நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் மத்திய நிதிக்குழுவினர் ஆய்வு

டெல்லியில் இருந்து மத்திய அரசின் 16-வது நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில், செயலர் ரிவத்விக் பாண்டே, உறுப்பினர்கள் அன்னி ஜார்ஜ், அஜய் நாராயன்ஜா, மனோஜ் பாண்டே, அன்னி ஜார்ஜ் மேத்யு, சவும்யா கண்டி கோஷ், உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் 4 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளனர். அடுத்த 5 ஆண்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் வரி வருவாய் திட்டம் எப்படி இருக்க வேண்டும், எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும், என்பது தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் அதற்கான தரவுகளை ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று இந்த நிதிக்குழு சேகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் இயங்கிவரும் 15 கோடி லிட்டர் கொள்ளளவு, கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை குழுவினர் ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள், உற்பத்தி, பாது பயன்பாடு, வருவாய்…

எல்.ஐ.சி. வலைதளம் மூலம் இந்தி திணிப்பு – முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் .

எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் இந்தி மொழியில் மாறியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், வலைதளத்தின் மொழியை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. பலர் வலைதள மொழியை ஆங்கிலத்திற்கு மாற்ற முடியாததால் அவதியுற்றனர்பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.-யின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் ஆங்கிலம் மொழியை தேர்வு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாவதால் உடனடியாக சீர் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. எல்.ஐ.சி. வலைதளத்தின் முகப்பு பக்கம் இந்தி மொழியில் காட்சியளித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், “எல்.ஐ.சி. இணையதளம் இந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது!” “இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழி திணிப்பு தவிர வேறில்லை. எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது.…

உடுப்பியில் நக்சலைட்டின் முக்கிய தலைவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ஹெப்ரி போலீஸ் எல்லைக்குட்பட்ட கபினாலே வனப்பகுதியில் நேற்று இரவு 5 நக்சலைட்டுகள் கொண்ட குழுவினர் உணவு பொருட்களை வாங்க வந்தனர். இதுப்பற்றி நக்சல் எதிர்ப்புப்படை போலீசாருக்கு தகவல் தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் நக்சலைட் தலைவர் விக்ரம் கவுடா என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மற்ற 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- கேரளாவில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்ததையடுத்து நக்சலைட்டுகள் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை நோக்கி வந்துள்ளனர். இதில் விக்ரம் கவுடா என்கவுன்டர் செய்யப்பட்டார். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றனர். இந்த துப்பாக்கி சண்டை கபினாலே பஸ் நிலையத்தில் இருந்து 7 கி.மீ, தூரத்தில் உள்ள…

போர்களால் உலகளாவிய தெற்கு நாடுகள் உணவு, எரிபொருள், உரம் நெருக்கடியால் பாதிப்பு- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவியை பிரேசில் வகித்து வருகிறது. பிரேசில் நாட்டில் ஜி20 மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. சமூக உள்ளடக்கம் மற்றும் பட்டினி, வறுமைக்கு எதிரான போராட்டம் என்ற தலைப்பில் நடப்பு ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- போர்களால் உலகின் தெற்கு நாடுகள் (Global South) உணவு, எரிபொருள், உரம் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, உலகின் தெற்கு நாடுகளின் சவால்கள் மற்றும் முன்னுரிமைகளை மனதில் கொள்ளும்போதுதான் நமது விவாதங்கள் வெற்றிபெற முடியும். டெல்லி உச்சிமாநாட்டின் போது ஆப்பிரிக்க யூனியனுக்கு G20-ன் நிரந்தர பிரதிநிதி அந்தஸ்தை வழங்கியதன் மூலம் உலகின் தெற்குப் பகுதியின் குரலை வலுப்படுத்தியதுபோல், உலகளாவிய நிர்வாக அமைப்புகளை சீர்திருத்துவோம். இவ்வாறு பிரதம் மோடி கூறினார்.…

இலங்கையின் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு

கொழும்பு: இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசில், 21 உறுப்பினா்கள் அடங்கிய சிறிய அமைச்சரவை திங்கள்கிழமை பொறுப்பேற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், வீண் செலவுகளைக் குறைக்கும் வகையில் ஆட்சி முறையில் சீா்திருத்தம் மேற்கொள்வதாக அதிபா் அனுர குமார திசாநாயக குமார திசாநாயக தோ்தலுக்கு முன்னரே வாக்குறுதி அளித்திருந்தாா். மக்கள் வரிப்பணம் விரயமாவதைத் தடுப்பதற்காக, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சா்களைக் கொண்ட அரசை அமைப்பதாகவும் அவா் கூறியிருந்தாா். இந்த நிலையில், நாடாளுமன்றத் தோ்தலுக்குப் பிறகு திங்கள்கிழமை அவா் அறிவித்த அமைச்சரவையில், 21 அமைச்சா்கள் மட்டுமே இடம் பெற்றளனா். இதன் மூலம், ஆட்சி முறை சீா்திருத்தம் தொடா்பான தனது வாக்குறுதியை திசாநாயக நிறைவேற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் திசாநாயக வெற்றி பெற்ற பிறகு, அதிபா் உள்பட வெறும் 3 அமைச்சா்களுடன் அரசு செயல்பட்டு…

உக்ரைன் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்த ராணுவத்திற்கு ரஷிய அதிபர் அனுமதி!

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷியப் படைகளுக்கு அதிபர் விளாதிமீர் புதின் அனுமதி அளித்துள்ளார். நீண்ட தூரம் தாக்கக் கூடிய அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்திக் கொள்ள உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்ததற்கு ரஷிய அதிபர் பதிலடி கொடுத்துள்ளார். எதிரி நாடுகள் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தும் நோக்கில் முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட ரஷியாவின் புதுப்பிக்கப்பட்ட கொள்கையில் அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார். புதுப்பிக்கப்பட்ட அணு ஆயுத கொள்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டதை குறிப்பிட்டு, மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தங்களின் ராணுவ ஆதரவை விரிவுபடுத்தியுள்ளதால், தேசிய பாதுகாப்புக்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரஷிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வழங்கிய தொலைதூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு வாஷிங்டன் அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.…

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் விழாசிலைக்கு ஆளுநர் முதல்வர்- காங்கிரசார் மாலையணிவிப்பு

புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் கைலாஷ்நாதன்,முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்தனர்.அமைச்சர்கள் லட்சுமிநாராயணன்,தேனீ.ஜெயக்குமார், சாய்சரவணன் துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏகேடி ஆறுமுகம், பாஸ்கர்(எ)தட்சணாமூர்த்தி,ரமேஷ்,லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி, முன்னாள் அமைச்சர் வல்சராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கள் நீலகங்காதரன், அனந்தராமன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் தனுசு, கருணாநிதி, வக்கீல் மருதுபாண்டியன், ஆர்.இ. சேகர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன், மகளிர் காங் தலைவி பஞ்சகாந்தி உள்ளிட்ட பலர்…

வாட்ஸ்அப் தடைசெய்யகோரிய மனு தள்ளுபடி

இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கேரளாவை சேர்ந்த ஓமனகுட்டன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வாட்ஸ்அப் செயலியை தடை செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.அந்த மனுவில், குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதி, 2021-க்கு இணங்க மறுத்துவிட்டதாகவும், இதனால் வாட்ஸ்அப் செயலியின் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் அரசியல் அமைப்பின் 21-வது பிரிவின் கீழ் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை வாட்ஸ்அப் மீறி வருவதாகவும், தேசிய நலன் மற்றும் பாதுகாப்புக்கு வாட்ஸ்அப் செயலி அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு…

டெல்லியின் முதல் தலித் மேயராக மகேஷ் குமார் கிச்சி தேர்வு

டெல்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சி வெற்றி பெற்றுள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்த மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த நிலையில், மாநகராட்சி அவையில் ஏற்பட்ட தொடர் அமளி மற்றும் ஆம் ஆத்மி- பாஜக இடையேயான மோதல், அப்போதைய முதல்வர் அரவிந்த் கேஜரிவால் டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைதானது ஆகிய காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை. ஏழு மாத தாமதத்துக்குப் பிறகு, இன்று(டெல்லி மேயர் தேர்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி சார்பில் தேவ்நகர் கவுன்சிலர் மகேஷ் கிச்சி, பாஜகவின் ஷகுர்பூர் கவுன்சிலர் கிஷண் லால் போட்டியிட்டனர். டெல்லி ல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் மகேஷ் குமார் கிச்சி 133 வாக்குகள் (2 செல்லாதவை), கிஷண் லால் 130 வாக்குகள் பெற்ற நிலையில், 1 வாக்கு வித்தியாசத்தில்…

மணிப்பூரின் 6 பதற்றமான பகுதிகளில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்தது

மணிப்பூர் மாநிலத்தின்பதற்றமானதாக அறிவிக்கப்பட்ட 6 பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் செயல்பாட்டு வசதிக்காக, ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) மத்திய அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்கு மாவட்டத்தின் சேக்மாய், லாம்சங், இம்பால் கிழக்கு மாவட்டத்தின் லாம்லை, ஜிரிபாம் மாவட்டத்தின் ஜிரிபாம், காங்போக்பியின் லீமாங்கோங் மற்றும் பிஷ்னுபூரின் மோய்ராங் ஆகிய6 காவல் நிலைய பகுதிகளில் ஆயுதப் படைகளின் சிறப்பு சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனக் கலவரம் காரணமாக அந்தப் பகுதிகளில் தொடர்ந்து கொந்தளிப்பான சூழல் நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி மணிப்பூர் அரசு மாநிலம் முழுவதும் AFSPA சட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த ஆறு காவல் நிலையங்கள் உட்பட 19…