திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் நெய்யில் கலப்படம் செய்து இருப்பது உறுதியானது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், லட்டு தயாரிக்க கலப்பட நெய் வழங்கியதாக, திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுதொடர்பாக திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் புகார் அளித்துள்ளார். விலங்குகளில் கொழுப்புகள் உள்ளிட்ட பொருட்களை கலப்படம் செய்து 4 டேங்கர் நெய் சப்ளை செய்ததாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனால்,…
Category: முதன்மை செய்திகள்
சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லோக் ஆயுக்தாவிற்கு நீதிமன்றம் உத்தரவு
கர்நாடகாவில் ‘முடா’ நில முறைகேடு தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதனை பரிசீலித்த கவர்னர், கடந்த மாதம் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா, கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் அந்த மனு மீது விரிவாக விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நேற்று நீதிபதி நாகபிரசன்னா, சித்தராமையாவின் மனு நிராகரிக்கப்படுவதாகவும், கவர்னரின் உத்தரவு செல்லும் என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் முடா ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு…
பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு- இயக்குனர் மோகன் ஜி மீது பழனி போலீஸ் நிலையத்திலும் வழக்கு
பராசூரன், திரவுபதி உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பழனியில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் சேர்க்கப்படுவதாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்தார். இதனையடுத்து அவர் மீது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் மேலாளர் கவியரசு கொடுத்த புகாரின் பேரில் நேற்று சென்னையில் இருந்த மோகன் ஜியை கைது செய்தனர். பின்னர் திருச்சி அழைத்து வந்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சொந்த ஜாமினில் விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனிடையே மோகன் ஜி மீது பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்திலும் தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அடிவாரம் போலீசார் மோகன் ஜி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு…
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு
தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக். 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக். 2ஆம் தேதியுடன் நிறைவு பெற்று, அக். 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் வைத்த கோரிக்கையை ஏற்று, அக். 6ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள், காலாண்டு விடுமுறை முடிந்து அக்.7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழகத்தில் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான காலாண்டுத் தோ்வு நடைபெற்று வரும் நிலையில், காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா…
பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற 4 தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை- தமிழக முதலமைச்சர் வழங்கினார்
பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (25.09.2024) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 2024 பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்ய ஸ்ரீ, மனிஷா மற்றும் விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்தினார். விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்…
டிசம்பர் முதல் ஊரகப் பகுதிகளிலும் சிறிய பேருந்து பணி
அரசுப் போக்குவரத்து அதிகாரிகள் திட்டமிட்டபடி, அனைத்தும் செயல்பட்டால், வரும் டிசம்பர் மாதத்தில், ஊரகப் பகுதிகளிலும் சிறிய பேருந்து பணி தொடங்கியிடும். சிறிய பேருந்துகளை இயக்குவதற்கான வழித்தடங்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து, வழிகாட்டுதல்களை உருவாக்குவது உள்ளிட்டப் பணிகள் அடுத்த 2 முதல் 3 மாதங்களில் நடைபெறவிருக்கிறது. அதாவது, இந்த சிறிய பேருந்துகள் இயக்கமானது, ஒரு கிராமத்தில் குறைந்தது நூறு குடும்பங்கள் இருந்து, இதுவரை அரசுப் பேருந்தோ, தனியார் பேருந்தோ இயக்கப்படாத பகுதிகளில், சிறிய பேருந்துகள் வந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய பேருந்துகள் இயக்கப்படவிருக்கும் கிராமங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறு நகரங்களின் வழியாக இயக்கப்படவிருக்கும் வழித்தடத்தை போக்குவரத்துத் துறை அதிகாரிகளும், மண்டல போக்குவரத்து அதிகாரிகளும் உருவாக்கி வருகிறார்கள். இது தொடர்பாக, கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும்…
பழனி பஞ்சாமிர்தம் குறித்து தவறான கருத்து இயக்குநர் மோகன் கைது
பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் மோகன் ஜி பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தினை கூறியதாக தெரிகிறது. மோகன் ஜி. பேசிய வீடியோ வைரலானது. இந்நிலையில் சென்னை காசிமேட்டில் இருக்கும் இல்லத்தில் வைத்து மோகன் ஜி இன்று காலை கைது செய்யப்பட்டார். திருச்சியில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் மோகன் ஜியை கைது செய்ததாக தெரிகிறது. மோகன் ஜி கைது தொடர்பாக போலீஸ் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் அஸ்வத்தாமன், இயக்குனர் மோகன் ஜி தமிழக போலீசாரால், கைது செய்யப்பட்டுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்டு இருக்கிறார்.…
திமுகவில் பல மூத்த நிர்வாகிகள் இருக்கும்போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா?-தமிழிசை
அமைச்சரவை மாற்றத்தில் யார் ஏமாறப்போகிறார்கள்? உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு ஏமாற்றம் இருக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கூறி உள்ளார். இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாட்டை உலுக்கிய பத்லாபூர் வன்கொடுமை: குற்றவாளி என்கவுன்டரில் கொல்லப்பட்டது எப்படி?
மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் பத்லாபூா் நகரில் உள்ள ஒரு மழலையா் பள்ளியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி, காவல்துறையின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, காவல்துறையினரிடமிருந்து கைத்துப்பாக்கியை பறித்து, காவல்துறை ஆய்வாளர் நிலேஷ் மோர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், தற்காப்புக்காக, காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில், குற்றவாளி அக்சய் ஷிண்டே சம்பவ இடத்திலேயே பலியானதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில், நிலேஷ் மோருக்கு தொடை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாககக் கூறப்படுகிறது
உதயநிதிக்கு ஏமாற்றம் இருக்காது- துணை முதல்வர் பதவி குறித்து மு.க.ஸ்டாலின் பதில்
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பின்பு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியானது. கடந்த 17-ந்தேதி தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய தி.மு.க.-வின் மூத்த நிர்வாகியான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவிப்பதில் ஏன் தாமதம் என பேசினார். இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப்பின்னர் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை…
