தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியலமைப்பு தின வாழ்த்து

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று சம்விதன் திவாஸ் என்றும் அழைக்கப்படும் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில அரசியலமைப்பு தினமாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், என்றும் பரிணமித்துக் கொண்டிருக்கும் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நமது விடுதலை வீரர்கள் கண்ட இலட்சிய இந்தியா எதிரொலிக்கிறது. அரசியலமைப்புச் சட்ட முகப்புரையை வாசித்து, அதில் கூறப்பட்டுள்ள உயர்ந்த விழுமியங்களையும் – அனைத்துக் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாத்திடுவோம்! என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்ட முகப்புரையை வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் உள்பட அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்பட அனைத்துத் துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்று காலை…

ஜார்கண்ட் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய ஹேமந்த் சோரன் – நவம்பர் 28 பதவியேற்பு

81 சட்டமன்றங்களைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்துக்குக் கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்றைய தினம் நவம்பர் 23 எண்ணப்பட்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34; காங்கிரஸ் 16; ராஷ்டிரிய ஜனதா தளம் 4 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட பாஜக 21 இடங்களில் வென்றது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஹேமந்த் சோரன் 54 இடங்களுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். கடந்த 24 ஆண்டுகளில் ஜார்கண்டில் ஆளும் கட்சி தொடர்ச்சியாக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஹேமந்த் சோரனை முதல்வராக முன்மொழிந்தனர். இந்நிலையில் இன்று [ ஞாயிற்றுக்கிழமை] ஜார்கண்ட் ஆளுநர் சந்தோஷ் குமார் காங்வர் – ஐ சந்தித்து ஆட்சி…

கோவில் யானை தாக்கி பாகன் பலி: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கடந்த 18-ந் தேதி தெய்வானை யானை தாக்கி யதில் யானை பாகன் உதய குமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் இறந்தனர். இந்த துயர செய்தியை கேட்டவுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் யானை பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டார். இந்த நிலையில் சம்பவ இடத்தை இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் யானை தெய்வானைக்கு கரும்பு கொடுத்தார். பின்னர் அவர் யானை பாகன் உதயகுமார் வீட்டிற்கு சென்று அவரது மனைவி ரம்யாவிடம், முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம், கோவில் நிதியில் இருந்து ரூ. 5 லட்சம், தக்கார் அருள் முருகன் சார்பில் ரூ.3…

உ.பி.யில்மசூதிக்குள் கோவில் இருப்பதாக கலவரம்.

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ‘ஷாஹி ஜமா’ மசூதியை ஆய்வு செய்ய வந்த போலீசார் மீது பொதுமக்கள் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் காரணமாக போலீஸ் மற்றும் பொது மக்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் அதிகமான காவல் துறையினர் காயமுற்றனர். ஷாஹி ஜமா மசூதி உள்ள இடத்தில் முன்பு ஹரி ஹர் மந்திர் என்ற கோவில் இருந்ததாகவும் அதனை 1529 இல் முகலாயப் பேரரசர் பாபர் இடித்தார். பின்னர் அப்பகுதியில் மசூதி கட்டப்பட்டது என்று அம்மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மசூதியை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது.…

தமிழ்நாட்டை பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்- நடிகர் சத்யராஜ் பேச்சு

முத்தமிழ் பேரவையின் பொன்விழா ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கினார். விருது பெற்ற நடிகர் சத்யராஜ் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 3 ஆண்டுகளாக திமுக ஆட்சி மிக மிக சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதற்கு மிகப்பெரிய உதாரணம், கோவைக்கு முதலமைச்சர் வந்திருந்தபோது இதுவரை எந்த தலைவருக்கும் கிடைக்காத வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது. ஓய்வறியா சூரியன் என்று டாக்டர் கலைஞரை கூறுவார்கள். அதேபோல், ஸ்டாலின் அவர்களும் கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு சுற்றுபவர். ஓயாமல் உழைப்புக்கு சொந்தக்காரர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அவர்களின் தலைமையில் தினந்தினம் திட்டங்களை யோசித்து அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்து தமிழ்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்று அனைவரும் ஆராய்ந்து தொடர்ந்து…

காலநிலை நிதி ஒப்பந்தத்தை இந்தியா நிராகரிப்பு

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை சார்ந்த பிரச்சினைகளை சமாளிக்கவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகின்றன. இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை நிதி தொகுப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிதி தொகுப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாநாட்டில் ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர் வழங்க இலக்கு நிர்ணயிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது தொடர்பாக அஜர்பைஜானில் நடைபெற்ற காலநிலை மாநாட்டின் நிறைவு நாளில் நிதி தொகுப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காலநிலை நிதி தொகுப்பை மூன்று மடங்கு உயர்த்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதனால் 2035 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர்கள்…

வயநாடு இடைத்தேர்தல்- மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி

கேரளாவின் வயநாடு மற்றும் மகாராஷ்டிராவின் நாந்தெட் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த செவ்வாய்கிழமை அன்று இடைத்தேர்தல் நடந்தது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா களமிறகினார். முதல் முறையாக தேர்தல் அரசியலுக்குள் நுழைந்துள்ள அவர் வெற்றிக்கனியை பறிப்பாரா ? என்று நாடு முழுவதும் எதிர்பார்த்த நிலையில், மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பிரியங்கா காந்தி முன்னிலை வகித்தார். அவர் காலை 9.45 மணி நிலவரப்படி 51,930 வாக்குகளை பெற்றார். அதன்பின்பு பெருவாரியான வாக்குகளை வெற்றியின் விளம்பில் பிரியங்கா காந்தி இருந்து வந்தார். இறுதியில், பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகளை பிரியங்கா காந்தி பெற்றுளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சத்யன் மோகேரி 2,11,407…

கலைஞர் 100 வினாடி வினா போட்டியின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது முதல்வர் ஸ்டாலின்

திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற ‘கலைஞர் 100 – வினாடி-வினா’ போட்டி பரிசளிப்பு நிகழ்வு சென்னை – அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பேசியதாவது, திராவிட இயக்கக் கருத்துகளை இங்கு கூடியிருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் பதியம் போடும் வகையில் நடத்தப்பட்ட, “கலைஞர் 100 – வினாடி-வினா” போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் உள்ளபடியே மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். ‘கலைஞர் 100’ மட்டுமல்ல; இந்தத் தமிழ்நாடும் – தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்! ஏன் என்றால், தமிழ்நாட்டில் இருக்கும் பல கோடி மக்களுக்கு ‘லைஃப்’ கொடுத்ததால்தான், கலைஞர் இன்னும் ‘லைவ்’-ஆக இருக்கிறார். தலைவர் கலைஞரின் வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், “ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனுடைய மரணத்தில்…

புதுவை மணவெளி தொகுதி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடியே 56 லட்சத்திற்கு கடன் உதவி சட்டப்பேரவை தலைவர் செல்வம் வழங்கினார்

மணவெளி தொகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடியே 56 லட்சத்திற்கு கடன் உதவிக்கான காசோலைகளை சட்டப்பேரவை தலைவர் செல்வம் வழங்கினார். புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மணவெளி தொகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி கடன், நலிவுற்றோர் நிதி கடன், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்துவோர் சிறப்பு கடன், வங்கி இணைப்பு கடன் மற்றும் துவக்க நிதி என ரூ‌. 1 கோடியே 56 லட்சம் கடனுதவிக்கான காசோலைகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் 205 பயனாளர்களுக்கு தவளகுப்பத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன் இணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன் செயல் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் அப்பகுதி…

“3 ஆம் உலகப் போர் தொடங்கிவிட்டது” -உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி!

ரஷியா – உக்ரைன் போர் நடைபெற்றுவருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதியும் பிரிட்டனுக்கான தற்போதைய உக்ரைன் தூதருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார். உக்ரைன்ஸ்கா பிராவ்டாவின் விருது வழங்கும் விழாவில் உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி ஜலுஷ்னி கூறுகையில், “2024 ஆம் ஆண்டு மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது. 10,000 வட கொரிய ஆயதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் குர்ஸ்க் பகுதியில் நிலைநிறுத்தியிருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிராக ஈரானின் ட்ரோன்கள் மற்றும் பிற அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. உக்ரைனில் போரை நிறுத்துவதுகூட இன்னும் சாத்தியம்தான். ஆனால் சில காரணங்களால், எங்கள் ஆதரவாளர்கள் இதைப் புரிந்து கொள்ள விரும்பவில்லை. உக்ரைனுக்கு ஏற்கனவே பல எதிரிகள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்” என்றார். வலேரி ஜலுஷ்னி, உக்ரைனின் ராணுவ மற்றும் அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்து வருகிறார்.…