சென்னை மழை, வெள்ளம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்

சென்னையில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் யானைகவுனி பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று கனமழையும், நாளையும் அதி கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, சென்னையில் நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து மழை, வெள்ளம் குறித்த பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

யானைக்கவுனி பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.

அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து சென்னை பெரம்பூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து துய்மை பணியாளர்களுடன் தேநீர் குடித்தார்.அவர்களுக்கு பிஸ்கட்வழங்கினார்.

Related posts

Leave a Comment