இன்று மத்திய அரசு நடைமுறை படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், “இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது , முக்கியமாக சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல மற்றும் மிகுந்த கண்டனத்திற்குரியதும் கூட, அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு. இந்தி திணிப்பாணது பல மொழிகள் – பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது, இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து…
Category: தமிழ்நாடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடர வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடியில் கடந்த ஆட்சிக் காலத்தில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது. அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக, தலா ரூ. 5 லட்சம் வீதம், 65 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தேசிய மனித உரிமை ஆணையம் பின்னர்…
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவரது பெயரை சேர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என முழங்கியவர்கள், பிரதமரானவுடன் அதை எடுத்து வணங்கினார்கள்- மக்களவையில் ஆ.ராசா பேச்சு
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்களவையில் ஆ. ராசா பேசினார். அப்போது, எமர்ஜென்சி குறித்த பாஜக உறுப்பினர்களின் பேச்சுக்கு ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார். அப்போது அவர் உரையாற்றியதாவது:- 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக பெரும்பான்மை எப்படி என்று கூறமுடியும்.அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியதற்காக பலமுறை இந்திரா காந்தி மன்னிப்பு கேட்டார். அவசரநிலையை தற்போது பாஜக அரசின் செயல்பாட்டுடன் ஒப்பிட முடியாது. பாஜக அரசு நினைப்பதை அவர்களாக சொல்வதில்லை. குடியரசுத் தலைவர் சபாநாயகர் மூலம் சொல்கிறார்.8 முறை பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம். பாசிச கொள்கை உடைய பாஜக, எமர்ஜென்சி பற்றி பேச அருகதை இல்லை.நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்துக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் 40 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கி உள்ளனர்.திராவிட…
ஸ்பேஸ் பே (Space Bay) ஆக மாறும் தமிழக மாவட்டங்கள்
விண்வெளித்துறையில் புதுமைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு விண்வெளிக் கொள்கை 2024 உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கொள்கையின் கீழ் குலசேகரப்பட்டினத்தை சுற்றி உள்ள மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை ஸ்பேஸ் பே (Space Bay) ஆக ஊக்குவித்து வளர்ச்சியை விரைவுப்படுத்த முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நான்கு மாவட்டங்களில் வளர்ச்சியை விரைவுபடுத்த நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. விண்வெளித்துறையில் அதிகரிக்கும் வளர்ச்சி, சீர்திருத்தங்கள், முதலீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விண்வெளி கொள்கையை தமிழ் நாடு அரசு அறிமுகம் செய்கிறது. வலுவான தொழில்துறை, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளிட்டவற்றை முழுமையாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது. விண்வெளிக் கொள்கை தொடர்பாக தொழிற்துறையினர், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
திட்டங்களில் வீடுகளை பெற ஆதார் எண் கட்டாயம் தமிழக அரசு அரசாணை
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடுகளை பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நலத்திட்டம் பெறும் பயனாளிகள் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், திட்டத்தை செயல்படுத்தும் துறைகள், பயனாளி ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை செய்து கொடுக்கலாம். ஆதார் எண் பெறும் வரை, விண்ணப்பித்ததற்கான அடையாளச் சான்று, வங்கிப் புத்தகம், பான் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
‘Pride Month’: வானவில் வண்ணத்தில் ஒளிர்ந்த சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம்
LGBTQ+ மக்களுக்காக ஜூன் மாதத்தில் சர்வதேச Pride Month கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி இன்று சென்னையில் LGBTQ+ மக்களின் ‘வானவில் சுயமரியாதை’ பேரணி கோலாகலமாக நடைபெற்றது. இப்பேரணியில் கரகாட்டம், தப்பாட்டம் என மேளதாளம் முழங்க வண்ண வண்ண உடைகள் அணிந்து ஏராளமான LGBTQ+ மக்கள், அதன் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், சர்வதேச Pride Month-ஐ நினைவுகூரவும், பொதுமக்களுக்கு LGBTQ+ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் வானவில் வண்ணங்களில் ஒளிரவிடப்பட்டது.
விசிக சார்பில் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி மது ஒழிப்பு மாநாடு திருமாவளவன் அறிவிப்பு
மதுரை மேலவளவு படுகொலை 27-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. அரசு மதுபானங்கள் கள்ளச்சாராய மரணங்களுக்கு தீர்வல்ல. ஆகவே மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும். ஆகவே தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும். அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும் தடுக்க முடியும். கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்தில் முழு மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம். பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இது பெண்கள் மூலம் நடத்தப்படும். விரைவில் இடம் அறிவிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் உபா சட்டத்தின் கீழ் 2 பேரை என்ஐஏ கைது செய்தது
தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், சாலியமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான் மற்றும் அப்துல் ரகுமான் என்ற இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவர் மீது உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 153பி, 121ஏ, 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடமாடும் மருத்துவ கருவி மூலம் சட்டவிரோதமாக வயிற்றில் இருக்கும் சிசுவை கண்டறிந்த கும்பல் கைது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நெற்குந்தி கிராமத்தில் மர்மகும்பல் ஒன்று போலி மருத்துவத்தில் ஈடுபடுவதாய் சுகாதார மற்றும் ஊரக நலத்துறை இயக்குநர் மருத்துவர் சாந்தி என்பவருக்கு தகவல் வந்தது. சம்பந்தப்பட்ட நபர்களை ஊரக நலத்துறை இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி அதிரடியாக களத்தில் இறங்கி சுற்றி வளைத்தார். இந்நிலையில், வயிற்றில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என கண்டறிந்து சொல்வதாக குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன், நடமாடும் மருத்துவ கருவி மூலம் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லி வந்துள்ளார். ஒரு நபருக்கு 13 ஆயிரம் பெற்றுக் கொண்டு, நான்கு நபர்களுக்கு அவர் நடமாடும் கருவி மூலம் பரிசோதனை செய்து அறிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட முருகேசன் ஏற்கனவே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக கள்ளக்குறிச்சியில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.\
