தீபாவளி பண்டிகையை ஒட்டி புதுச்சேரியில் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ந்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அக்.30 முதல் நவ.3-ந்தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை விடும் நிலையில் புதுவை விடுதலை நாள் உள்ளிட்ட 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.2 கல்லறை நாள், நவ.3 ஞாயிறு என மொத்தம் 5 நாட்கள் தீபாவளியை முன்னிட்டு புதுவையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான நவ.1-ந்தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்.31-ந்தேதி தீபாவளி பண்டிகை, நவ.1 வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளதால் சனி, ஞாயிறு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
Category: முதன்மை செய்திகள்
பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திய நபர்… குளத்திற்கு நடுவில் பாய்ந்த கார்- போலீசார் வழக்குபதிவு
தெலுங்கானா மாநிலம் ஜங்கானில் குளத்தை ஒட்டிய வயல்வெளிக்கு அருகில் கார் ஓட்டுவதற்காக ஒருவர் பயிற்சியெடுத்து வந்துள்ளார். அப்போது அவருக்கு கார் ஓட்ட சொல்லிக்கொடுத்த நபர் பிரேக் போட சொல்லியுள்ளார். அப்போது பிரேக்கிற்கு பதிலா ஆக்சிலேட்டரை அந்த நபர் அழுத்தியுள்ளார். இதனால் கார் பக்கத்தில் இருந்த ஒரு குளத்திற்குள் விழுந்துள்ளது. குளத்திற்குள் கார் மூழ்க தொடங்கியதை அடுத்து இருவரும் காரை விட்டு குளத்திற்குள் குதித்துள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை காப்பற்றியுள்ளனர். இருவருக்குமே நீச்சல் தெரியும் என்பதாலும், குளம் ஆழமாக இல்லாததாலும் இருவரும் உயிர் பிழைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டியதாக போலீசார் அவர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய 4 பெண்களிடம் விசாரணை
சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நேற்று மாலை தொலைக்காட்சி பொன் விழா கொண்டாடப்பட்டது. அதனுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழாவும் நடந்தது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழா தொடங்கும்போது தேசிய கீதத்தை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. தூர்தர்ஷன் அலுவலகத்தில் பணிபுரியும் 4 பெண்கள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாடினார்கள். “நீராருங் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்ட மிதில்………….” இவ்வாறு முதல் இரண்டு வரிகளை பாடிய அந்த 4 பெண்களும் 3-வது வரியான, தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்- என்ற வரியை படிக்க தொடங்கும் போது சற்று திணறலுக்குள்ளனார்கள். 3 வினாடிகள் திணறிய அந்த பெண்கள் அந்த வரியை தவிர்த்து விட்டு அடுத்து 4-வது வரியான, “தக்கசிறு பிறைநுதுலும் தரித்தநறுந் திலகமுமே….”…
தறிகெட்டு ஓடிய சொகுசு கார்- விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்ப முயன்ற நபருக்கு சரமாரி அடி:
சென்னை எழும்பூர் அருகே சொகுசு கார் ஒன்று தறிகெட்டு ஓடி விபத்தை ஏற்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், காவல் ஆணையர் அலுவலகம் முன்பு விபத்து ஏற்படுத்தியுள்ளது. இதில், பலத்த காயங்களுடன் குழந்தை உள்பட 6 பேர் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில், ஆட்டோவின் முன்பகுதி நசுங்கியுள்ளது. மேலும், கார், இரண்டு பைக்குகளும் பலத்த சேதமடைந்துள்ளன. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்றவர்களை பொதுமக்களே பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். காரை ஓட்டி வந்தவர் மற்றும் அவரது மகன் என இருவரும் கைதாகி உள்ளனர். மேலும், காரின் முகப்பில் உகாண்டாவுக்கான தூதரக அலுவலகம் என குறிப்பிடப்பட்ட போஸ்டர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீகாரில் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்புள்ள கள்ளச்சாராய பொருளாதாரம் இயங்கி வருகிறது – தேஜஸ்வி யாதவ்
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 37 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் நிதிஷ்குமாரை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். தேஜஸ்வி யாதவ் அவரது எக்ஸ் பதிவில், “பூரண மதுவிலக்குதான் நிதிஷ்குமாரின் மிகப்பெரிய ஊழல். சுமார் ரூ.30,000 கோடி மதிப்புள்ள கள்ளச்சாராய பொருளாதாரம் பீகாரில் இயங்கி வருகிறது. நிதிஷ்குமாரின் கட்சியினர்தான் இதன்மூலம் அதிக பலன்களை பெற்று வருகின்றனர். தனது முதல் இரு ஆட்சிக்காலத்தில் பீகாரின் மூலை முடுக்கெங்கும் மதுக்கடைகளை திறந்தவர் தற்போது மகாத்மா வேஷம் போடுகிறார். தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கையின்படி, பீகாரில் மது தடை செய்யப்பட்டிருந்தாலும், மகாராஷ்டிராவை விட பீகாரில் அதிகமானோர் மது அருந்துகின்றனர். தற்போது பீகாரில் 15.5 சதவீதம் பேர் மது அருந்துகின்றனர். மது விற்பனைக்கு தடை இல்லாத மகாராஷ்டிராவில் வெறும்…
காவல்துறையின் ஒருங்கிணைந்த முயற்சிதான் தேவைப்படுகிறது-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தென் மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு நீர் மேலாண்மை போன்ற பல்வேறு அடிப்படையில் தென்மாநிலங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாம் செயல்பட்டு வருகிறோம். அந்தவகையில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளான போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கிடையேயான குற்றச்செயல்கள், இணையவழி குற்றங்கள் போன்ற தீவிர குற்றச்சம்பவங்களில் இருந்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற பொதுவான குறிக்கோளை அடைவதற்காக நாம் கூடியிருக்கிறோம். இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வதில் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு முன்னற்றங்களை அடைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரகவனம் செலுத்தி வருகிறது. போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடுப்பதற்கு நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். தமிழ்நாடு காவல்துறையின் தொடர் முயற்சிகளின் பலனாக, மாநிலத்தில் கஞ்சா பயிரிடப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வியூகங்களை…
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்கும் தீா்மானம்: துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற அமைச்சரவை தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்கக் கோரி, முதல்வா் ஒமா் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீா்மானத்தின் வரைவை பிரதமா் மோடியிடம் வழங்க விரைவில் ஒமா் தில்லி செல்ல உள்ளதாகவும் வெள்ளிக்கிழமை உள்ளூா் நாளிதழில் செய்தி வெளியானது. இந்த நிலையில், அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீா்மானம், ஆளுநரிடம் ஒப்புதல் பெற அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்கக் கோரும் தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் இன்று (அக். 19) உறுதிப்படுத்தியுள்ளன. இதனிடையே, ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை கோரும் தீர்மானத்தில், முன்பு இருந்ததைப் போல் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை…
வால்பாறையில் 4 வயது சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க குழு அமைப்பு
கோவை மாவட்டம் வால்பாறையில் 4 வயது சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளியின் 4 வயது மகள் அப்சராவை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் பரபப்பை ஏற்படுத்தியது. சிறுமியின் குடும்பத்திற்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கவும், இரவில் வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சண்டிகர் நகரில் ஓடும் பேருந்தின் கதவில் தொங்கியபடி பயணம் செய்த பயணி
சண்டிகர் நகரில் ஓடும் பேருந்தின் கதவில் தொங்கியபடி ஒருவர் பயணித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட நபர் அலுவலகம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அவ்வழியே பேருந்து வந்துள்ளது. ஆனால் ஓட்டுநரும் நடத்துநரும் அவரை பேருந்தில் ஏற அனுமதிக்கவில்லை. இதனால் பேருந்தின் கதவின் அருகே தொங்கியபடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அவர் பயணித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் புகார் அளித்ததன் அடிப்படையில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது- துணை முதல்வர் உதயநிதி
திருவண்ணாமலை மாநகரில் மக்களின் பொதுப் போக்குவரத்து வசதிக்காக சுமார் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், அடி அண்ணாமலை கிராமத்தின் அருகே, 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சுகாதார வளாகம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “தம்பி உதயநிதி ஸ்டாலின், நேற்று கிரிவலம் போயிருக்கிறார். பவன் கல்யாண் சொன்னது உதயநிதி மனதில் தைத்துவிட்டது என்று நினைக்கிறேன். அதனால் அதிகப்படியான மக்கள் கிரிவலம் வரும் நிலையில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதில் மகிழ்ச்சி.…
