திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். அங்கு, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு, ” மாநில உரிமைகளை பெற அண்ணா, கலைஞர் வழியில் அயராது உழைப்போம்” என அண்ணா நினைவு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
Category: முதன்மை செய்திகள்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் ஆடலும் பாடலும்தான் நடந்தது’ – ராகுல் காந்தி
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட தீவிர இந்து அமைப்பினரால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் மத்திய பாஜக அரசின் முன்னெடுப்பில் ரூ.1,800 கோடி பொருட்செலவில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் உள்ளது. கட்டுமானப் பணிகள் மீதமிருந்த நிலையில் கடந்த கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அவசர அவசரமாக கோவிலின் மூல விக்ரகமான பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா பிரமாண்டமான முறையில் நடத்தி முடிக்கப்பட்டது. இது மக்களவைத் தேர்தளுக்காக பாஜக நடத்திய நாடகமென எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியாவின் சினிமா, அரசியல் மற்றும் வியாபார பெரும்புள்ளிகள் பலர் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படாதது சர்ச்சையானது. தங்களுக்கு வந்த அழைப்பை நிராகரித்த காங்கிரஸ் இந்த விழா பெரும் பணக்காரர்களுக்காக நடத்தப்படுவது என்றும் அடித்தட்டு…
“பெய்ரூட் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழப்பு” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நஸ்ரல்லா பதுங்கியிருப்பதாக வந்தத் தகவலை அடுத்து அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று (வெள்ளிக்கிழமை) துல்லியமான வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் அதன் எக்ஸ் பக்கத்தில், “சையது ஹசன் நஸ்ரல்லா இனி தீவிரவாதத்தால் உலகை அச்சுறுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளது. நஸ்ரல்லாவின் மரணத்தை அறிவித்த இஸ்ரேஸ் பாதுகாப்புப் படையின் தலைமை அதிகாரி லெப்.ஜெனரல், ஹெர்சி ஹாலேவி, “இஸ்ரேல் மற்றும் அதன் குடிமக்களை அச்சுறுத்தும் யாரையும் நாங்கள் சென்றடைவோம். இது முடிவு அல்ல. இஸ்ரேல் மக்களை அச்சுறுத்தும் யாருக்கும் இது ஒரு எளிமையான செய்தி. அவர்களை எப்படி அடைவது என்று எங்களுக்குத் தெரியும்” என்று…
வானில் இனி 2 நிலா- நாளை முதல் பார்க்கலாம்
இதுவரை ஒற்றை நிலாவைதான் பார்த்து வருகிறோம். நாளை முதல் (ஞாயிற்றுக்கிழமை) 2 நிலவுகளை பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கு காரணம் மினி நிலவு (2024 பிடி5-ஐ) என அழைக்கப்படும் ஒரு சிறிய விண்கல் பூமியின் அருகே, சுமார் 14 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் வர இருக்கிறது. இது சுமார் 5 முதல் 20 மீட்டர் விட்டம் கொண்ட பாறையாகும். இதன் மீது சூரிய ஒளிப்பட்டு அது பூமியை நோக்கி திரும்பும். அப்போது நமக்கு வானில் இன்னொரு நிலாவும் தோன்றுவது போல் காட்சி அளிக்கும். ஆனால் இந்த மினி நிலவு, நிலவைவிட1 லட்சத்து 73 ஆயிரத்து 700 மடங்கு சிறியது என்பதால் நிலவு போல் ஜொலிக்காது. நிலாவை வெறும் கண்ணால் பார்க்கலாம். ஆனால் மினி நிலவை தொலைநோக்கி மூலம் மட்டுமே காணலாம். எனவே தொலைநோக்கி மூலம் வானை…
31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு” – முதல்வர் ஸ்டாலின் தகவல்
இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழகம்தான் முதல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில், திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். 31 லட்சம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.28) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில். 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழகம்தான் முதல்…
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலகினால் நானும் பதவி விலக தயார்- சித்தராமையா
கர்நாடகாவில் ‘முடா’ நில முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊழல் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாருக்கு…
ராஜிநாமாவுக்கு வாய்ப்பே இல்லை!-முதல்வர் சித்தராமையா
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசை சீர்குலைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். முடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கியதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு அளித்தார். இந்த வழக்கில், சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று உத்தரவிட்ட நீதிமன்றம், சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து சித்தராமையா முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மைசூருவில் செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் சித்தராமையா, நான் முதல்வர் பதவியை ஒருபோதும் ராஜிநாமா செய்ய மாட்டேன். ஹெச்.டி. குமாரசாமி ஒரு அமைச்சர், அவர் மீது…
முதல்வர் ஸ்டாலின் – சோனியா காந்தி சந்திப்பு!
தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.9.2024) புதுதில்லியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இன்று மாலை 5.35 மணிக்கு தில்லியில் இருந்து புறப்படும் முதல்வர், இரவு 8.20 மணிக்கு சென்னை வந்தடைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமர் மோடியிடம்தான் உள்ளது-தமிழக முதல்வர் ஸ்டாலின் பேட்டி
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சாணக்கியாபுரத்தில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். இன்று காலையில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சென்று சந்தித்தார். பிரதமருக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டார். அதன் பிறகு பிரதமருடன் அமர்ந்து பேசினார். தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பரிசளித்தார். பிரதமர் மோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழைநார் கூடை, பனை ஓலை பெட்டியை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி இன்னும் கிடைக்காததை சுட்டிக்காட்டினார். மத்திய அரசின் நிதியை விடுவிக்க…
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமின் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி…
