நேரலையில் இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதல்.. பேசிக் கொண்டிருந்த போதே தூக்கி வீசப்பட்ட செய்தியாளர்..

லெபனான் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் தொலைக்காட்சி நேரலையில் நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தபோது இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று அவரது வீட்டைத் தாக்கியதில் அவர் காயமடைந்தார். மிராயா இன்டர்நேஷனல் நெட்வொர்க்கின் தலைமை ஆசிரியர் ஃபாடி பௌதயா, ஏவுகணை அவரது வீட்டைத் தாக்கிய நேரம், சமநிலையை இழந்த ஊடகவியலாளர் தூக்கி வீசப்பட்டார். நேரலையில், அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வீடியோவின் படி, நேரலையில் பௌதயா பேசிக் கொண்டிருந்த போது அவரது வீட்டை ஏவுகணை ஒன்று தாக்கியது. திடீர் தாக்குதலை அடுத்து அலறிய பௌதயா வீடியோவை துண்டித்ததாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் அவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. நேரலையில், இருக்கும் போது தாக்குதலில் சிக்கிய செய்தியாளருக்கு என்ன ஆனது என எக்ஸ் தளத்தில் பலரும் கேள்விகள் மற்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். தாக்குதலுக்கு பின்…

மது அருந்தியவர்கள் மாநாட்டுக்கு வரக் கூடாது: தவெக தலைவர் விஜய் அதிரடி உத்தரவு

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் பற்றி விஜய், கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். மாநாட்டு பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில் மாநாட்டில் பங்கேற்க வரும் போது மேற்கொள்ளக் கூடிய பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி தொண்டர்களுக்கு கட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:- மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நாகரீகமான முறையில் வரவேண்டும். எந்த வகையிலும் நமது கட்சி தலைவர் விஜய் மீதுள்ள மரியாதை குறையாத வண்ணம் தொண்டர்களும் நிர்வாகிகளும் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மாநாட்டுக்கு பெண்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். அவர்களது பாதுகாப்பை மாவட்ட…

மொசாட் உளவு அமைப்பின் தலைமையகத்தின் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல்

லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களின் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் லெபனானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நூறைத் தாண்டியுள்ளது. கடந்த வாரம் ஹிஸ்புல்லாவினரின் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதால் நிலை தடுமாறிய ஹிஸ்புல்லா தற்போது இஸ்ரேல் மீதான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலில் தங்களின் கமாண்டர் இறந்தாலும் அதனால் தங்களின் அமைப்பு ஒட்டுமொத்தமாக அழியும் என்று எண்ணிவிடக்கூடாது என்று ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நசரல்லா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தங்கள் மீதான தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடதத் தொடங்கியுள்ள ஹிஸ்புல்லா இதுவரை வடக்கு இஸ்ரேல் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் தற்போது இஸ்ரேலின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் மீது பேலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த பேலிஸ்ட்டிக் தாக்குதலை ஆன்டி- பேலிஸ்டிக் மிசைல்கள் மூலம் இடைமறித்து…

சென்னையில் இயங்கும் அனுமதியின்றி செயல்படும் கன்சல்டன்சிகள்- போலீசார் அதிரடி சோதனை

சென்னையில் 10க்கும் மேற்பட்ட சட்டவிரோத கன்சல்டன்சி தொடர்பான இடங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உரிய அனுமதியின்றி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக நடத்தப்படும் கன்சல்டன்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 70க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத கன்சல்சிக்கு தொடர்புடையவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் சுற்றித்திரிந்த வங்கதேச நாட்டினர் உரிய ஆவணங்கள் இல்லாததால் சிறையில் அடைப்பு

வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் தங்கி பணியாற்றுவது அதிகரித்து வருகிறது. அவ்வாறு பதுங்கி இருப்பவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றனர். இந்தநிலையில் திருப்பூர் தெற்கு போலீசார் மற்றும் அதிவிரைவுப்படையினர் திருப்பூர் மத்திய பஸ் நிலைய பகுதியில் சுற்றித்திரிந்த வெளிமாநில தொழிலாளர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக வந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை. விசாரணையில் அவர்கள் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவர்கள் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்கு வடமாநில தொழிலாளர்கள் போல் வேலைக்கு வந்துள்ளனர். அந்த நிறுவனத்தில் வேலை செய்தபோது, பனியன் நிறுவன…

தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் துளியும் இல்லை.. சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர் கூறியதாவது:- தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் என்பது துளியும் இல்லை. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் அல்ல. விமர்சனங்களை பார்த்து பழகியவர் அல்ல. தந்தையின் நிழலில் வளர்ந்தவர் தான். பணியில் ஒருவர் இறந்தால் கருணை அடிப்படையில் வழங்குவது போல தான் தி.மு.க. தலைவர் ஆகியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதுபோலத்தான் தமிழகத்தில் முதல்வராகவும் ஆகியிருக்கிறார். உண்மைகளை சவுக்கு மீடியா ஏறக்குறைய 8 மாதங்கள் எடுத்துக் கூறியதன் காரணமாக தான் சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடக்கும் உண்மைகள் எந்த வகையில் வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் மற்றும் அவரது…

பட்டு-பருத்தி நெசவாளர்களுக்கான விருது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றுதலைமைச் செயலகத்தில், 2023-24-ம் ஆண்டிற்கான பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 6 விருதாளர்களுக்கு பரிசுத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், போட்டி தேர்வு மூலம் சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 2.25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார். இதில் மாநில அளவில் பட்டு ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் சந்திரசேகரனுக்கும், இரண்டாம் பரிசினை ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு…

சாலையில் துள்ளி குதித்த மீன்கள் அள்ளிசென்ற பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசல்

ஆந்திர மாநிலம், கம்மத்தில் இருந்து பிரகாசம் மாவட்டத்திற்கு உயிர் உள்ள மீன்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. மெகபூபாபாத் தேசிய நெடுஞ்சாலையில் மரிபெடா என்ற இடத்தில் சென்ற போது திடீரென நடுரோட்டில் கவிழ்ந்தது. விபத்தில் லாரியில் உயிருடன் இருந்த மீன்கள் சாலை முழுவதும் துள்ளி குதித்தன. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் ஓடிச்சென்று மீன்களை பிடித்தனர். அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் இருந்து சாக்கு பைகள் மற்றும் பாத்திரங்களைக் கொண்டு வந்து துள்ளி குதித்த மீன்களை போட்டி போட்டு அள்ளி சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீன்களை அள்ளிக் கொண்டிருந்த பொதுமக்களை விரட்டி அடித்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய லாரியை மீட்டு போக்குவரத்து…

தமிழக டாஸ்மாக் கடைகளில் கியூ-ஆர் கோடு மூலம் மது விற்பனை அறிமுகம்

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் அதில் உள்ள அதிகபட்ச சில்லரை விலைக்கு (எம்.ஆர்.பி.) மேலாக விற்கப்படுகிறது. குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.50 வரை கூடுதலாக வசூலிக்கிறார்கள். எல்லா கடையிலும் அதில் உள்ள விலைக்கு மதுபாட்டில்கள் விற்பது இல்லை. கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்கவும், தவறுகள் நடக்காமல் வெளிப்படை யாக விற்பனை செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கியூ ஆர் குறியீடை ஸ்கேன் செய்து மின்னணு பண பரிவர்த்தனையின் வழியாக பணம் செலுத்தி மதுபானங்களுக்கான பில்லை பெறும் வசதியை செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் கடந்த சில மாதங்களாக முயற்சி மேற்கொண்டது. முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் இத்திட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அரக்கோணம் உள்ளிட்ட 7 கடைகளிலும், ராமநாதபுரத்தில் 7 கடைகளிலும் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது.…

மேக் இன் இந்தியா திட்டத்தால் ஏற்றுமதி அதிகரிப்பு- பிரதமர் மோடி பெருமிதம்

‘மேக் இன் இந்தியா’ திட்டம் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி தொடங்கப்பட்டது. 10-வது ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு துறைகளில் ஏற்றுமதி அதிகரிப்பதற்கும், திறன்களை உருவாக்குவதற்கும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் இது வழிவகுத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறியதாவது:- மேக் இன் இந்தியா இன்று 10 ஆண்டுகளை கொண்டாடுகிறோம். இதை வெற்றி அடைய செய்ய அயராது உழைக்கும் அனைவரையும் பாராட்டுகிறேன். இந்தத் திட்டம் நாட்டின் உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளின் அதிகார மையமாக மாற்ற 140 கோடி இந்தியர்களின் உறுதியை விளக்குகிறது. பல்வேறு துறைகளில் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. திறன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.