போர்ச் சூழல் போன்ற பல்வேறு காரணிகளால் உலக நாடுகளில் பாதுகாப்பாக வைத்திருக்கும் தங்க கையிருப்பை இந்தியாவுக்கு ஆர்பிஐ மாற்றி வருகிறது. உலகிலேயே அதிக தங்க கையிருப்பை கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு ஒரு முன்னணி இடம் இருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. அண்மையில், தீபாவளியையொட்டி வரும் தாந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு, லண்டனில் உள்ள இங்கிலாந்து வங்கியில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 102 டன் தங்கத்தை சப்தமில்லாமல், இந்தியாவின் பாதுகாப்பான இடத்துக்கு இடம் மாற்றியிருக்கிறது ஆர்பிஐ. இதற்கு முன்பு, இங்கிலாந்து வங்கியிலிருந்து 100 டன் தங்கத்தை உள்நாட்டுப் பெட்டகங்களுக்கு இந்தியா மாற்றியிருந்தது. வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு தங்கத்தைக் கொண்டு வருவது மிகவும் ரகசியமாக, சிறப்பு விமானம் மூலம், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நமது உள்நாட்டில் மிகச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதன் உறுதித் தன்மையையும் இது வெளிப்படுத்துகிறது.…
Category: முதன்மை செய்திகள்
113 வயதிலும் ஜனநாயக கடமையாற்றிய மூதாட்டி..!
மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், 113 வயதான காஞ்சன்பென் பாட்ஷா என்ற மூதாட்டி தனது வாக்குரிமையைப் பயன்படுத்தி ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், மும்பையில் 113 வயது மூதாட்டி ஒருவர் தனது வயது மற்றும் உடல் பலவீனத்தையும் கருத்தில் கொள்ளாமல், வாக்களித்தேயாக வேண்டும் என்ற நோக்கத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்து வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினைச் செலுத்தியுள்ளார். 113 மூதாட்டி ஒருவர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது அங்கிருந்தோரை ஆச்சரியப்படவைத்தது. வாக்களித்தப் பின்னர் மூதாட்டி அசைக்கமுடியாத நம்பிக்கையையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தினார். மும்பையில் வசித்துவரும் காஞ்சன்பென் ஒவ்வொரு மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலிலும் வாக்களித்து வருகிறார். இந்த செயலை…
நடுரோட்டில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்
ஓசூர் குற்றவியல் நீதிமன்றம் அருகே கண்ணன் என்ற வழக்கறிஞர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் ஜூனியர் வழக்கறிஞர் கண்ணனை பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கறிஞர் கண்ணன் நீதிமன்ற வளாகத்திலேயே அரிவாளால் வெட்டப்பட்டதை கண்டித்து நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உ.பி. இடைத்தேர்தல்.. இஸ்லாமியர்களை வாக்களிக்க விடாமல் தடுத்த 7 போலீசார் சஸ்பெண்ட் தேர்தல்துறை அதிரடி
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் 9 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலையில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் வாக்குப் பதிவில், இஸ்லாமிய வாக்காளர்களை போலீசார் வாக்களிக்க விட மறுப்பதாக உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு புகார் அளித்தார். முஸ்லிம் பெண்களிடம் புர்காவை கழற்ற கூறியும் முஸ்லிம் ஆண்களிடம் தேவையின்றி ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை போலீசார் கேட்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து, முஸ்லிம் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்த 7 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளியில் குத்திக்கொலை செய்யப்பட்ட ஆசிரியை- பட்டுக்கோட்டையில் பரபரப்பு
பள்ளி ஆசிரியை ஒருவர் இன்று வகுப்பறைக்குள் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருதலைக்காதலால் இந்த விபரீத சம்பவம் நடந்து இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு:- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்துள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை கிராமத்தை சேர்ந்த ரமணி (வயது26) என்பவர் தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவரை அதே கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்தார். அவரது காதலை ஆசிரியை ரமணி ஏற்காமல் தனது பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். ஆசிரியை ரமணி வழக்கம்போல் இன்று (புதன் கிழமை) காலை வகுப்பறையில் பாடம்…
பாகன் நினைவில் 3-வது நாளாக சாப்பிடாத தெய்வானை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெய்வானை யானையை பராமரிக்க 3 பாகன்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பாகன் உதயகுமார் என்பவர் இருந்தார். அப்போது அவரது உறவினரான சிசுபாலன் என்பவர் யானை முன்பு வெகு நேரம் செல்பி எடுத்ததால் தெய்வானை யானை ஆத்திரமடைந்து சிசுபாலனை தாக்கியது. அப்போது பின்னால் இருந்து சிசுபாலனை காப்பாற்ற ஓடி வந்த உதயகுமாரை பாகன் என்று தெரியாமல் துதிக்கையால் தள்ளியது. இதில் 2 பேரும் உயிரிழந்தனர். பின்னர் உயிரிழந்தது பாகன் என்று தெரிந்ததும் யானை அவரை துதிக்கையாயால் தட்டி எழுப்பி உள்ளது. உதயகுமார் இறந்து விட்டார் என்று தெரிந்ததும் யானை மண்டியிட்டு அவரையே பார்த்துக் கொண்டே இருந்துள்ளது. மேலும் போலீசார் உதயகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுக்க முற்பட்ட போதும் எடுக்க விடாமல் தடுத்துள்ளது. அப்போது மற்ற பாகன்கள் ராதாகிருஷ்ணன், செந்தில்…
ஆந்திராவில் பொதுமக்கள், போலீசாரை தாக்கிய நிர்வாண பெண் அகோரி
ஆந்திர மாநிலம், மங்களகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ நகருக்கு 25 வயது மதிக்க தக்க பெண் அகோரி ஒருவர் நிர்வாண நிலையில் காரில் வந்தார். அங்குள்ள வாட்டர் சர்வீஸ் மையத்திற்கு வந்த அகோரி தனது காரை சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். அகோரி ஒருவர் நிர்வாண நிலையில் வந்துள்ள தகவல் அப்பகுதியில் பரவியது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்தனர். அப்போது சிலர் தங்களது செல்போனில் பெண் அகோரியை வீடியோ எடுத்தனர். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த பெண் அகோரி தன்னிடம் இருந்த திரிசூலத்தால் பொதுமக்களை விரட்டி விரட்டி தாக்கினார். தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ஓடிய பலர் தேசிய நெடுஞ்சாலை நடுவில் உள்ள தடுப்பு மற்றும் செடிகள் மீது விழுந்து எழுந்து காயமடைந்து தப்பிச் சென்றனர். மங்களகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பெண் அகோரியை…
கும்பகர்ணன் 6 மாதம் தூங்கமாட்டார்.. ரகசியமாக இயந்திரங்களை உருவாக்குவார்- உ.பி. கவர்னர் பேச்சு
ராமாயண புராணத்தில் ராவணனின் தம்பியாக வரும் கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் என்றும் ரகசியமாக அவர் ஆய்வகத்தில் இயந்திரங்களை உருவாக்கினார் என்று உத்தரப்பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள குவாஜா முயினுத்தீன் சிஷ்டி பாஷா விஸ்வவித்யாலயா கல்லூரியின் 9 ஆவது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆனந்திபென் படேல் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கும்பகர்ணன் 6 மாதங்கள் தூங்குவார் என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால் அது உண்மையில்லை. கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப நிபுணராக இருந்தார். அதனால் தான் கும்பகர்ணன் பொதுவெளியில் 6 மாதங்களுக்கு வரக்கூடாது என்று ராவணன் தடை விதித்தார். கும்பகர்ணன் தனது ஆய்வகத்தில் ஆறு மாதங்கள் ரகசியமாக இயந்திரங்களை தயாரித்தார். அதனால் தான் அந்த தொழில்நுட்பம் மற்ற நாடுகளுக்கு செல்லக் வில்லை. சீதையை ராவணன் விமானத்தில் தான்…
பாராளுமன்றம் 25-ஆம் தேதி கூடுகிறது- மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தகவல்
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 25-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சிகள் கூட்டத்துக்கு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார். வருகிற 24-ந்தேதி காலை 11 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார். இந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவும், தற்போது பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வில் உள்ள வக்பு வாரிய மசோதாவும் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 மசோதாக்களையும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வரும் வேளையில். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இதனால் பல்வேறு விஷயங்கள் குறித்து பாராளுமன்றத்தில் அனல்…
எல்.ஐ. சி இணையதளத்தில் இந்தி திணிப்பு- எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது. இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது. மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல. அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
