அமெரிக்காவில் தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம் கொத்து கொத்தாக மக்களின் உயிர்களைப் பறித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அலபாமா மாகாணத்தில் இன்று நடத்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்ஐக்கிய அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ள நகரமான அலபாமாவின் பர்மிங்காமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், இந்தச் சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர். இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ட்ரூமான் பிட்ஜெரால்ட் கூறுகையில், “பல பேர் கொண்ட கும்பல் ஒரு கூட்டத்தின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் பலரும் படுகாயமடைந்தனர். ஒரு பெண், 2 ஆண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் துப்பாக்கி குண்டுகளால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்தார்துப்பாக்கி சூடு நடத்தியவர்கள்…
Category: உலகம்
செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது. செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தியா தொடர்ந்து உயர்ந்து பிரகாசிக்கிறது!” “சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியது முதல் 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2024 இல் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கம் வெல்வது வரை, என்ன ஒரு பயணம்! நமது செஸ் சாம்பியன்களின் அயராத அர்ப்பணிப்பு, எல்லைகளைத் தாண்டி, உலக அரங்கில் தேசத்திற்குப் பெருமை…
ஜப்பானில் கனமழை – இயல்பு வாழ்க்கை முடக்கம்!
ஜப்பானின் நோட்டோ கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நோட்டோ வளைகுடாவில் சுஸூ மற்றும் வாஜிமா நகரங்களில் சனிக்கிழமை(செப்.21) கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கனமழை எதிரொலியாக ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சுஸூ நகரில் வெள்ள பாதிப்புகளில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மழை வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்படதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாஜிமாவில் கடந்த ஜனவரியில் இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சேதமடைந்த சுரங்கத்தை சீரமைக்கும் பணியில் சுமார் 60 கட்டுமானப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளில் சிக்கி 4 பேர் மாயாமாகியுள்ள நிலையில், மீட்புக்குழுவிப்னர் அவர்களைத் தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர். நோட்டோ வளைகுடாவில் கடந்த 3 நாள்களில் 50 செ.மீ.(20 இன்ச்) மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இஷிகாவாவில் 16 ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்வதால்…
இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்கிறார் அனுர குமார திசநாயக
இலங்கையின் 9-ஆவது அதிபா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கை, சற்று இயல்பு நிலைக்குத் திரும்பிவரும் நிலையில், வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் நள்ளிரவு 12 மணிமுதல் எண்ணப்பட்டது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளின் முடிவில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை பணி இன்று(செப்.22) பகல் நடைபெற்றது. அதில் 56 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்றுள்ளார் அநுரகுமார திஸ்ஸநாயக. இதன்மூலம், முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவா் சஜித் பிரேமதாசவைவிட 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக கூடுதலாக வாக்குகளைப் பெற்றுள்ளார். இதையடுத்து அநுரகுமார திஸ்ஸநாயக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திங்கள்கிழமை(செப்.23)…
விண்வெளியில் ஒரு பிறந்தநாள்
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும் என தெரியந்துள்ளது. இதற்கிடையே, சுனிதான வில்லியம்ஸ் 2வது முறையாக விண்வெளியில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதன்படி, சுனிதா வில்லியம்ஸ் செப்டம்பர் 19 ஆம் தேதி (இன்று) தனது…
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மதியம் 2 மணியவில் ரிக்டரில் 6.0 ஆக பதிவு
பப்புவா நியூ கினியாவில் இன்று இந்திய நேரப்படி மதியம் 2.11 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 195.3 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 5.49 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 147.52 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனால் பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற பாதிப்புகள் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
அமெரிக்கா பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
அமெரிக்க அரசுமுறைப் பயணம் தொழில்துறையில் புதிய திருப்புமுனையாக அமைந்த நிலையில், சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அமெரிக்காவிற்குச் சென்று அரசு முறைப் பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பி இருக்கிறேன். இது வெற்றிகரமான பயணமாகவும், சாதனைக்குரிய பயணமாகவும் அமைந்திருந்தது. தனிப்பட்ட எனக்கு அல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு சாதனைப் பயணமாக இந்தப் பயணம் அமைந்திருக்கிறது. உலக நாடுகளில் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களுடைய தொழில்களை தொடங்குவதற்கு தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த 28 ஆம் தேதி அமெரிக்கா சென்றேன். செப்டம்பர் 12 ஆம் தேதி வரை அங்கே இருந்திருந்தேன். இந்த 14 நாட்களும் மிகப் பெரிய பயனுள்ளதாக இந்தப் பயணம் அமைந்தது. உலகின் புகழ் பெற்ற தலைசிறந்த 25 நிறுவனங்களுடன் நான்…
புகுஷிமா அணு உலை 13 ஆண்டுகளாக படிந்துள்ள கதிரியக்க எரிபொருள்ஆய்வு செய்யுகிறது ரோபோட்
ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய சுனாமி மற்றும் பூகம்பத்தில் பலத்த சேதமடைந்துள்ள புகுஷிமா டாய்ச்சி அணு உலையில் இருந்து கதிரியக்க எரிபொருள் மாதிரியை சேகரிக்கும் பணியில் ரோபோட் ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9.0 ஆக பதிவாகியிருந்தது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி பேரலையும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த இயற்கை பேரிடரால் புகுஷிமா அணு உலையின் குளிரூட்டும் அமைப்புகள் முற்றிலும் செயலிழந்துவிட்டன. இதன் காரணமாக கடந்த 13 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் அணு உலை உள்ளே இருந்த கதிரியக்க எரிபொருள் உருகி, கழிவுகளுடன் கலந்து அணு உலை உள்ளெ படிந்துள்ளது. நீண்டகாலம் அணு உலையின் உள்ளே கதிரியக்க எரிபொருள் படிந்து கிடப்பதால் சுற்றுச்சுழலுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடுமென்பதால் அணு உலையிலிருந்து கதிரியக்க எரிபொருளை மிகுந்த பாதுகாப்புடன் வெளியேற்றி அணு…
உலகளவில் முடங்கியது எக்ஸ் தளம்- டவுன்-டிடெக்டர் அறிவிப்பு
சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் எக்ஸ் [ட்விட்டர்] தளம் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சற்று நேரத்திற்கு முடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது. இதனை டவுன்-டிடெக்டர் என்ற இணையதளம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. உலக அளவில் முன்னணி வலைதளங்களை தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் டிரெக்கிங் வலைதளமே டவுன்-டிடெக்டர். திடீரென எக்ஸ் தளம் வேலை செய்யாமல் முடங்கிப்போக என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதற்கிடையே எக்ஸ் தளத்தில் என்ன பிரச்சனை என்ற குழப்பம் பலரிடையே ஏற்பட்டது. இதுகுறித்து எக்ஸ் நிறுவனம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அமெரிக்க நேரப்படி காலை 11.01 மணியளவில் இந்த முடக்கம் ஆனது ஏற்பட்டது.
ட்ரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடிக்கு தமிழக அரசு ஒப்பந்தம்தமிழகத்தில் தொழில் முதலீட்டு மையமும் அமைகிறது
வளர்ச்சியின் அடையாளமாக திகழும் தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்யும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன, இதன்மூலம் மொத்தம் ரூ.1,300 கோடி முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 3-ந் தேதியன்று அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனங்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஈட்டன் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.200 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல்…