பார்முலா 4 கார் பந்தயம்- முக்கிய போட்டிகள் தொடங்கியது

சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. எப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் நேற்று கால தாமதம் ஆன நிலையில், பார்முலா 4 பந்தயம் நேற்று இரவு 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. நேற்று பயிற்சி போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் பார்முலா 4 கார் பந்தயத்தின் முக்கிய போட்டிகள் தொடங்கியது. போட்டிகளை ஆர்வமாக திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டு கண்டுகளிக்கின்றனர். நடிகர்கள் நாக சைதன்யா, ஜான் ஆபிரகாம், நடிகர் திரிஷா உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

வியப்பூட்டும் அனுபவம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்குச் சென்று பார்வையிட்டது வியப்பூட்டும் அனுபவமாக அமைந்தது. பல்வேறு வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் பற்றி கலந்துரையாடினோம். இந்தக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்த உறுதிபூண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 19 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 27-ந்தேதி இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்கா சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கலிபோர்னியாவில் வாழும் தமிழர்கள் விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நேற்றிரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 10.16 மணிக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து வேறு விமானம் மூலம் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் 14-ந்தேதி வரை அதாவது 19 நாட்கள் அரசு முறை பயணம் மேற் கொள்கிறார். இன்றிரவு சான்பிரான்சிஸ்கோ சென்றடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். 31-ந்தேதி சான்பிரான்சிஸ்கோவில் புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேச உள்ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். செப்டம்பர் மாதம் 2-ந் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து 12-ந்தேதி வரை தங்கி இருந்து பல்வேறு…

டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் துரோவ் பிரான்சில் அதிரடி கைது!

பிரபல சமூக செய்தி பரிமாற்ற செயலியாக விளங்கும் டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ. பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷிய நாட்டைச் சேர்ந்த 39 வயதான பாவெல் துரோவ் தனது சகோதரர் நிகோலாய் உடன் இணைந்து கடந்த 2013 ஆம் ஆண்டில் டெலிகிராம் செயலியை நிறுவினார். தற்போது துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆகவும் பணியாற்றி வரும் பாவெல் துரோவ் துபாய் குடிமகனாக அங்கு வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தனது பிரைவேட் ஜெட்டில் அஜர்பைஜான் நாட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் வைத்து வாரண்ட்டோடு பிரான்ஸ் போலீசார் அவரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. தீவிரவாத இயக்கங்களுக்குத் துணைபோவது,…

“தமிழகம் இந்தியாவின் மாநிலம் தானா என்ற கேள்வி எழுகிறது”?-மத்தியஅரசுக்கு முத்தரசன் கண்டனம்

“தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக இலங்கை கடற்படை தொடர்ந்து கூறி வருகிறது.கடும் புயல், காற்று மழை காலங்களில், கடல் எல்லைகளை தீர்மானிப்பது கடினம் என, பல்வேறு கடல் சார் மீனவர் ஒப்பந்தங்கள் உள்ளன. அனைத்தையும் இலங்கை அப்பட்டமாக மீறுகிறது. மத்திய அரசும் வழக்கம் போல் நடந்து கொள்வது தமிழகம் இந்தியாவின் மாநிலம் தானா என்ற கேள்வி எழுகிறது?” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை நெடுந்தீவு அருகே நேற்று (ஆக. 23) இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 11 பேரை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். மீனவர்கள் காங்கேயன் கடற்படை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் இத்தகைய அட்டூழியத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. முன்னர்,…

இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்து அடாவடி தொடரும் அத்துமீறல்கள் மத்தியஅரசின் நடவடிக்கை என்ன?

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகப்பட்டினம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடல் படையினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கை அழித்து வருகிறது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இதற்கிடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாந்தி பழனிசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த நாகரத்தினம், சஞ்சய், பிரகாஷ், சுதந்திர சுந்தர், சந்துரு, ரமேஷ், ஆனந்தவேல், நம்பியார் நகரைச் சேர்ந்த…

இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தத்தை உறுதி செய்ய முடியவில்லை நாடு திரும்பிய ஆண்டனி பிளிங்கன்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்காமல் உள்ளது. காசா மக்களை பாதுகாப்பதற்கும், பிணைக்கைதிகளை மீட்பதற்கும் போர் நிறுத்தம் அவசியம் என இந்த மூன்று நாடுகள் கருதுகின்றன. இதனால் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை தயார் செய்தது. இந்த பரிந்துரைகளை இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்ற அவர், இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை முடிவின் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. அதன்பின் மத்தியஸ்தராக விளங்கும் எகிப்து, கத்தார் நாட்டு அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதேவேளையில் ஹமாஸ் அமைப்பினர்…

வெனிசுலா ஒலிம்பிக் தடகள வீராங்கனை திடீர் மரணம்ஒலிம்பிக் கமிட்டி வலைதளத்தில் வெளியிட்டு உறுதி

வெனிசுலா நாட்டைச் சேர்ந்தவர் டேனிலா லாரியல். தடகள வீராங்கனையான இவர் சைக்கிள் ஓட்டப்பந்தய வீரர். இவர் ஒலிம்பிக் போட்டிகளில் 5 முறை பங்கேற்றுள்ளார். டேனிலா லாரியல் ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களாக டேனிலா வேலைக்கு வரவில்லை. இதையடுத்து வெனிசுலா ஒலிம்பிக் கமிட்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், லாஸ் வேகாஸ் குடியிருப்புக்கு சென்று அதிகாரிகள் பார்த்துள்ளனர். அங்கு டேனிலா லாரியல் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் டேனிலா உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஆகஸ்ட் 11 அன்று உணவு சாப்பிட்டபோது ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறலால் டேனிலா லாரியல் இறந்தது தெரிய வந்தது. அவரது மூச்சுக்குழாயில் காணப்பட்ட திட உணவு எச்சங்களால் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார் என அறிக்கை கூறுகிறது.

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்குபயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

இந்தியா-இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 14-ந்தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக அதே மாதம் 23-ந்தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் ‘சிவகங்கை’ என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக அந்தமானில் இருந்து ‘சிவகங்கை கப்பல்’ நாகை துறைமுகத்திற்கு கடந்த வாரம் வந்தது. இந்த கப்பலுக்கான சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த சிவகங்கை பயணிகள் கப்பலை புதுச்சேரி மந்திரி நமச்சிவாயம், நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ், செல்வராஜ் எம்.பி. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, 44…