புதுச்சேரி அரசின் ஊழல்கள் குறித்துகுடியரசு தலைவரிடம் ஆதாரத்துடன் புகார் தருவோம்முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி முன்னாள்‌ முதல்வர்‌ நாராயணாசமி நேற்று நிருபர்களிடம்‌கூறியதாவது: 2024 பாராளுமன்ற தோர்தலில்‌ மோடி அரசு பெரும்பான்மை பெறாமல்‌ 240
இடங்களை மட்டும்‌ பெற்று கூட்டணியோடுஆட்சி அமைத்த சமயத்தில்‌, பதவியேற்புவிழாவில்‌ பாஜக ஆளும்‌ முதல்வர்கள்‌ கலந்து
கொண்டனர்‌, எதிர்‌ கட்சிகள்‌ புறக்கணித்தன .ஆனால்‌ புதுச்சேரியில்‌ பாஜகவோடு கைகோர்த்து ஆட்சி அமைத்துள்ள முதல்வர்‌
ரங்கசாமியும்‌ புறக்கணித்தார்‌. இது புதுச்சேரிமக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி மற்றும்‌ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்‌போது கூட நிதி ஆயோக்‌ கூட்டத்தில்‌முதல்வர்‌ பங்கேற்பார்‌ என்ற எண்ணம்‌இருந்தது. புதுச்சேரிக்கு நிதி பற்றாக்குறைஉள்ளது. அந்த நிதியை பெற்று தருகின்ற
அமைப்பாக உள்ளது நிதி ஆயோக்‌,அதில்‌ கலந்து கொண்டால்தான்‌ மாநிலபிரச்சனைகளை முதல்வர்‌ முன்வைக்கமுடியும்‌. அதை கருத்தில்‌ கொண்டு மோடி
அரசு நிதியை உயர்த்தி கொடுப்பதற்கானவாய்ப்புகளும்‌, வளர்ச்சி திட்டங்களை கொடுப்பதற்கான வாய்ப்பும்‌ உள்ளது.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, நிதி கமிஷனில்‌
சேர்ப்பு, 9 ஆயிரம்‌ கோடி கடனை ரத்து செய்வது உள்ளிட்ட. நிறைய தேவைகள்‌ உள்ளது. இவைகளை கேட்டு பெறுவதுதான்‌ நிதி ஆயோக்‌. இதில் கலந்து கொள்ளும்‌ வாய்ப்பை
முதல்வர்‌ ரங்கசாமி தவறவிட்டுள்ளார்‌.

புறக்கணித்ததற்கு பிறகு மாநில வளர்ச்சியில்‌ரங்கசாமிக்கு அக்கறை இல்லை எனமக்கள்‌ புரிந்து கொண்டுள்ளனர்‌. முதல்வர்‌ரங்கசாமி பாஜக கூட்டணியில்‌ நீடிப்பாரா இல்லையா என்ற கேள்வி மக்கள்‌ மத்தியில்‌உள்ளது. பாஜக கூட்டணியில்‌ ஆட்சியைஅமைத்து கொண்டு முதல்வராக உள்ளரங்கசாமி நிதி ஆயோக்‌ கூட்டத்தை புறக்கணித்தது ஏன்‌? என்‌.ஆர்‌ காங்‌., பாஜகவிற்கு கூட்டணிவிரிசல்‌ ஏற்பட்டுள்ளதா பாஜக, சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள்‌ போர்க்கொடிதூக்கியுள்ளதற்கு பாஜக மேலிட பார்வையாளர்களிடம்‌ முதல்வர்‌ கடுமையாக பேசியுள்ளார்‌. சுயேட்சை ஆதரவு தேவையில்லைஎன தகவல்‌’ வருகிறது. பாஜகவும் எம்எல்ஏக்கள்‌ வெளியில்‌ இருந்து ஆதரவு என்ற கோஷத்தையும்‌வைத்துள்ளனர்‌. இந்த ஆட்சி குறை பிரசவமாக முடிந்துவிடுமா ? என்ற நிலையும்‌ ஏற்பட்டுள்ளது.காங்கிரசார்‌ இந்த கூத்துக்களை வேடிக்கை
பார்த்து கொண்டுள்ளோம்‌. கட்சியைபலப்படுத்தி மக்கள்‌ செல்வாக்கை பெற்றுஆட்சிக்கு வருவதுதான்‌ நோக்கம்‌. ஆட்சி கவிழ்ப்பு வேலையில்‌ நாங்கள்‌ ஈடுபட மாட்டோம்‌. ஆட்சி நீடிக்காமல்‌ போவது மாநில வளர்ச்சிக்கு நல்லதல்ல. நான்‌ முதல்வராக இருந்தபோது பாஜகவோடு கருத்து வேறுபாடு இருந்தாலும்‌ நிதி ஆயோக்‌ கூட்டத்தில்‌ வலியுறுத்தி பேசினேன்‌.மத்திய ரயில்வே அமைச்சர்‌ சோமண்ணாபுதுச்சேரியில்‌ ரயில்வே தி ங்களை அறிவித்துள்ளார்‌. பாஜக அரசுக்கு புதுச்சேரி
ரயில்வே இடங்களை பற்றி பேச தகுதிகிடை யாது. கடந்த 10 ஆண்டாக புதியரயில்‌ ஒன்று கூட தரவில்லை. நான்‌ மத்திய இணை அமைச்சராக இருந்தபோது புதுச்சேரிக்கு 11 காரைக்காலிற்கு 7 ரயில்களை கொண்டுவந்தோம்‌. இசிஆர்‌ ரயில்பாதை, கடலூர்‌-புதுச்சேரி-திண்டிவனம்‌ ரயில்‌திட்டம்‌ கிடப்பில்‌ உள்ளது.

புதுச்சேரி அமைச்சரவை ஒரு விந்தையானஅமைச்சரவை. அமைச்சர்‌ சாய்‌ சரவணன்‌அரசை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில்‌ வழக்குபோட்டுள்ளார்‌. பட்டா விஷயத்தில்‌ தவறு எனமுதல்வர்‌, அமைச்சரவை, அரசு,தலைமை செயலரை எதிர்த்துவழக்கு போட்டுள்ளார்‌. ஒருஅமைச்சருக்கு கூட்டு பொறுப்புஉண்டு. ஆனால்‌ தான்‌ அங்கமாகஉள்ள அமைச்சரவையைஎதிர்த்து வழக்கு தாக்கல்‌செய்துள்ளார்‌. முதல்வர்‌வேடிக்கை பார்த்துவருகிறார். முதல்வர்‌ கட்டுப்பாட்டில்‌ சாய்‌ உள்ளாரா? இல்லையா வேறுமுதல்வராக இருந்தால்‌ அந்த அமைச்சரை நீக்கியிருப்பார்‌. அரசு இயந்திரம்‌ முதல்வர்‌ கட்டுப்பாட்டில்‌ இல்லை. முதல்வர்‌ கூறியதைப்போல்‌ மேலே இருந்து இயக்குகின்றார்கள்‌. டம்மி முதல்வராக உள்ளார்‌. அதனால்தான்‌ அனைவரும்‌ அவரை ஓரம்‌ கட்டிவிட்டு இஷ்டம்போல்‌ செயல்படுகின்றார்கள்‌.முதல்வர்‌ ரங்கசாமிக்கு மிகப்பெரிய அவமானம்‌. ஒன்று அந்த அமைச்சருக்கு உத்தரவிட்டு வழக்கை வாபஸ்‌ பெறச்‌ செய்ய வேண்டும்‌ இல்லையெனில்‌ நீக்கம்‌ செய்ய வேண்டும்‌.


காரைக்கால்‌ திட்ட குழுவில்‌ கடந்த 2021ஆம்‌ஆண்டு முதல்‌ 261 மனைகளுக்கு அனுமதிகொடுத்துள்ளனர்‌. அதில்‌ 39 மனைகள்‌போலிபபத்திரம்‌ தார்‌ செய்து ‘கீக்யூ ஆர்‌ கோடு
உருவாக்கி அனுமதி தந்துள்ளனர்‌. இதற்காகஒவ்வொரு நபரிடமும்‌ ரூ.70 ஆயிரம்‌ வரைபெறப்பட்டுள்ளது. காரைக்கால்‌ குழுமம்‌அந்த 39 மனைகளும்‌ செல்லாததாக்கியுள்ளது.ஏமாந்தவர்கள்‌ அவதிப்படுகின்றனர்‌. இதற்குமுனைப்பாக இருந்தவர்கள்‌ யார்‌? மே மாதம்‌ நடந்த இந்த சம்பவத்திற்கு இதுவரை நடவடிக்கை இல்லை. பத்திரப்பதிவு துறை இந்த ஊழலுக்கு என்ன நடவடிக்கை?எடுத்தள்ளது. புதுச்சேரியிலும்‌ இதுபோல்‌ நடந்துள்ளதா? என்ற கேள்வியும்‌ எழுந்துள்ளது. சாலையோர ஸ்டால்களில்‌ தரமற்றஉணவு விற்பனை செய்யப்படுகிறது. யார்‌கண்காணிக்கின்றார்கள்‌? உணவுஆய்வாளர்‌உள்ளாரா ?தரம் பரிசோதனை செய்துள்ளராமக்களைப்பற்றி கவலைப்படாத அரசு இது.சுகாதாரத்துறையின்‌ ஒரு அங்கம்தான்‌ உணவுபாதுகாப்புத்துறை. உணவு ஆய்வாளர்‌ பதவிரப்பவில்லை. காரைக்காலில்‌ 4 ஆண்டாக இல்லைமுதல்வர்‌. 2021ல்‌ ஆட்சிக்கு வந்தவுடன்‌ ஒரு ஆண்டிற்குள்‌ 10 ஆயிரம்‌ காலிப்பணியிடங்களை நிரப்புவோம்‌ என்றார்‌. ஆனால்‌ 700 பேருக்குத்தான்‌வேலை கொடுத்துள்ளனர்‌. கல்வித்துறை,
பொதுப்பணித்துறை, நகர திட்ட குழுமம்‌,வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, மின்துறை உள்ளிட்ட துறைகளில்‌ ஆள்‌ பற்றாக்குறைஉள்ளது. இதனால்‌ நிர்வாகம்‌ சரியாக
செயல்பட முடியாத நிலையும்‌ உள்ளது. மின்துறையில்‌ 980 பணியிடங்கள்‌ காலியாக உள்ளது. ஓயர்மேன்‌ மட்டும்‌ 200 பேர்‌ தேவைப்படுகின்றனர்‌. மின்துறையை
தனியாரிடம்‌. ஒப்படைப்பதற்காககாலிப்பணியிடங்களை நிரப்பாமல்‌ உள்ளனர்‌.கிராமத்தில்‌ மின்தடை… ஏற்பட்டால்‌ இரவில்‌சென்று பார்க்கும்‌ லைன்மேன்‌ கிடையாது.
காரைக்கால்‌ துறைமுகத்தை .அதானி எடுத்துகொண்டார்‌. அங்கு நிலக்கரி இறக்குமதியால்‌சுற்றுச்சூழல்‌ பாதிக்கப்படுகிறது. இதுமுதலாளிகளுக்கான ஆட்சி, புதுச்சேரி மக்களுக்கான ஆட்சி இல்லை.கலால்‌, கல்வி, பொதுப்பணித்துறை,வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துதுறைகளின்‌ ஊழல்கள்‌ குறித்து குறிப்பு
தயாரித்து குடியரசு தலைவரை ஒட்டுமொத்தமாக ஆதாரத்துடன்‌ சந்தித்து வலியுறுத்துவோம்‌. இவ்வாறு அவர்‌ கூறினார்‌.

Related posts

Leave a Comment