சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாபூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு விரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த மாநில காவல் பணிக்குழு மூத்த கான்ஸ்டபில் பரத் லால் சாஹூ மற்றும் கான்ஸ்டபில் சதெர் சிங் தாக்குதலில் உயிரிழந்தனர். தரெம் காவல் எல்லைக்கு உட்பட்ட மண்டிமர்கா காட்டுப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. இந்த தாக்குதலில் காயமுற்ற புருஷோத்தமன் நாக், கோமல் யாதவ், சியாராம் சொரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோபருக்கு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அவர்களை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
Category: இந்தியா
கர்நாடகாவில் 10 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு பொதுமக்கள் அச்சம்
கர்நாடகத்தில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று 2 ஆயிரத்து 731 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 524 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 973 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். தலைநகர் பெங்களூருவில் மட்டும் ஒரே நாளில் 270 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகள் 3 பேருக்கு ஜாமீன்
கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மூவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளை கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது நண்பர் நடிகர் பிரகாஷ்ராஜ் உட்பட பலர் அவரது கொலைக்கு நீதிகேட்டு குரல் எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில் இந்தப் கொலையில் தொடர்புடைய மோகன் நாயக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இன்னும் இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் வழக்கின்…
சத்தீஸ்கர் எல்லையில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்கர் மாநிலம் எல்லை அருகே உள்ள மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் வண்டோலி கிராமத்தில் போலீசாருடன் இணைந்து கமோண்டோ படை வீரர்கள், நக்சலைட்டைடுகளை தேடும் பணியில்ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சண்டையில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். 12 நக்சலைட்டுகளின் உடல்களை மீட்ட நிலையில் போலீசார் ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு INSAS துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர். நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்த சண்டையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் கமோண்டோ வீரர்களுக்கு 51 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரி துதேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல்
கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த திங்கள் அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் ‘சி மற்றும் டி’ கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், கன்னடர்கள் ‘கன்னட நிலத்தில்’ வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே தனது அரசின் விருப்பம். நாங்கள் கன்னடர்களுக்கு ஆதரவான அரசு. கன்னடர்களின் நலனைக் கவனிப்பதே எங்கள் முன்னுரிமை” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு தனியார் நிறுவனங்கள் கடுமையாக…
காமராஜரின் பிறந்தநாள்: கல்வி துறையில் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது- பிரதமர் மோடி
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் முதல்வர், அமைச்சர்கள் காமராஜருக்கு மரியாதை செலுத்தினார். பள்ளிகளில் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, காமராஜரின் பிறந்தநாளான இன்று அவரது தொலைநோக்கு தலைமை மற்றும் ஏழைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக அவர் பரவலாக மதிக்கப்படுகிறார். கல்வி போன்ற துறைகளில் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது இலட்சியங்களை நிறைவேற்றவும், நீதியும் கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.
மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி நீரை தராத கர்நாடகா அரசு- தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் அறிவிப்பு
முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு அளித்த இறுதி தீர்ப்பையும், உச்ச நீதிமன்றத்தின் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பையும் செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அந்த அமைப்புகள் 2018 ஜூன் முதல் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய தென்மேற்கு பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நிலவரத்தை கருத்தில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர்மேலாண்மை ஆணையம் ஆகியவை தமிழகத்துக்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரை கணக்கிட்டு, ஜூலை 12 முதல் 31-ம் தேதி வரை தினசரி ஒரு டிஎம்சி விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஆணையை செயல்படுத்த…
பீகாரில் 12 வயது சிறுவனை தண்டவாளத்தில் கட்டி வைத்து அடித்த கும்பல் பரவும் வீடியோ காட்சிகள்
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் ‘பீகாரின் லெனின்கிராட்’ என்று அழைக்கப்படும் பெகுசராய் பகுதி உள்ளது. இப்பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனை சிலர் அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் கட்டி வைத்து கம்பால் அடிக்கும் காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவியது. அங்குள்ள லக்மினியா ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அந்த சிறுவனை கட்டி வைத்து 3 பேர் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதுகுறித்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த ரோஷன் குமார், ஜெய்ராம் சவுத்ரி, ககுல் குமார் என்ற 3 பேர் சேர்ந்து அந்த சிறுவனை தாக்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் சில பொருட்களை அந்த சிறுவன் திருடியதாக…
மத்திய பிரதேச இந்தூரில் ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 24 மணி நேரத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கின்னஸ் புத்தகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றுக்கொண்டார். இந்த சாதனை குறித்து மோகன் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தூய்மையான நகரம் என்ற சாதனையை தொடர்ந்து ஒரே நாளில் அதிக மரக்கன்றுகள் நடப்பட்ட நகரம் என்ற சாதனையையும் படைத்த இந்தூரின் சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தூர் நகரம் ஒரே நாளில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு ஒரே நாளில் 9,26,000 மரக்கன்றுகளை நட்டு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை புடைத்திருந்தது. அச்சாதனையை தற்போது இந்தூர் முறியடித்து புதிய சாதனையை
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- திமுக 69 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.47 ஆகும். இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் 20 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டநிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா…
