12-ஆம் தேதி அதை மத்திய அரசிதழிலும் வெளியிட்டது. ரூ.100 மதிப்புள்ள நினைவு நாணயம், அதன் அமைப்பு, உள்ளடக்கம் விலை ஆகியவை குறித்து இப்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நாணயத்தின் ஒரு பக்கம் சிங்கத்தின் தலையுடன் கூடிய அசோகதூண், சத்யமேவ ஜெயதே, பாரத் ஆகிய வார்த்தைகள் தேவநாகரி எழுத்திலும் இந்தியா என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கம் நாணயத்தின் மையத்தில் கலைஞர் எம்.கருணாநிதி உருவப்படமும், கீழே அவர்…

சென்னை அருகே துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது

சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் துப்பாக்கி முனையில் ரவுடி சேதுபதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்குன்றம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சேது என்கிற சேதுபதி, பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஆவடி ஆணையரகத்தின் அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் உடனடியாக செங்குன்றம் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு தனது கூட்டாளியுடன் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சேதுபதியை போலீசார் கைது செய்தனர். போலீசார் வந்ததை அறிந்த ரவுடி சேதுபதி ஆயுதங்களை பயன்படுத்தி தப்பிக்க முயன்றதாகவும், அப்போது போலீசார் துப்பாக்கி முனையில் சேதுபதியை கைது செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சேதுபதியிடம் இருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சேதுபதியை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து…

காவிரி நீர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூடியது அனைத்துகட்சி கூட்டம்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செயலர் மணிவாசகம், சட்டதுறை வல்லுநர்கள், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் எம்.பி., அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் கு.செல்வபெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே.மணி, சதாசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராமச்சந்திரன், மு.வீரபாண்டியன், விசிக சார்பில் தொல்.திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம்.எச்ஜாவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தி.வேல்முருகன், கொமதேக சார்பில் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.காவிரி விவகாரம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 16) காலை தொடங்கியது. காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தபடி தமிழகத்துக்கு…