காந்திகாந்தி பேசியது இந்துக்களுக்கு எதிரானது அல்ல.. பாஜகவுக்கு எதிரானது- பிரியங்கா காந்தி

மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார். மக்களவையில் ராகுல் காந்தி பேசும்போது “நம்முடைய சிறந்த மனிதர்கள் வன்முறை இல்லாதது (அகிம்சை), பயத்தை முடிவுக்கு கொண்டு வருதல் குறித்து பேசியிருக்கிறார்கள். ஆனால், தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை, பொய் ஆகியவைகளை மட்டுமே பேசுகிறார்கள். இவர்கள் (பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்) அனைத்து இந்துக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. இவர்கள் எந்த வகையிலும் இந்துக்கள் அல்ல” என்றார்.இதனால் பாஜக எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடி எழுந்து “ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்பது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு” என தனது கண்டனத்தை தெரிவித்தார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா “ராகுல் காந்தி தனது கருத்துக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார். இதனால் மக்களவை சில…

அரசியலமைப்பை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என முழங்கியவர்கள், பிரதமரானவுடன் அதை எடுத்து வணங்கினார்கள்- மக்களவையில் ஆ.ராசா பேச்சு

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்களவையில் ஆ. ராசா பேசினார். அப்போது, எமர்ஜென்சி குறித்த பாஜக உறுப்பினர்களின் பேச்சுக்கு ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார். அப்போது அவர் உரையாற்றியதாவது:- 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக பெரும்பான்மை எப்படி என்று கூறமுடியும்.அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியதற்காக பலமுறை இந்திரா காந்தி மன்னிப்பு கேட்டார். அவசரநிலையை தற்போது பாஜக அரசின் செயல்பாட்டுடன் ஒப்பிட முடியாது. பாஜக அரசு நினைப்பதை அவர்களாக சொல்வதில்லை. குடியரசுத் தலைவர் சபாநாயகர் மூலம் சொல்கிறார்.8 முறை பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம். பாசிச கொள்கை உடைய பாஜக, எமர்ஜென்சி பற்றி பேச அருகதை இல்லை.நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்துக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் 40 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கி உள்ளனர்.திராவிட…

பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் கிடையாது ராகுல் காந்தி பேச்சும் மோடி, அமித் ஷா கொந்தளிப்பும்

உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் கிடையாது” என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியததை அடுத்து, மக்களவையில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியின் முதல் பேச்சு கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளாக்கியுள்ளது. குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி கடவுள் சிவன் படத்தை காட்டிப் பேசினார். அவர் பேசும்போது, “எனது இன்றைய உரையை சிவன் படத்தை காண்பிப்பதில் இருந்து தொடங்குகிறேன். இந்தப் படத்தை இங்கு ஏன் காண்பிக்கிறேன் என்றால், இதில் உள்ள யோசனைகளை எதிர்கட்சிகளாகிய நாங்கள் காத்துள்ளோம். முதல் யோசனை… ஒருபோதும் பயப்படக் கூடாது என்ற எண்ணமும் சிவனின் உருவத்தில் இருந்துதான் பிரதிபலிக்கிறது. சிவன் கழுத்தில் உள்ள…

இந்திய அரசியல் சாசனம் வாழ்க என தனது உரையை தொடங்கினார் ராகுல் காந்தி

மக்களவையில், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, இந்திய அரசியல் சாசனம் வாழ்க என தனது உரையை ராகுல் காந்தி தொடங்கினார்.இதற்கிடையே, மக்களவையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மோடி.. மோடி என முழக்கமிட்டனர்.சிவபெருமானின் படத்தை காட்டி தன்னுடைய உரையை தொடங்குவதாக ராகுல் காந்தி குறிப்பிட்டு பேசினார்.அப்போது, அவையில் சிவபெருமானின் படத்தை காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதா ? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பனார். சிவபெருமானின் படம் அல்ல எந்த ஒரு படத்தையும் காட்ட கூடாது என்பது அவை விதி என சபாநாயகர் தெரிவித்தார். பின்னர் மேற்கொண்டு அவர் கூறியதாவது:- நான் காட்டிய சித்திரத்தில் நாங்கள் பாதுகாத்த சில சிந்தனைகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் சாசனத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.இந்தியா என்ற சிந்தனை மீது,…

புதிய குற்றவியல் சட்டங்கள் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களின் நகலே தவிர வேறொன்றும் இல்லை” முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

புதிய குற்றவியல் சட்டங்களின் சில அம்சங்களை வரவேற்கலாம். ஆனால் இந்தச் சட்டங்கள் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களின் நகலே தவிர வேறொன்றும் இல்லை” என முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் முக்கியத் தலைவருமான ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. புதிய சட்டங்கள் என்றழைக்கப்படும் இவற்றில் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களின் நகல் என்றுதான் சொல்ல…

புதிய குற்றவியல் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது

புதிய குற்றவியல் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்த நிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது இந்தச் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது இந்தச் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி கமலா மார்கெட் காவல் நிலையம் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டப்பிரிவு…

ஸ்பேஸ் பே (Space Bay) ஆக மாறும் தமிழக மாவட்டங்கள்

விண்வெளித்துறையில் புதுமைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு விண்வெளிக் கொள்கை 2024 உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கொள்கையின் கீழ் குலசேகரப்பட்டினத்தை சுற்றி உள்ள மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை ஸ்பேஸ் பே (Space Bay) ஆக ஊக்குவித்து வளர்ச்சியை விரைவுப்படுத்த முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நான்கு மாவட்டங்களில் வளர்ச்சியை விரைவுபடுத்த நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. விண்வெளித்துறையில் அதிகரிக்கும் வளர்ச்சி, சீர்திருத்தங்கள், முதலீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விண்வெளி கொள்கையை தமிழ் நாடு அரசு அறிமுகம் செய்கிறது. வலுவான தொழில்துறை, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளிட்டவற்றை முழுமையாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது. விண்வெளிக் கொள்கை தொடர்பாக தொழிற்துறையினர், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இறப்பு சான்றிதழ் போலியாக கொடுத்து 1.1 கோடி இன்சூரன்ஸ் பணத்தை மோசடி செய்த மும்பை பெண்

மும்பையில் 2021 ஆம் ஆண்டு 11 ஆம் தேதி கஞ்சன் ராய் என்பவர் இதய நோயால் மரணமடைந்துள்ளார். கஞ்சன் ராயின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவரது மகன் தன்ராஜ் 20.4 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுள்ளார். இதே இறப்பு சான்றிதழை பயன்படுத்தி இன்னொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 25 லட்ச ரூபாயை தன்ராஜ் பெற்றுள்ளார். பின்பு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி பவித்ரா என்பவர் உயிரிழந்துள்ளார். பவித்ராவின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவரது கணவர் ரோகித் 24.2 லட்ச ரூபாயை பெற்றுள்ளார். இந்நிலையில் இந்தாண்டு ஜனவரி 30 ஆம் தேதி இன்சூரன்ஸ் நிறுவனம் ஆடிட்டிங் செய்த போது ஒரே முகவரியில் இரண்டு வெவ்வேறு பெயர்களில் இன்சூரன்ஸ் பெற்றுள்ளதை பார்த்து சந்தேகம் அடைந்தது. இதனையடுத்து இன்சூரன்ஸ் நிறுவனம் இது சம்பந்தமாக போலீசில் புகாரளித்தது. இந்த வழக்கின்…

மகளுடன் தேநீர் அருந்திய சிறுவனைக் கட்டிவைத்து அடித்த தந்தை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வழக்கறிஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 17 வயது சிறுவனை கடத்தி சென்று கொடுமைப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுவனை உயிருடன் காவல்துறையினர் மீட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கல்யாண்பூர் காவல் உதவி ஆணையர் அபிஷேக் பாண்டே, “பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன் மருந்தகம் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். அந்த சிறுவன் தனது வகுப்பு தோழியுடன் ஒரு கடையில் கூலட்ரிங்க்ஸ் குடித்துள்ளார். இதனை பார்த்த பெண்ணின் தந்தை அந்த சிறுவனை தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி சென்று கொடுமைப்படுத்தியுள்ளார். அந்த சிறுவனை கொலை செய்து விடுவேன் என்றும் பெண்ணின் தந்தை மிரட்டியுள்ளார். மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார். சிறுமியின் தந்தையான வழக்கறிஞர் பிரஜ் நரேன் நிஷாத் மற்றும் அவரது சகோதரர் தேஜ் நரேன் மீது…

இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024 ஐ வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். போட்டி முழுவதும் அணி சிறப்பான திறமை, உறுதிப்பாடு மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும்…