ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறும். ஜெகநாதரின் 12 யாத்திரைகளில் ரத யாத்திரை மிகவும் புனிதமானது மற்றும் மிகவும் பிரபலமானது. மூலவர்களான பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, பூரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாலையில் பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலநாத சரஸ்வதி தனது சீடர்களுடன் ஜெகநாதர், பாலபத்திரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகியோரின் தேர்களை தரிசனம் செய்தனர். இந்த சடங்கு முடிந்ததும், மாலை 5.20 மணியளவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ், ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர்…
Category: இந்தியா
காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததை கண்டறிந்தனர். பாதுகாப்பு படையினரை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாகிச்சூடு நடத்தினர். இதையடுத்து பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல மற்றொரு பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரிலும் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார். பயங்கரவாதிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
64 பயணிகளுடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 2 குழந்தைகள் பலி- பலர் படுகாயம்
குஜராத்தின் டாங் மாவட்டத்தில் இன்று 64 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் பாதுகாப்புச் சுவரை இடித்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். சொகுசுப் பேருந்து சூரத்தில் இருந்து சபுதாராவுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, இன்று மாலை 5 மணியளவில், மலை நகரமான சபுதாராவிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து பாதுகாப்புச் சுவரை இடித்து கவிழ்ந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், படுகாயமடைந்த மூன்று பயணிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காயமடைந்த மற்ற நபர்கள் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். நெடுஞ்சாலையில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து பாதுகாப்புச் சுவரை இடித்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
உ.பி.யில் புதுசா போட்ட சாலையில்திடீர் பள்ளம் பொதுமக்கள் அதிர்ச்சி
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் பள்ளத்தால் ரோட்டின் ஒருபுறத்தில் இருந்த கால்வாய் தண்ணீர் மறுபக்கத்தில் உள்ள வயல்வெளிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மிக மோசமாக சாலைகள் போடப்படுவதால் தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுகிறது என்று அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அண்மையில் உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழையால் ராமர் கோவிலில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வுக்கு மறுதேர்வு கோரும் மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அந்த வகையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வுக்கான முடிவுகள், கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதவிர வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது என ஏராளமான முறைகேடுகள் நீட் தேர்வு மீதான நம்பிக்கையை குறைத்தது. இத்தனை சர்ச்சைகள் அடங்கிய நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று…
சிம்லாவில் நிலச்சரிவு
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் ஹட்கோட்டி பௌண்டா சாஹிப்பை இணைக்கும் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. கனமழை, நிலச்சரிவால் இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மண்டியில் 38 சாலைகளும், குலுவில் 14 சாலைகளும் சிம்லாவில் 5 சாலைகளும் மூடப்பட்டன. இதையடுத்து ஜூலை 12ம்தேதி வரை கனமழை தொடரும் என சிம்லா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காட்பாடி அருகே ஏ.டி.எம் எந்திரம் உடைத்து ரூ. 25 லட்சம் கொள்ளை
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குடிபாலா வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அமைந்துள்ளது. இங்குள்ள ஏடிஎம் மையத்தில் நேற்று இரவு முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் புகுந்தனர். அவர்கள் வெல்டிங் எந்திரம் மூலம் ஏடிஎம் எந்திரத்தை உடைத்தனர். அதிலிருந்து ரூ.25 லட்சத்து 98,400 பணத்தை கும்பல் கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலையில் ஏடிஎம் மையத்திற்கு சென்ற பொதுமக்கள் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த கும்பல் ஏடிஎம் உடைத்து பணத்தை அள்ளிய காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனையடுத்து சித்தூர் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சித்தூர் மாவட்ட எல்லையில் உள்ள வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கும்…
சூரத்தில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழந்த சோகம்
குஜராத் மாநிலம் சூரத் நகரத்தில் சச்சின் பாலி கிராமத்தில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த பயங்கர விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் வேறுயாரும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கட்டிடம் 5-6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிக்கிறார். இந்த கட்டிடங்களில் 5 குடும்பங்கள் வசித்து வந்தனர். 2017-18ல் கட்டப்பட்ட கட்டடம், வெறும் 6 ஆண்டுகளில் சிதிலமடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலே பாபா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்- பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலெ பாபா ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நாட்டில் உள்ள ஏழைகள், தலித்துகள், ஒடுக்கப்பட்டோர் போன்றோர் தங்கள் வறுமையையும் மற்ற அனைத்துத் துன்பங்களையும் போக்குவதற்கு, ஹத்ராஸின் போலே பாபா போன்ற பல பாபாக்களின் மூடநம்பிக்கையால் தவறாக வழிநடத்தப்பட்டு, தங்கள் துயரத்தையும் துன்பத்தையும் அதிகரிக்கக் கூடாது. மாறாக, பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் காட்டிய பாதையில் ஆட்சியைப் பிடித்து தங்கள் தலைவிதியை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்தது மிகவும் கவலை அளிக்கிறது. ஹத்ராஸ் சம்பவத்தில், குற்றவாளியான போலே பாபா மீது கடுமையான நடவடிக்கை…
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் கசிவு- கலந்தாய்வு ஒத்திவைப்பு
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாக பேப்பர் லீக் ஆனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த மாதம் நீட் தேர்வு முடிவு வெளியானது. அப்போது பலர் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை எல்லாம் பெற்றது தெரியவந்தது. அப்போது கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது. 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டங்கள் நடத்தினர். பலர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற உத்தர வேண்டும் எனவும் ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளனர். சுமார் 26…
