ஓசூர் குற்றவியல் நீதிமன்றம் அருகே கண்ணன் என்ற வழக்கறிஞர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் ஜூனியர் வழக்கறிஞர் கண்ணனை பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கறிஞர் கண்ணன் நீதிமன்ற வளாகத்திலேயே அரிவாளால் வெட்டப்பட்டதை கண்டித்து நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Category: தமிழ்நாடு
பள்ளியில் குத்திக்கொலை செய்யப்பட்ட ஆசிரியை- பட்டுக்கோட்டையில் பரபரப்பு
பள்ளி ஆசிரியை ஒருவர் இன்று வகுப்பறைக்குள் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருதலைக்காதலால் இந்த விபரீத சம்பவம் நடந்து இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு:- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்துள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை கிராமத்தை சேர்ந்த ரமணி (வயது26) என்பவர் தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவரை அதே கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்தார். அவரது காதலை ஆசிரியை ரமணி ஏற்காமல் தனது பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். ஆசிரியை ரமணி வழக்கம்போல் இன்று (புதன் கிழமை) காலை வகுப்பறையில் பாடம்…
பாகன் நினைவில் 3-வது நாளாக சாப்பிடாத தெய்வானை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெய்வானை யானையை பராமரிக்க 3 பாகன்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பாகன் உதயகுமார் என்பவர் இருந்தார். அப்போது அவரது உறவினரான சிசுபாலன் என்பவர் யானை முன்பு வெகு நேரம் செல்பி எடுத்ததால் தெய்வானை யானை ஆத்திரமடைந்து சிசுபாலனை தாக்கியது. அப்போது பின்னால் இருந்து சிசுபாலனை காப்பாற்ற ஓடி வந்த உதயகுமாரை பாகன் என்று தெரியாமல் துதிக்கையால் தள்ளியது. இதில் 2 பேரும் உயிரிழந்தனர். பின்னர் உயிரிழந்தது பாகன் என்று தெரிந்ததும் யானை அவரை துதிக்கையாயால் தட்டி எழுப்பி உள்ளது. உதயகுமார் இறந்து விட்டார் என்று தெரிந்ததும் யானை மண்டியிட்டு அவரையே பார்த்துக் கொண்டே இருந்துள்ளது. மேலும் போலீசார் உதயகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுக்க முற்பட்ட போதும் எடுக்க விடாமல் தடுத்துள்ளது. அப்போது மற்ற பாகன்கள் ராதாகிருஷ்ணன், செந்தில்…
எல்.ஐ. சி இணையதளத்தில் இந்தி திணிப்பு- எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது. இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது. மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல. அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் மத்திய நிதிக்குழுவினர் ஆய்வு
டெல்லியில் இருந்து மத்திய அரசின் 16-வது நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில், செயலர் ரிவத்விக் பாண்டே, உறுப்பினர்கள் அன்னி ஜார்ஜ், அஜய் நாராயன்ஜா, மனோஜ் பாண்டே, அன்னி ஜார்ஜ் மேத்யு, சவும்யா கண்டி கோஷ், உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் 4 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளனர். அடுத்த 5 ஆண்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் வரி வருவாய் திட்டம் எப்படி இருக்க வேண்டும், எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும், என்பது தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் அதற்கான தரவுகளை ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று இந்த நிதிக்குழு சேகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் இயங்கிவரும் 15 கோடி லிட்டர் கொள்ளளவு, கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை குழுவினர் ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள், உற்பத்தி, பாது பயன்பாடு, வருவாய்…
எல்.ஐ.சி. வலைதளம் மூலம் இந்தி திணிப்பு – முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் .
எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் இந்தி மொழியில் மாறியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், வலைதளத்தின் மொழியை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. பலர் வலைதள மொழியை ஆங்கிலத்திற்கு மாற்ற முடியாததால் அவதியுற்றனர்பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.-யின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் ஆங்கிலம் மொழியை தேர்வு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாவதால் உடனடியாக சீர் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. எல்.ஐ.சி. வலைதளத்தின் முகப்பு பக்கம் இந்தி மொழியில் காட்சியளித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், “எல்.ஐ.சி. இணையதளம் இந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது!” “இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழி திணிப்பு தவிர வேறில்லை. எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது.…
தூத்துக்குடியில் தாசில்தார் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் ‘திடீர்’ ஆய்வு
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசின் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டத்திதில் கலந்து கொள்ள சென்றார். அப்போது டூவிபுரத்தில் உள்ள வருவாய் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று ‘திடீர்’ ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் சுப்பையா மற்றும் அதிகாரிகளிடம், பொதுமக்கள் அளிக்கும் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது என்று கூறினார்.தொடர்ந்து அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் பொதுமக்கள் அளிக்கும் பட்டா விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதனை முடித்து வெளியே வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சாலையில் திரண்டிருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.…
புதிய கட்சிகள் விசிகவுக்கு போட்டியாக வர முடியாது: தொல்.திருமாவளவன்
புதிய கட்சிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாக வர முடியாது என்று, அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் அவா் பேசியதாவது: கட்சியின் கொடியை ஏற்றுவது என்பதே நமக்கு யுத்தமாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொடிக் கம்பத்தை ஊன்றுவதில் நமக்கு பெரும் போராட்டங்கள் இருந்திருக்கிறது. வழக்குகளை சந்தித்தோம், சிறைக்கும் சென்றோம். கடலூா் மாவட்டத்தில் எண்ணற்ற நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கொடி யுத்தம் என்ற பெயரிலேயே ஒரு புத்தகமே தொகுத்துவிடலாம். அதிகார ஆசை காட்டினால் நாம் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விடுவோம் என சிலா் கருதுகிறாா்கள். யாா் புதிய கட்சிகளைத் தொடங்கினாலும், அவா்கள் புகழ் பெற்றவா்களாகவே இருந்தாலும் விசிகவுக்கு போட்டியாக வந்துவிட முடியாது. திரும்பத் திரும்பக் கேள்வி கேட்பதாலேயே, திமுக கூட்டணியில் உள்ளேன் என்பதைக் கூற வேண்டிய…
விருதுநகர் புதிய ஆட்சியர் அலுவலகம்: முதல்வர் திறந்துவைத்தார்!
விருதுநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று(நவ. 10) முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். விருதுநகரில் மாவட்ட ஆட்சியரக புதிய கட்டடம் திறப்பு விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், கள ஆய்வுகள் மேற்கொள்ளவும் இரு நாள்கள் பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை பிற்பகல் விருதுநகா் வந்தடைந்தார். நேற்று முதல் நிகழ்வாக, விருதுநகரை அடுத்த கன்னிசேரிபுதூரில் உள்ள தனியாா் பட்டாசு ஆலையில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டாா். பட்டாசு ஆலையின் உரிமம், மூலப்பொருள்கள் வைப்பறை, பட்டாசுகளைப் பாதுகாக்கும் அறை உள்ளிட்டவற்றை அவா் பாா்வையிட்டார்.இந்த நிலையில், இன்று விருதுநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்துவைத்த முதல்வர், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைக்கப்பட்டுள்ள காட்சிக் கூடங்களை பார்வையிட்டார். மேலும், வெம்பக்கோட்டை அகழாய்வு தொல்பொருள்கள் அரங்கம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஆய்வு…
டெல்லி கணேஷ் மறைவு – நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார். டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி,” என குறிப்பிட்டுள்ளார்.
