பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடந்தபோது ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி வெற்றி பெற்று எம்.பி. ஆனார். ரேபரேலி தொகுதியில் அவர் மொத்தம் 6 லட்சத்து 87 ஆயிரத்து 649 வாக்குகள் பெற்றார். சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று இருந்தார். அதுபோல வயநாடு தொகுதியில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 444 வாக்குகள் பெற்று இருந்தார். அந்த தொகுதியில் அவர் 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி. பதவியில் நீடிக்க முடியும் என்பதால் ராகுல்காந்தி வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சி ஏற்படுத்த…
Category: முதன்மை செய்திகள்
வெடிகுண்டு மிரட்டலுக்கு உடந்தை.. ‘எக்ஸ்’ தளத்தின் மீது குற்றம்சாட்டும் மத்திய அரசு
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 200 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் உள்ளிட்ட முக்கிய இந்திய விமான நிறுவனங்கள் வெடிகுண்டு மிரட்டல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ. 500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல்களுக்கு துணை போவதாக பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் மீது மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. எக்ஸ் தளத்தில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களின் யூசர் ஐடி மற்றும் டொமைன் தொடர்பான தகவல்களை போலீஸ் கோரியுள்ளது. ஆனால் தளத்தில் தனிநபர் உரிமைகள் காரணமாக அந்த தகவல்களைத் தர மறுத்துள்ளது எக்ஸ். இந்த தளத்தின் வாயிலாகவே பல…
இந்தியாவின் மதச்சார்பின்மை முகவுரையை மாற்ற சுப்ரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கு- தள்ளுபடி
இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் உள்ள ‘மதச்சார்பற்ற’ மற்றும் ‘சோஷியலிச’ என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆகியோர் இந்த மனுவை அளித்திருந்தனர். இந்நிலையில் இந்த மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 1976 ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் 42 வது சட்டத்திருத்தத்தின் மூலம் இந்திரா காந்தி அரசால் பாராளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்தப்படாமல் தன்னிச்சையாக இந்த வார்த்தைகள் முகவுரையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது செல்லாது. அவ்வாறு செல்லும் என்றால், அடுத்து வரும் அரசுகளும், தங்களுக்கு ஏற்ப முகவுரையை தொடர்ந்து திருத்தம் செய்யும் வாய்ப்பு உள்ளது. முகவுரையை எழுதியபோது, சோஷலிசம் என்ற வார்த்தையை சேர்த்தால்,…
த.வெ.க. மாநாடு வெற்றி பெற கோவிலில் விஜய் ரசிகர்கள் வழிபாடு
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வருகிற 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு வெற்றி பெற வேண்டி புதுவை யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்ட விஜய் ரசிகர்கள் திருநள்ளாறில் உள்ள புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் வழிபாடு நடத்தினர். சனிபகவானின் காலடியில் மாநாட்டு பத்திரிகையை வைத்து விஜய் பெயருக்கு அர்ச்சனை செய்து மாநாடு வெற்றி பெற வேண்டினர்.
புதுச்சேரியில் இலவச அரிசி சர்க்கரை வழங்கல் நிகழ்ச்சி ஆளுநர் முதல்வர் தொடங்கிவைத்தனர்
புதுச்சேரி அரசு, குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில்நியாய விலைக்கடைகள் திறப்புமற்றும் தீபாவளி பண்டிகை பரிசு பொருள் இலவசஅரிசி – சர்க்கரை வழங்கும் தொடங்க விழா மேட்டுப்பாளையம்தொழிற்பேட்டை சாலையில் நடைபெற்றது. இதில் துணைநிலைஆளுநர் கைலாஷ்தநாதன் சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு பயனாளிகளுக்கு தலா 10 கிலோஅரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கி தீபாவளிபண்டிகை பரிசு பொருட்கள் வழங்குவதைதொட ங்கி வைத்தார். இதில் முதல்வர் ரங்கசாமி, சட்ப்பேரவைத்தலைவர் செல்வம் அமைச்சர்கள், அமைச்சர்கள்நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், ஜெயக்குமார்,திருமுருகன், சாய ஜெ சரவணன்குமார், துணைசபாநாயகர் ராஜவேலு மற்றும் எம்..எல்.ஏ.க்கள்ஏகேடி ஆறுமுகம், கேஎஸ்பி ரமேஷ், சிவசங்கர்,தலைமைச்செயலர் சரத்சவுகான், குடிமைப்பொருள்வழங்கல் மற்றும் நுகர்வோர் வழங்கள்துறைசெயலர் முத்தம்மா, இயக்குதர் சத்தியமூர்த்திஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
தீபாவளி- பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள்!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தமிழகத்தில் பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையிலும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறும் சில புதிய கட்டுப்பாடுகள் அரசு சார்பில் வழங்கப்படும். இந்த ஆண்டு பட்டாசுகள் வெடிக்க நேரக்கட்டுப்பாடு இருக்குமா? அல்லது ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாட்டில் (2 மணிநேரம் பட்டாசு வெடிக்கலாம்) மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்தது. தீபாவளியையொட்டி தமிழக அரசு சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவையாவன, தவிர்க்க வேண்டியவை
புதுச்சேரியில் தோன்றிய நீல கடல்
புதுச்சேரி ராக் கடற்கரையில், நேற்று கடல் அலை நீல நிறத்தில் ஜொலித்தபடி கரையை முட்டி மோதி கரைந்தன. இந்த அழகிய காட்சியை மக்கள் வியப்புடன் பார்த்து வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இதேபோல் மரக்காணம் பகுதிகளிலும் கடல் அலை நீல நிறத்தில் நேற்று ஜொலித்தது. இதுகுறித்து கடல் வாழ் உயிரின உயர் ஆய்வு மைய பேராசிரியர் ஒருவர் கூறியிருப்பதாவது:- கடல் என்பது அதிக அளவு உயிரினங்கள் உள்ள பல்லுயிர் நிறைந்த பகுதி. இதில் நம் கண்களுக்கு தெரியாத பாக்ட்டீரியா மற்றும் பாசி போன்ற உயிரினங்கள் அதிகம் உள்ளன. அதுபோன்று கடலில் வாழும் ஒரு செல் உயிரியான ‘டைனோ ப்ளாச்சு லேட்’ வகையை சேர்ந்த ‘நாட்டிலுக்காசின்டிலன்ஸ்’ எனும் மிதவை நுண்ணுயிரியால் இப்போது கடல் நீல நிறத்தில் ஜொலித்து வருகிறது.…
ஜம்மு காஷ்மீரில் முதல் சர்வதேச மாரத்தான்முதல்வர் உமர் அப்துல்லா – கலந்து கொண்டு ஓடினார்
ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல தடகள வீரர்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். இந்த மாரத்தான் போட்டியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் பங்கேற்றுள்ளார். பயிற்சி எதுவும் இன்றி ஓடத் தொடங்கிய அவர், கிலோ மீட்டருக்கு 5 நிமிடங்கள் 54 வினாடிகள் என்ற சராசரி வேகத்தில் 21 கி.மீ. ஓடி சாதனை படைத்தார்.அப்துல்லா ஓடும்போது அவரது குடும்பத்தினர் மற்றும் சக வீரர்கள் உற்சாகப்படுத்தி ஊக்கம் அளித்தனர். இதற்கு முன்பு 13 கி.மீ.க்கு மேல் ஓடியதில்லை என்று தெரிவித்த அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணா சனிக்கிழமை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, உடல் பரிசோதனைக்காக பெங்களூரு பழைய விமான நிலைய சாலையில் உள்ள மணிபால் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதால், திங்கள்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. எஸ்எம் கிருஷ்ணா (92), மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2009 முதல் 2012 வரை வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவிவகித்தார். முன்னதாக அவர் ஆகஸ்ட் மாதம், சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாள்களாக தேடப்பட்ட பயங்கரவாதிகள் 2பேர் கைது!
ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி, மக்களை அச்சுறுத்தி வந்த ‘ஜம்மு-காஷ்மீர் காஸ்னாவி படையைச்(ஜேகேஜிஎஃப்)’ சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் பூஞ்சில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையின் மூலம், பூஞ்சில் திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. நீண்டநாள்களாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளது குறித்து, காவல்துறையின் ஜம்மு பிரிவு கூடுதல் டிஜிபி ஆனந்த் ஜெயின் தெரிவித்ததாவது, “ஹரி கிராமத்தை சேர்ந்த அப்துல் ஆஸிஸ், மன்வார் ஹுசைன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருப்பது பாதுகாப்புப் படைகளின் சாதனையாகவே கருதுகிறோம். ராஷ்டிரிய ரைஃபில்ஸின் 37-வது பிரிவு மற்றும் மத்திய ரிசர்வ் காவல்படையின்(சி ஆர் பி எஃப்) 38-வது பிரிவுகளுடன் இணைந்து காவல்துறையினர் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, மேற்கண்ட பயங்கரவாதிகள் இருவரும் பிடிபட்டுள்ளனர். அவர்களிடமிருந்த 3 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பூஞ்ச் மாவட்டத்தில் கோயில்,…
