வயநாட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மேம்பாடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் 163 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், முண்டக்கை கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அந்த குடும்பத்தினர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், புலம்பெயர்ந்து முண்டக்கை கிராமத்தில் தற்போது வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது. ஒரே வீட்டில் 11 பேர் வசித்து வந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்களில் இருந்த தமிழகத்தை சேர்ந்த 30 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Category: இந்தியா
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து 151 பேர் பரிதாப உயிரிழப்பு 211 பேர் நிலை தெரியிவில்லை
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 151 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அடைமழை, வெள்ளம் காரணமாக பல்வேறு சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பலரது நிலைமை என்னவென்று தெரியாததால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், விமானப் படையினர், தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பல்வேறு குழுவினர் மீட்பு, நிவாரண, மருத்துவப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில், பலத்த மழை காரணமாக, கேரளாவின் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் நேற்று முன்தினம்…
புதுச்சேரி அரசின் ஊழல்கள் குறித்துகுடியரசு தலைவரிடம் ஆதாரத்துடன் புகார் தருவோம்முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணாசமி நேற்று நிருபர்களிடம்கூறியதாவது: 2024 பாராளுமன்ற தோர்தலில் மோடி அரசு பெரும்பான்மை பெறாமல் 240இடங்களை மட்டும் பெற்று கூட்டணியோடுஆட்சி அமைத்த சமயத்தில், பதவியேற்புவிழாவில் பாஜக ஆளும் முதல்வர்கள் கலந்துகொண்டனர், எதிர் கட்சிகள் புறக்கணித்தன .ஆனால் புதுச்சேரியில் பாஜகவோடு கைகோர்த்து ஆட்சி அமைத்துள்ள முதல்வர்ரங்கசாமியும் புறக்கணித்தார். இது புதுச்சேரிமக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி மற்றும்ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்போது கூட நிதி ஆயோக் கூட்டத்தில்முதல்வர் பங்கேற்பார் என்ற எண்ணம்இருந்தது. புதுச்சேரிக்கு நிதி பற்றாக்குறைஉள்ளது. அந்த நிதியை பெற்று தருகின்றஅமைப்பாக உள்ளது நிதி ஆயோக்,அதில் கலந்து கொண்டால்தான் மாநிலபிரச்சனைகளை முதல்வர் முன்வைக்கமுடியும். அதை கருத்தில் கொண்டு மோடிஅரசு நிதியை உயர்த்தி கொடுப்பதற்கானவாய்ப்புகளும், வளர்ச்சி திட்டங்களை கொடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, நிதி கமிஷனில்சேர்ப்பு, 9 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்வது உள்ளிட்ட. நிறைய தேவைகள்…
குழந்தைகளின் அழுகுரல் கூட கேட்கவில்லையா? மக்களவையில் மணிப்பூர் எம்.பி. உணர்ச்சிகரமான பேச்சு
பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது மணிப்பூர் (Outer Manipur) காங்கிரஸ் எம்.பி., மணிப்பூர் வன்முறை தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து உணர்ச்சிப்பூர்வமான பேச்சை பதிவு செய்தார். இன்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஆல்ஃப்ரட் ஆர்தர் கூறியதாவது:- பிரதமர் மோடி வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலமான மணிப்பூருக்கு வர வேண்டும். சொந்த வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் சொந்த வீட்டிற்கு வர முடியாமல் தவிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அழுகுரல் கேட்கவில்லையா?. மத்திய மந்திரிகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒவ்வொரு வாரமும் 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதிக்குக்கு முன் வந்த நிலையில், அதன்பின் மணிப்பூர் வராதது ஏன்?. பிரதமர் மோடி மணிப்பூர் மாநில முதல்வர் என். பிரேன் சிங்கை ஏன் மாற்றவில்லை. ஒருவரை மாற்றினால் அமைதியை கொண்டு வர முடியும் என்ற நிலையில், அவரை மாற்ற ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்பது ஆச்சர்யமாக…
வயநாடு நிலச்சரிவு: இழப்பீட்டு தொகையை உயர்த்தி தரவேண்டும்- எதிர்கட்சி தலைவர் ராகுல் கோரிக்கை
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் வேதனையளிப்பதாக அத்தொகுதியின் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வயநாடு நிலச்சரிவு தொடர்பாக பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று பேசியுள்ளார். “கேரளாவின் வயநாட்டில் அரங்கேறும் இயற்கை பேரழிவு வேதனை அளிக்கிறது. இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி, உயிரிழந்த குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை வழங்குமாறு பாராளுமன்றத்தில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன். நிலச்சரிவு…
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் மோடி அறிவிப்பு
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமான வயநாட்டில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் சிக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பெரும் கவலையளிக்கிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடுபத்தினருக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் குறித்து பேசினேன். மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும். மேலும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.5௦ஆயிரம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
கேரளாவுக்கு ரூ.5 கோடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- நேற்று முதல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச்சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று கேரள மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயனை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட தமிழக முதல்-அமைச்சர், தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான டாக்டர் கீ.சு. சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை…
திருப்பதி கோவிலில் தெப்பக்குளம் ஒரு மாதம் மூடல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 65,874 பேர் தரிசனம் செய்தனர். 23,782 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.48 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் மாதம் 4-ந்தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாள் அங்குள்ள தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். தீர்த்தவாரி முடிந்தவுடன் பக்தர்கள் குளத்தில் நீராடுவார்கள். வருகிற 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை குளத்தை தூய்மைப்படுத்துதல், குளத்தில் உள்ள சேற்றை அகற்றுதல், குழாய்களுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஒரு மாதத்திற்கு கோவில் தெப்பக்குளம் மூடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் மோடி
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமான வயநாட்டில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் சிக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பெரும் கவலையளிக்கிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடுபத்தினருக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் குறித்து பேசினேன். மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும். மேலும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.5௦ஆயிரம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழருக்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்
வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காளிதாஸ் என்பவர் கட்டிட வேலைக்காக அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் காளிதாஸ் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார் காளிதாஸின் உடல் மேப்படி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது சொந்த ஊரான கூடலூருக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார். காளிதாஸ் என்பவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி…
