நிலச்சரிவு இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணிகள், 206 பேரை காணவில்லை – முதல்வர் பினராயி விஜயன்

வயநாட்டின் சூரமலா பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பினராயி விஜயன்திருவனந்தபுரம்: பேரிடர் பாதித்த வயநாட்டில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும், எனினும் இன்னும் 206 பேரை காணவில்லை என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், “இதுவரை 215 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள். இதுவரை 148 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் 206 பேர் காணவில்லை. 81 பேர் காயமடைந்துள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலியாற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மற்றும் பாகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது. 67 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் தெரியாத உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் பணியை பஞ்சாயத்துகள் மேற்கொள்ளும். தீயணைப்புப் படை, தேசிய…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி இந்தியா முழுவதும் 200 கோடி மோசடி உத்தரபிரதேத்தை சேர்ந்த 4 பேர் கைது

புதுச்சேரி, லாஸ்பேட்டை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு குறித்து பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டார். அப்போது அவரிடம் மர்மநபர் ஒருவர், கனடாவில் வேலை தருவதாக உறுதியளித்தார். அவரை நம்பர் வைத்து, மேலும் விசா (வேலை அனுமதி), மருத்துவ பரிசோதனை, இன்சூரன்ஸ் போன்றவற்றுக்கு பணத்தை டெபாசிட் செய்தால் மேற்படி வெளிநாட்டு வேலை உறுதியாக கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி 17,77 லட்சத்தை பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியள்ளார். அதைத் தொடர்ந்து ரஅமஷ்குமார் புதுச்சேரி இணைய வழி போலீசில் புகார் கொடுத்தார்.புதுவை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் அவர்களின் உத்தரவின்பேரில் ஈன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீழ்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மோசடி குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை…

விரைவில் வருகிறது மத்திய அரசின் பி.எஸ்.என் 5G சேவை வீடியோ காலில் பேசிய மத்திய அமைச்சர்

அரசின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் விரைவில் 5 ஜி மற்றும் விரிவுபடுத்தப்பட் 4 ஜி சேவைகளை சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது 5 ஜி திட்டம் சோதனை கட்டத்தில் உள்ள நிலையில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பி.எஸ்.என்.எல் 5 ஜியை பயன்படுத்தி வீடியோ கால் சேவையை முதல் முறையாக பரிசோதித்து பார்த்தார். டெல்லியில் உள்ள c-dot கேம்பஸில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. அந்த வீடியோ காலில் பெண் ஒருவருடன் 5 ஜி சேவையின் செயல்திறன் குறித்து பேசினார். இதன்மூலம் பி.எஸ்.என்.எல் 5 ஜி தொழில்நுட்பத்தின் செயல் திறன் உறுதியாகியுள்ளது என்று ஜோதிராதித்ய சிந்தியாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் பகிரப்பட்ட அமைச்சரின் வீடியோ கால் காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.முன்னதாக இந்த வருடத்திற்கான பட்ஜெட்டில் பி.எஸ்.என்.எல்…

சக்கர வியூக பேச்சுக்காக அமலாக்கத்துறை சோதனை அவர்களுக்கு டீ பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன்- ராகுல் காந்தி

மக்களவை எதிர்க் கட்சித் தலைவராக ஆனது முதல் நாடாளுமன்றத்தில் ராகுல் பேச்சு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய ராகுல் காந்தி பேசுகையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு குருஷேத்திரத்தில் அபிமன்யூ என்ற இளம் வீரர் 6 பேர் கொண்ட சக்கர வியூகத்தால் கொல்லப்பட்டான். சக்கர வியூகம் என்பது வன்முறையும், பயமும் நிரம்பியது. தாமரை போன்று இருப்பதால் சக்கர வியூகத்தை பத்ம வியூகம் என்றும் சொல்வதுண்டு. இந்த 21-ம் நூற்றாண்டிலும், இதேபோன்ற சக்கர வியூகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் தாமரை வடிவில் உள்ளது. அதை பிரதமர் மோடி தனது நெஞ்சில் தாங்கி உள்ளார். அன்று சக்கர வியூகத்தை கொண்டு அபிமன்யூவை என்ன செய்தார்களோ அதையே இன்று இந்தியாவுக்கும், இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும், சிறு, நடுத்தர தொழில்களுக்கும்…

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்- கேரளா முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக்கட்சி கூட்டம் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:- வயநாட்டில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி காப்பாற்றப்பட வேண்டிய நபர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும், இனி அங்கிருந்து மீட்கப்பட வேண்டியவர்கள் இல்லை என்றும் ராணுவத்தினர் தெரிவித்தனர். நிலம்பூர் பகுதியில் சாலியாற்றில் மிதந்து வரும் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்திய ராணுவம் மேற்கொண்ட மீட்பு பணி அளவிட முடியாதது. 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. முண்டகை, சூரல்மலை பகுதிகளுக்கு தேவையான பொக்லைன் எந்திரங்கள் செல்ல முடியாததால், மண்ணுக்குள் சிக்கிய உடல்களை மீட்க முடியவில்லை. இப்போது நாம் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம், பாதிக்கப்பட்ட…

உயிரிழப்பு 316-ஐ தாண்டியது, புதைந்தவர்களை தேட தெர்மல் ஸ்கேனரை ராணுவம் பயன்படுத்திவருகிறது

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளரிவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது அடுத்தத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பலநூறு குடும்ங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர். வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும், தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது. இன்று நான்காம் நாளை எட்டிய மீட்பு பணிகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 316-ஐ கடந்துள்ளது. மேலும், நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தெர்மல் ஸ்கேனர் கொண்டு தேடும் போது சேறு, சகதிகளில் யாரேனும் சிக்கி இருந்தால் அதனை ஸ்கேனர் காட்டிக் கொடுக்கும். நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் உடல் பாகங்கள் சிதைந்து இருப்பது, மண்ணோடு மண்ணாக பலர் புதைந்து உயிரை பறிக் கொடுத்தது,…

வயநாடு நிலச்சரிவில் இதுவரை 295 பேர் பரிதாபமாக பலியானார்கள்

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர். இதைத் தொடர்ந்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள போலீஸார், தீயணைப்பு படையினர் ஆகியோருடன் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படை வீரர்களும் களமிறங்கி தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்றன. அப்போது, மண்ணில் புதைந்து உயிரிழந்த நிலையில் ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், மூன்றாம் நாளான புதன்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது.…

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு மகாராஷ்டிரா அரசு ரூ.1 கோடி பரிசு

பிரான்சின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவின் இறுதிப்போட்டி இன்று மதியம் நடந்தது. இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே உள்பட 8 வீரர்கள் தகுதி பெற்றனர். இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். ஸ்வப்னில் குசாலே 451.4 புள்ளிகள் பெற்றார். சீன வீரர் யுகுன் லியு 463.6 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் செர்கிய் குலிஷ் 461.3 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த பதக்கத்துடன் இந்தியா 3 வெண்கல பதக்கம் வென்றுள்ளது. இந்த மூன்று பதக்கங்களும் துப்பாக்கிச் சுடுதல் போட்டி மூலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு ஒரு…

“திராவிட மாடலுக்கான அங்கீகாரம்” – உச்ச நீதிமன்றத்தின் உள்ஒதுக்கீடு தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதும் மேலும், பட்டியல், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப் அரியானா மாநிலங்களில் உள் ஒதுக்கீடு வழங்கியது தொடர்பான வழக்கில் 7 நீதிபதிகள் அமர்வில் 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கி உள்ளனர். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது! முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க – அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான்…

கேதார்நாத்தில் மேகவெடிப்பு- நிலச்சரிவு

உத்தரகாண்டின் தெஹ்ரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. பல வீடுகள் மற்றும் கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த சம்பவத்தில் பெண்ணும், அவரது மகளும் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். இந்நிலையில் கேதார்நாத்தில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது. திடீரென பெய்த கனமழையால் மந்தாகினி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் நடைபாதையின் சுமார் 30 மீட்டர் தூரத்திற்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது. கேதார்நாத்தில் கிட்டத்தட்ட 200 யாத்ரீகர்கள் சிக்கித் தவித்தனர். மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கேதார்நாத்தில் சிக்கித்தவிக்கும் 150 முதல் 200 யாத்ரீகர்கள் குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். அதே நேரத்தில் சன்னதிக்கு செல்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக, மற்றொரு மேக…