அமெரிக்கா சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 19 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 27-ந்தேதி இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்கா சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கலிபோர்னியாவில் வாழும் தமிழர்கள் விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ்- 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? மத்திய அரசுக்கு உயர்நீதி மன்றம் சரமாரி கேள்வி

மதுரையை சேர்ந்த பாஸ்கர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதால், ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களின் வாழ்க்கை தரம் உயர உதவியாக இருக்கும். தென் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் சிறந்த மருத்துவ வசதியை பெறவும் வாய்ப்பாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தாலும் 2018 ஆம் ஆண்டு தான் மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. பிரதமர் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். இருப்பினும் இன்னமும் கட்டுமான பணிகள் நடைபெறாமல், நீண்ட காலமாக கிடப்பிலேயே உள்ளது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இதுவரை கட்டுமான பணிகளை…

புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் உள்ள மாநிலங்களுக்கு கல்வி வளர்ச்சிக்காக நிதி வழங்கப்பட்டு வருகிறது. மோடி ஆட்சிக்கு பின்னர் இது புதிய கல்விக்கொள்கை என பெயர் மாற்றப்பட்டது. பெயர் மாற்றத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கல்வி வளர்ச்சிக்காக தமிழகத்திற்கு சரியாக நிதி ஒதுக்குவது இல்லை. இதற்கு காரணம், புதிய கல்விக்கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக மத்திய அரசு சொல்கிறது. புதிய கல்விக் கொள்கையின் மூலம் மத்திய அரசு சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக படிக்க வலியுறுத்துகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் ‘கல்விக் கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் தருகிறது’ என திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- பிஎம் ஸ்ரீ…

பவானி ஊராட்சிகோட்டையில் மேக கூட்டங்களில் தோன்றிய சிவலிங்கம்-பொதுமக்கள் பரவசம்

ஈரோடு மாவட்டத்தில் காலை 6 மணிக்கு சூரிய உதயம் ஆரம்பித்து பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் மறைகிறது. இதனால் சுமார் 7 மணி வரை வெளிச்சம் இருந்து கொண்டே உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் ஈரோடு மாவட்ட பகுதிகளில் சூரியன் மறையும் போது மேக கூட்டங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளித்தது. ஒரு சில இடங்களில் சூரியன் மறையும் நேரத்தில் மேக கூட்டங்கள் சிவப்பு நிறம் மற்றும் பல்வேறு நிறங்களில் காட்சி அளித்தது. ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஊராட்சி கோட்டை மலைப்பகுதியில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து மேக கூட்டங்களில் சிவலிங்கம் தோன்றுவது போன்று காட்சியளித்தது.நேரம் செல்ல, செல்ல சிவப்பு நிறத்தின் நடுவே சிவலிங்கம் இருப்பது போல் தனியாக தோன்றியது. இதனை கண்ட பொதுமக்கள் பலர்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நேற்றிரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 10.16 மணிக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து வேறு விமானம் மூலம் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் 14-ந்தேதி வரை அதாவது 19 நாட்கள் அரசு முறை பயணம் மேற் கொள்கிறார். இன்றிரவு சான்பிரான்சிஸ்கோ சென்றடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். 31-ந்தேதி சான்பிரான்சிஸ்கோவில் புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேச உள்ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். செப்டம்பர் மாதம் 2-ந் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து 12-ந்தேதி வரை தங்கி இருந்து பல்வேறு…

கல்விக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசு – எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

‘சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ. 573 கோடியை கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு விடுவித்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தனது பங்குத் தொகையை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதற்குக் காரணமாக புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியா கல்வியில் சிறந்த நாடு. உலகிலேயே மனித வளம் அதிகமுள்ள நாடு. இந்த நாட்டில் தங்களுடைய கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் தற்போதைய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும். ஒரே வார்த்தையில் அழைத்தோம் – மத்திய ராணுவ அமைச்சர் நேரில் வந்து கருணாநிதியின் நாணயத்தை வெளியிட்டார்’ என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க.…

புதுச்சேரியில் அதிமுகவினர் அண்ணாமலை படத்தை எரித்து அன்பழகன் தலைமையில் போராட்டம்

தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமியை தரக்குறைவாக பேசிய பா.ஜ., தலைவர் அண்ணாமலையை கண்டித்து, நேற்று புதுச்சேரி, உப்பளத்தில் அ.தி.மு.க.,வினர் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அ.தி.மு.க.,வினர் அண்ணாமலை உருவப்படத்தை தீயிட்டு எரித்து கோஷமிட்டனர். இது குறித்து அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது: அ.தி.மு.க, பொதுச் செயலாளர் பழனிசாமியை பற்றி பேச, பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை. கடந்த, 2021ம் ஆண்டு, ஜூலை 8ம் தேதி, தமிழக பா.ஜ., தலைவராக பதவி ஏற்ற அண்ணாமலை, கடந்த 2019ம் ஆண்டு அரசு அதிகாரியாக பணியில் இருந்தவர். மறைந்த மற்றும் தற்போதைய அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி தரம் தாழ்ந்து பேசுவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். இதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

புதுச்சேரியில் 15 ஆண்டுகள் குடியிருந்தோர்க்கு மட்டுமே அரசு வேலை நேரு எம்எல்ஏ முதல்வரிடம் கோரிக்கை

புதுச்சேரி.ஆக.28- அபுதுச்சேரியில் 15 ஆண்டுகள் குடியிருந்தோர்க்கு மட்டுமே அரசு வேலை நேரு எம்எல்ஏ தலைமையில் பொதுநல அமைப்பினர் முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: அரசிதழ் பதிவு பெறாத (குரூப் பி) பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு நடைபெறும் தேர்வுகள் புதுச்சேரி காரைக்காலில் வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். குரூப் பி பணியிடங்களுக்கு புதுச்சேரி அரசே தேர்வுகள் நடத்தி பணியிடங்களை நிரப்பிக் கொள்ள முடிவெடுத்த புதுச்சேரி முதல்வருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். புதுச்சேரி அரசின் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத் துறை 22 8 2024 அன்று 256 அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பிலுவினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டும் தான் தயார் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது நடைமுறைக்கு எதிரானது, இது தாய் மொழியான தமிழை புறக்கணிக்கும் செயலாக உள்ளது.…

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.பொதுமக்களுக்கு ஐயப்பன் எம்.எல்.ஏ நலத்திட்ட உதவி

கடலூர் ஒன்றியம் மதலப்பட்டு ஊராட்சி பெரியகாட்டுபாளையம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் பெரும் முகாம் நடைபெற்றது. புதுவையை அடுத்த மதலப்பட்டு உள்ளிட்ட 5 ஊரக மக்களுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய அரசால் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களுக்கு சென்றடையும் முறையில் முகாம்கள் அமைக்கப்பட்டு ஆட்சியர், அரசு அலுவலர்கள் நேரடியாக பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று மதலப்பட்டு ஊராட்சியில் பெரிய காட்டுபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில் மதலப்பட்டு, கிளிஞ்சிக்குப்பம், மேல் அழிஞ்சப்பட்டு, கீழ்…

உடைந்து விழுந்த சிவாஜி சிலை உடைந்த இடத்தில்… சத்ரபதி சிவாஜிக்கு 100 அடி சிலை?

2023 டிசம்பர் 23ஆம் தேதி கடற்படை தினத்தின்போது சிந்துதுர்க் மாவட்டத்திலுள்ள ராஜ்கோட் பகுதியில் சத்ரபதி சிவாஜி சிலை நிறுவப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இந்த சிலை அமைக்கப்பட்டு 8 மாதங்களே ஆன நிலையில், தற்போது விழுந்து நொறுங்கியுள்ளது. சிலை விழுந்து உடைந்த புகைப்படங்கள் நாடு முழுவதும் பலரால் பகிரப்பட்டது. பாஜக ஆட்சியில் கட்டுமானத் துறை, பொதுப்பணித் துறையில் ஊழல் நிறைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்தது. இந்நிலையில், சிவாஜி சிலை ஆபத்தான நிலையில் இருந்ததாக முன்பே (ஆக. 20) பொறியாளர் ஒருவர் கடற்படையை எச்சரித்துள்ளார். இது தொடர்பாக பொதுப்பணித் துறை பொறியாளர் எழுதியுள்ள கடிதத்தில், கடற்படை தினத்தில் 2023-ல் திறக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை ஆபத்தான நிலையில் உள்ளது. சிற்பி ஜேதீப் ஆப்தே ஜூன் மாதம் சிலையை சரிபார்த்தார். இருந்தபோதும் தற்போது சிலையின் இணைப்பில் உள்ள…