அயலக மண்ணிலும் அரசு பணி; கோப்புகள் தேங்காது தமிழக முதல்வர் ஸ்டாலின்

அயலக மண்ணிலும் அரசு பணி தொடர்கிறது’ என முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 17 நாட்கள் அரசு முறைப் பயணமாக முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து ஸ்டாலின் அழைப்பு விடுத்து வருகிறார். பல நிறுவனங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து அரசுக் கோப்புகளுக்கு கையெழுத்து போடும் படத்தை முதல்வர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் ‘ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் e-office வழியே பணி தொடர்கிறது எனக் கூறியுள்ளார்.

ஆக்கிரமிப்பு கோவில் அகற்றம்கரையாம்புத்துார் அடுத்த மணமேடுபகுதியில் பொதுமக்கள் அதிகாரிகள் வாக்குவாதம்

புதுச்சேரி மாநிலம் கரையாம்புத்துார் அருகே உள்ள மணமேடு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கலையரங்கம், அங்கன்வாடி மையம், கழிப்பறை உள்ளிட்டவைகள் உள்ளது. மேலும், அங்குள்ள காலி இடத்தை, அப்பகுதி இளைஞர்கள் விளையாட்டு திடலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த சிலர், அங்கு ஒரு முருகர் சிலை வைத்து கொட்டகை கட்டி கோவிலாக வழிபட்டு வருகின்றனர். இதற்கு, அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மேலும் சிலர் அங்கு வீடுகள் கட்டி ஆக்கிரமித்தனர். இதனால், அங்கு விளையாட்டு பயிற்சியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், இது தொடர்பாக, அப்பகுதி மக்களிடையே பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகனது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வருவாய் துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், சப் கலெக்டர் சோம…

ஒடுக்கப்பட்டோரின் உயர்வுக்கு இமானுவேல் சேகரனின் தொண்டு உரமாகட்டும்- தமிழக முதல்வர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- தீண்டாமையை ஒழிக்கவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று. நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம். சமத்துவமும் சமூக நல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்! இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பணபலம் கொண்டு பாஜகவினர் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார்கள். ஜார்க்கண்ட் முதல்வர்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய சோரன், பணபலம் கொண்டு ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் செரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் உங்கள் திட்டம், உங்கள் அரசு, உங்கள் இல்லத்திற்கு என்ற நிகழ்ச்சியில் ரூ. 555.83 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று (செப். 10) அடிக்கல் நாட்டினார். ரூ. 472 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கிவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, பணபலம் கொண்டு அவர்கள் (பாஜக) ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார்கள். தற்போது அதைக்கொண்டு எங்கள் ஆட்சியை சீர்குலைக்கப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்போம். எங்கள் நலத்திட்டங்களை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மூத்தக் குடிமக்கள் ஓய்வூதியம் வாங்குவதை அவர்களால்…

புகுஷிமா அணு உலை 13 ஆண்டுகளாக படிந்துள்ள கதிரியக்க எரிபொருள்ஆய்வு செய்யுகிறது ரோபோட்

ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய சுனாமி மற்றும் பூகம்பத்தில் பலத்த சேதமடைந்துள்ள புகுஷிமா டாய்ச்சி அணு உலையில் இருந்து கதிரியக்க எரிபொருள் மாதிரியை சேகரிக்கும் பணியில் ரோபோட் ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9.0 ஆக பதிவாகியிருந்தது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி பேரலையும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த இயற்கை பேரிடரால் புகுஷிமா அணு உலையின் குளிரூட்டும் அமைப்புகள் முற்றிலும் செயலிழந்துவிட்டன. இதன் காரணமாக கடந்த 13 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் அணு உலை உள்ளே இருந்த கதிரியக்க எரிபொருள் உருகி, கழிவுகளுடன் கலந்து அணு உலை உள்ளெ படிந்துள்ளது. நீண்டகாலம் அணு உலையின் உள்ளே கதிரியக்க எரிபொருள் படிந்து கிடப்பதால் சுற்றுச்சுழலுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடுமென்பதால் அணு உலையிலிருந்து கதிரியக்க எரிபொருளை மிகுந்த பாதுகாப்புடன் வெளியேற்றி அணு…

புதுச்சேரி சட்டப்பேரவையின் மதிப்பீட்டுக்குழுகூட்டம் தலைமைசெயலகத்தில் நடந்தது

புதுச்சேரி சட்டப்பேரவையின் மதிப்பீட்டு குழு கூட்டம் சட்டப்பேரவை தலைவர் செல்வம் முன்னிலையில் மதிப்பீட்டு குழு தலைவர் நாஜிம்எம்.எல்.ஏ தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இந்த திட்டத்தின் கீழ் புதிய பணிகள் தொடங்குவது குறித்தும் காலத்தோடு பணிகளை முடிப்பது குறித்தும் சட்டமன்ற உறுப்பினர்களால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ள பணிகளை தொடர்ந்து புதிய பணிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு செயலர் மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குனர் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இந்த மதிப்பீட்டு குழு கூட்டத்தில் முதலமைச்சரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார், அரசு கொறடா ஏ கே டி ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் கே எஸ் பி ரமேஷ், சம்பத் , ரிச்சர்ட் ஜான்குமார் , பி…

விநாயகர் சதுர்த்திை யமுன்னிட்டு திருச்சி உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்

திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் உள்ள உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை, மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டை என மொத்தம் 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டு புத்தர்களும் கலந்து கொண்டனர். திருச்சி மலைக்கோட்டையின் நடுவே தென் கயிலாயம் என்று போற்றப்படும் தாயுமான சுவாமி கோயிலும், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும், மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும் உள்ளன. இந்தக் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கி செப்.20ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி இன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காலை 7 மணியளவில் மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமிக்கு கஜபூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜையும்,…

முறைகேடு சர்ச்சையில் சிக்கிய பூஜா கேத்கர் ஐஏஎஸ் பதவியிலிருந்து விடுவிப்பு – மத்திய அரசு

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஐஏஎஸ் பறிச்சி பெண் கலெக்டராக இருந்த பூஜா கெத்கர் காரில் சைரன் பொருத்தியது, கூடுதல் கலெக்டர் அறையை பயன்படுத்தியது என தனது அதிகாரத்துக்கு மீறி செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வில் தான் மாற்றுத்திறனாளி என போலியான சான்றிதழை சமர்ப்பித்தும் சாதிவாரி ஓபிசி இட ஒதுக்கீட்டிற்காக குடும்ப வருமானத்தை குறைத்தும் காட்டி முறைகேடுகளில் ஈடுபட்டு ஐஏஎஸ் ஆகியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவரை வேறு இடத்துக்கு மாநில அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க மத்திய அரசு கூடுதல் செயலாளர் மனோஜ்குமார் திவேதி தலைமையில் ஒரு நபர் கமிட்டியை அமைத்தது. இதற்கிடையே பூஜா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த புகாரில் தன்னை கைது செய்யாமல் இருக்கக்கோரி நீதிமன்றத்தில் பூஜா…

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி அமைச்சரவை அவசரகூட்டம்

மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மகக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த வருடம் முதல் நடந்து வரும் இந்த கலவரத்தில் இரண்டு குக்கி சமூகப் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியான பின் நாட்டு மக்களின் கவனமும் அரசியல்வாதிகளின் கவனமும் மணிப்பூரை நோக்கி திரும்பியது. இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆயுதமேந்திய குக்கி கிளர்க்காரர்கள் துப்பாக்கி, ராக்கெட், டிரோன் என அதிநவீன தொழில்நுட்ப கருவிகளின்மூலம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு இம்பாலில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி டிரோன் மூலம் மெய்தி இன மக்கள் வசிக்கும் 2…

மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு – 20 ஆம் தேதி வரை சிறை – நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

சர்ச்சை பேச்சு தொடர்பாக கைதான மகாவிஷ்ணுவை செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து மகா விஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை அசோக்நகா், சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மகா விஷ்ணு எனும் மேடைப் பேச்சாளா், மாற்றுத்திறனாளிகளின் குறைபாடுகளுக்கு அவா்கள் முற்பிறப்பில் செய்த பாவம்தான் காரணம் என்று அவா் பேசியது சமூக ஊடகங்களில் பரவி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சைக் குறுக்கீடு செய்த பாா்வை மாற்றுத்திறனாளி தமிழாசிரியா் சங்கரிடம் வாக்குவாதம் செய்து மகா விஷ்ணு பேசியதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன. அவா் மீது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவா் வில்சன், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதில், மகா…