காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் சாம் பிட்ரோடா, தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போலும், கிழக்கு இந்தியர்கள் சீனர்களை போலும், மேற்கு இந்தியர்கள் அரேபியர்கள் போல் உள்ளனர் என்று கூறி புது சச்சரவை துவக்கி வைத்துள்ளார். இது போன்ற கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது என காங்கிரஸ் கூறியுள்ளது.இந்நிலையில் சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். இவரது இந்த கருத்து தற்போது சர்ச்சை ஆகி…
Category: பொது செய்தி
மத்தியபிரதேசத்தில் வாக்கு பதிவு இயந்திரங்களுடன் சென்ற பேருந்து தீ பிடித்து 4 வாக்குபதிவு இயந்திரங்கள் சேதம்
மத்தியபிரேதேச மாநிலத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமடைந்தது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.நாடு முழுவதும் 94 தொகுதிகளில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நேற்று நடந்தது.மத்தியபிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கு நடந்த தேர்தல் மாலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. பிறகு வாக்கு பதிவு இயந்திரங்களை, வாக்குகள் எண்ணும் மையத்திற்கு அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்.பீட்டுல் மாவட்டத்தின் கோலா கிராமத்தில் பேருந்து மூலம் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்றனர். பேருந்தில் 6 வாக்கு இயந்திரங்கள் இருந்தன. வழியில் இரவு 11 மணியளவில், அந்த பேருந்து தீப்பிடித்து எரிந்தது. தீவிபத்து ஏற்பட்டதும் கதவுகள் அனைத்தும் சிக்கிக் கொண்டன. இதனால் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அனைவரும் வெளியே தப்பி ஓடிவந்தனர். யாருக்கும் எந்தவித காயங்களும்,…
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் வருகிற 13-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் வருகிற 13-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது இந்தியா – இலங்கை இடையே வர்த்தகம், சுற்றுலா மேம்பட கப்பல் சேவையை துவக்க, நாகப்பட்டினத்தில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் காங்கேசன் துறைமுகத்திற்கு, சிறிய பயணியர் கப்பல்களை இயக்க கடந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான, 150 பயணியர் பயணிக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் உருவாக்கப்பட்ட, ‘சிரியா பாணி’ என்ற சிறிய கப்பல், கடந்த ஆண்டு அக்., 14ல் இயக்கப்பட்டது. கடலின் பருவ மாற்றத்தால் சில தினங்களில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இந்நிலையில், தனியார் வசம் கப்பல் போக்குவரத்து சேவை ஒப்படைக்கப்பட்டு, வரும் 13 முதல், இலங்கைக்கு மீண்டும் பயணியர் கப்பல் போக்குவரத்து துவங்குகிறது. இது குறித்து தனியார் கப்பல் போக்குவரத்து நிர்வாக இயக்குனர் நிரஞ்சன்…
காக்கிநாடாவில் ரூ. 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் வருகின்ற 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும்படையினர் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரத்தில் இன்று அதிகாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை சோதனை செய்ததில், இரும்புப் பெட்டியில் தங்கக் கட்டிகள் இருந்தது அம்பலமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.17 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், பித்தாபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு வாகனம் மற்றும் தங்கக் கட்டிகளை எடுத்துச்…
குவியும் சுற்றுலாப்பயணிகள் குலுங்கும் கொடைக்கானல்
கொடைக்கானலுக்கு செல்ல மே 7ஆம் தேதிமுதல் இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை தற்போது அதிகரித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 7ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பதிவு செய்த பிறகே கொடைக்கானலுக்கு வர முடியும். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை வழக்கத்தைவிட தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை என்பதாலும், அக்னி நட்சத்திரம் இன்று துவங்க உள்ளதாலும் சுற்றுலாப் பயணிகள் வருகை பல மடங்கு தற்போது அதிகரித்துள்ளது.இதனால் கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பூங்கா, தூண் பாறை, குணா குகை, மோயர் பாயின்ட் உள்ளிட்ட இடங்களில் மக்கள்கூட்டம் அலைமோதுகிறது. கொடைக்கானலில் பகலில் வெப்பமான சூழலும், இரவில் இதமான சூழலும் நிலவி வருகிறது. மேலும் இங்கு முன்னெப்போதும் இல்லாத அளவில்…
பிரேசிலில் வெள்ளத்தில் சிக்கி 70 பேர் மாயம்
தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு 29 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 39 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 70 பேர் மாயமாகி உள்ளதாகவும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட போர்டோ அலெக்ரே நகரத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
புதுச்சேரி மாநில தொமுச சார்பில் மே தினம் கொண்டாட்டம்
புதுச்சேரி மாநில தொமுச சார்பில் மே தினம் கொண்டாட்டப்பட்டது.அதில் 30 இடங்களில் கொடியேற்றி தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார். தொழிலாளர் தினத்தையொட்டி புதுச்சேரி மாநில தொமுச சார்பில் சுதேசி பஞ்சாலை, மாஸ் ஹோட்டல், பழைய சட்டக்கல்லூரி, கதிர்காமம், புவன்கரே வீதி ஆட்டோ ஸ்டேண்ட், மூலகுளம் ஆட்டோ ஸ்டேண்ட், மேட்டுப்பாளையம் தேவி பாட்டில் தொழிற்சாலை, திருவள்ளுவர் பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலைய ஆட்டோ தொழிற்சங்கங்கள், தந்தை பெரியார் போக்குவரத்து கழக பணிமனை, பிஆர்டிசி பணிமனை, வில்லியனூர் ஆட்டோ மற்றும் டெம்போ ஓட்டுநர்கள் சங்கம், நோணாங்குப்பம் போட்ஹவுஸ் உள்ளிட்ட 30 இடங்களில் தொமுச கொடி ஏற்றுதல் மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. தொமுச பேரவைத் தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை தாங்கினார். தொமுச நிர்வாகிகள் அங்காளன்,…
தமிழ்நாடு புதுச்சேரியில் அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க தேர்தல் துறை அனுமதி
அரசியல் கட்சியினர் தமிழகத்தில் தண்ணீர் பந்தலை திறக்க தடை இல்லை என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு விளக்கமளித்துள்ளார். அரசியல் கட்சியினர் தமிழகத்தில் தண்ணீர் பந்தலை திறக்க தடை இல்லை என்று விளக்கமளித்துள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு, இது தொடர்பாக ர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தண்ணீர்பந்தல் திறப்பதற்கான அரசியல் கட்சிகளின் முன்மொழிவின் அடிப்படையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட முன்மொழிவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. எந்தவொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும் இந்தச் செயல்பாட்டின் மூலமாக எந்த விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக்கூடாது எனவும், தண்ணீர்பந்தல் திறப்பின் போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.எனவே, தண்ணீர்பந்தல் திறக்க விரும்பும் எந்தவொரு…
தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை
தமிழழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்குவங்கம், பீஹார், ஒடிசாவில் இன்றும், நாளையும் கடும் வெப்ப அலை வீசும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசுவதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை ஆகிய 20 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரே நேரத்தில் வெப்ப அலை, மிதமான மழை பெய்யும் என இருவேறு எச்சரிக்கை…
தமிழக அரசு நிதியுதவியுடன்அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல் புதுவை தலைமை நீதிபதி வெளியிட்டார்
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 134-ஆம் பிறந்தநாள் விழா. உலகத் தமிழ்மொழி நாள் – உலகத் தமிழ்க் கவிஞர் நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகள் அரபுமொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.புதுவை தமிழ் சங்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாரதிதாசனின் பேரன் பாரதி தலைமை தாங்கினார்.பாவலா் இராஸ்ரீமகேஷ் வரவேற்றாா்.புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத் தலைமை நீதிபதி த.சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு , அரபு மொழியில் மொழி பெயா்க்கப்பட்ட பாரதிதாசன் கவிதைகள் நூலின் முதல் படியை வெளியிட்டாா். அதனை, புதுச்சேரி அரபிக் ஆய்வு மைய நிறுவனா் சையது நிஜாமிஷாஹ் நூரி பெற்றுக் கொண்டாா். விழாவில் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவா் வி. முத்து பாராட்டிப் பேசினாா். மதுரை அரபிக் கல்லூரி முதல்வா் முஹம்மத் முஸ்தஃபா நூலின் சிறப்பினை எடுத்துரைத்தாா். நூலாசிரியா் ஜாகிா் ஹூசைன் ஏற்புரையாற்றினாா். விழாவில்…