பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: பதக்கம் வென்ற துளசிமதி, மனிஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவின் இறுதிப்போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் துளசிமதி முருகேசன், சீனாவின் க்யு ஹ்யா யங்கிடம் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். வெற்றி பெற்ற க்யு ஹ்யா யங் தங்கப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ், டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரெனை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றார்.இந்த நிலையில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் துளசி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாசுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக…

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி கூடாது- சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, காவல் துறை சார்பில் 3 அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் அனுமதி கேட்பதால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தது. வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று காவல் துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கக் கூடிய சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நெட்பிளிக்ஸ்க்கு மத்திய அரசு சம்மன்

ஐசி 814 – The Kandahar Hijack’ வெப் தொடருக்கு எதிர்ப்புக்குரல் எழுந்த நிலையில் நெட்பிளிக்ஸ் உள்ளடக்க தலைவருக்கு (CONTENT HEAD) மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த தொடரை அனுபவ் சின்ஹா இயக்கியுள்ளார். விஜய் வர்மா, நஸ்ருதீன் ஷா, அரவிந்த் சாமி, தியா மிர்சா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 1999 டிசம்பரில், ஐசி 814 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு செல்லும் வழியில், 5 பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. அப்போது பயணிகளின் உயிரை காப்பாற்ற வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு 3 பயங்கரவாதிகளை விடுதலை செய்தது. அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் இருவரும் இந்த…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சிபிசிஐடி போலீசாரால் கைது

கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி, வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். பின்னர் கரூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் அவரது சகோதரர் சேகர்…

ஆளுநரின் பேச்சுக்கு அமைச்சர்கள் கடும் கண்டனம்

தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டுதேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது,மாநில பாடத்திட்டங்கள் தரம் மோசமாக உள்ளது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த பேச்சுக்கு அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர். என். இரவி கூறியுள்ளார். புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை. தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு” என்று பதிவிட்டுள்ளார். அண்மையில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட உயர்கல்வி நிலையங்களின் தரவரிசை பட்டியலில்,…

பார்முலா 4 கார் பந்தயம்- வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி பரிசு வழங்கினார்

சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது. எப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் நேற்று கால தாமதம் ஆன நிலையில், பார்முலா 4 பந்தயம் நேற்று இரவு 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. இன்றைய தினம் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் தொடங்கியது. போட்டிகளை ஆர்வமாக திரையுலகினர் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு கண்டுகளித்தனர். நடிகர்கள் நாக சைதன்யா, ஜான் ஆபிரகாம், நடிகர் திரிஷா உள்ளிட்டோர் வருகை தந்தனர். இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டியில்…

வடகொரியாவுக்கு 22 குதிரைகளை பரிசாக வழங்கிய ரஷியா

உக்ரைன் உடன் போரிடுவதற்காக வடகொரியா ரஷியாவிற்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் அதற்கு பரிசாக குதிரைகள் வழங்கப்பட்டு உள்ளதாக தென் கொரியா தெரிவித்து உள்ளது. இது குறித்து தென் கொரியா தெரிவித்து இருப்பதாவது: ரஷியா உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த போரில் ரஷியாவுக்கு உதவிடும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஷியாவில் இருந்து ஓர்லோவ் டிராட்டர் வகையை சேர்ந்த 24 குதிரைகள் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. வடகொரியா அதிபர் கிம் ஜாங்-க்கு குதிரைகள் என்றால் கொள்ளை பிரியமாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்கனவே புதின் 30 குதிரைகளை அனுப்பி உள்ளார். இவை அனைத்தும் வடகொரியா அனுப்பிய ஆயுதத்திற்கான பணம் என தென் கொரியா தெரிவித்து உள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் அரசு ஊடக நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்து…

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பிரீத்திக்கு குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பாரிஸ் பாரா ஒலிம்பிக் நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் பிரீத்தி பால் 30.01 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். முன்னதாக பிரீத்தி பால் பெண்களுக்கான 100 மீட்டர் டி35 போட்டியில் வெண்கலம் வென்றார். பிரீத்தி பால் தனது இரண்டாவது வெண்கலத்துடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தினார். இந்த நிலையில் பாரா ஒலிம்பிக்கில் இரண்டாவது வெண்கலப் பதக்கம் வென்ற பிரீத்திக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், “பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் மகளிர்…

‘இளைஞர்களை ஏமாற்றும் பாஜக.. மோடி அண்ட் கம்பெனி – காங்கிரஸ் தலைவர் கடும் கார்கே தாக்கு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ்- பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்கின்றன. பாஜகவும், மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் களத்தில் இருக்கின்றன காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்த பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. எனவே இந்த விவகாரம் பிரதான பிரச்சனையாக முன்னிறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை மோடி ஏமாற்றி வருவதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஏமாற்றுதல் என்பதே ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் விஷயத்தில் பாஜக…

புதுவை தவளகுப்பம் அடுத்தகாட்டுக்குப்பம் மராட்டாற்றில் புதிய மேம்பாலத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்

புதுச்சேரி கடலூர் சாலையில் தமிழக பகுதியான ரெட்டிச் சாவடிக்கும் காட்டு குப்பத்திற்கும் இடையே மலட்டாற்றின் குறுக்கே பாலமுள்ளது இது சிறிய பாலமாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் விபத்துக்கள் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர் கதையாக இருந்து வந்தது. இதனால் இப்பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதைபடுத்து புதுச்சேரி பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு சார்பில் ரூபாய் 5 கோடியே 25 லட்சம் செலவில் மலட்டாற்றில் புதிய பாலம் கட்ட கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். தற்பொழுது பணிகள் முடிவடைந்த நிலையில் பாலத்தின் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது இதில் முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.…