பொங்கல் திருநாள் முதல் “முதல்வர் மருந்தகம் திட்டம்” தொடக்கம்- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

குரங்கு அம்மை பரவலால் உலகளாவிய சுகாதார அவசர நிலை அறிவிப்பு!

ஆப்பிரிக்காவில் அதிகரித்துவரும் குரங்கு அம்மை நோய் பாதிப்பால், உலகளாவிய சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை அறிவித்தது. இந்த வைரஸ் சர்வதேச எல்லைகள் மூலம் பல நாடுகளில் பரவக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. ஐநா சபையின் உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் குரங்கு அம்மை நோய் பாதிப்பைப் பொது சுகாதார அவசர நிலையாக செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தது. ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு குரங்கு அம்மை நோயால் 14,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 524 பேர் பலியானதாகவும், இந்த பாதிப்பு கடந்த வருடம் வெளியான புள்ளி விவரத்தைவிட, அதிகம் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதுவரை காங்கோவில் 96%-க்கும் அதிகமாக நோய் பாதிப்புகளும்,…

நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் 414 இளநிலை வரைதொழில் அலுவலர்கள், 33 உதவிப் பொறியாளர்கள், 66 இளநிலை உதவியாளர்கள், 48 தட்டச்சர்கள், 6 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III, 4 தணிக்கை உதவியாளர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திலும், 45 இளநிலை உதவியாளர்கள், 3 உதவி வரைவாளர்கள், 9 தட்டச்சர்கள், 27 பதிவுரு எழுத்தர்கள் மற்றும் 24 அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் கருணை அடிப்படையிலும் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நெடுஞ்சாலைத் துறையின் உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 180 நபர்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு,…

பெண்கள் மீதும் போக்சோ சட்டம் உயர் நீதிமன்றம் அதிரடி

இந்தியாவில் பெண்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறத்தல்களில் ஈடுபடும் பட்சத்தில் பாலின பாகுபாடின்றி பெண்கள் மீதும் இந்த சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முயும் என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. “குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டம் தான் போக்சோ. இதில் சம்பந்தப்பட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் ஆண் அல்லது பெண் மீது பாலின பாகுபாடின்றி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இந்த சட்டத்தின் மூன்றாவது பிரிவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் “நபர்” என்ற வார்த்தை ஆணை மட்டும் தான் குறிக்கும் என்று ஏன் புரிந்து கொள்ளப்படுகிறது?” “போக்சோ சட்டத்தின் மூன்று மற்றும் ஐந்தாவது பிரிவுகளில் குறிப்பிடப்பட்டு இருப்பவை கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவது பாலின…

பட்டாசு ஆலையில் வெடி விபத்து – தமிழக முதல்வர் 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் லைசென்ஸ் உரிமத்துடன் ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில், பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து மற்றும் மூலப்பொருட்களை வாகனத்தில் இருந்து இறக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு வேதனை அடைந்துள்ளதாகவும், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்குவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், விபத்தில்…

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நிதி: கேரளா முதல்வர் பினராயி விஜயன்

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. நள்ளிரவு வேளையில் அரங்கேறிய இந்த கோரம் காரணமாக வீடுகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் உறக்கத்திலேயே மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலச்சரிவை தொடர்ந்து ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை, தன்னார்வலர்கள் என பலதரப்பினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக திரைப் பிரபலங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இதற்கிடையெ, அடையாளம் காணப்படாத 401 உடல்கள்-உடல் உறுப்புகளுக்கான டி.என்.ஏ. பரிசோதனை நேற்று நிறைவடைந்தது. இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி…

இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை

“உங்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 78-வது சுதந்திர திருநாளைக் கொண்டாட நாடு தயாராகி வருவதைக் கண்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இதனையொட்டி செங்கோட்டை, மாநிலங்களின் தலைநகரங்கள் அல்லது உள்ளூர் பகுதிகளில் மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதை காண்பது, நமது இதயங்களில் எப்போதும் உற்சாகத்தை ஏற்படுத்தும். 140 கோடிக்கும் அதிகமான சக இந்தியர்களுடன் நமது பெரும் தேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கும் உணர்வாகும். பல்வேறுபட்ட பாரம்பரியங்கள் மற்றும் அவற்றின் வெளிப்பாடுகளை ஒருங்கிணைத்தது நமது துருவ நட்சத்திரமாகவும், தேசப்பிதாவாகவும் திகழ்ந்த மகாத்மா காந்தி ஆவார். அவருடன் சர்தார் படேல், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பாபா சாஹேப், அம்பேத்கர், பகத் சிங், சந்திர சேகர் ஆசாத் போன்ற மாபெரும் தலைவர்களும் மற்றும் எண்ணற்றவர்களும் இருந்தனர். அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்ற…

செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது- தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தமிழகத்தின் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தது குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. செவிலியர் சபீனாவின் இந்த வீர செயலுக்காக அவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், தமிழக செவிலியர் சபீனாவுக்கு, வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செவிலியர் சபீனாவுக்கு, விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்க உள்ளார். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலாக செயல்பட்டு சிகிச்சை அளித்தமைக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம்

மத்திய அரசின் புதிய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவிந்த் மோகன் கலாசாரத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவிநடிகை குஷ்பு விலகல்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, கடந்த 2020-ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்தார். 2021-ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அதன்பின், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பு விலகினார். அவரது ராஜினாமா கடிதத்தை குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.