3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் வரும் 14-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் உள்பட 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்திய அணியில் மொத்தம் 36 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள். தமிழகத்தைப் பூர்விகமாக கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றார். 25 மீட்டர் பிஸ்டல் பெண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் மனு பாக்கர் 6வது இடம்பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார். பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இந்நிலையில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர் சிங்…
Category: முதன்மை செய்திகள்
புதுச்சேரி பிள்ளை சாவடி ஸ்ரீ தர்மராஜா உடனுறை அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய 136-வது ஆண்டு தேரோட்டம்
புதுச்சேரி பிள்ளை சாவடி ஸ்ரீ தர்மராஜா உடனுறை அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய 136-வது ஆண்டு தேரோட்டத்தை நூற்று 100-க்கணக்கான மக்கள் வடம் பிடித்து இழுத்தனர் புதுச்சேரி அடுத்த பிள்ளை சாவடி ஸ்ரீ தர்மராஜர் உடனுறை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய 136-வது பிரமோற்சவ விழா கடந்த 25-ம் தேதி விநாயகர் பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகாசூரன் வதம், திருக்கல்யாணம் மற்றும்அம்மனுக்கு பல்வேறு அபிஷேக் ஆராதனைகள் நடைபெற்றது. 6-வது நாள் உற்சாகமான இன்று திரௌபதி அம்மனின் திரு தேரோட்டம் நடைபெற்றது கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் புறப்பட்ட திரௌபதி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்க 100-க்கனக்கான மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.தேரானது முக்கிய விதிகள் வீதி உலா வந்து மீண்டும் கோவில் பிரகாரத்தை வந்தடைந்தது.தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.…
மனைவியின் அஸ்தியை கரைக்க வந்தவர் பலயான சோகம்
மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார். மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றிவிட்டு லண்டன் திரும்பும்போது ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கி அவரும் பலியான நிலையில் அவரது இரண்டு மகள்களும் தந்தை வருவார் என லண்டனில் காத்திருக்கிறார்கள். தாயை ஒரு வாரத்துக்கு முன்பு இழந்து, தந்தையையும் நேற்று இழந்த நிலையில், யார் அவர்களுக்கு ஆறுதல் சொல்வார்கள் என்பது தெரியவில்லை. லண்டனில், அர்ஜூன் தனது மனைவி பாரதிபென் மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த நிலையில், ஏழு நாள்களுக்கு முன்புதான் பாரதி பென் உயிரிழந்துள்ளார். சிகிச்சையில் இருந்து வந்த பாரதி பென், தான் உயிரிழந்துவிட்டால், எனது அஸ்தியை இந்தியாவில் உள்ள சொந்த ஊருக்குக் கொண்டு சென்று அங்குள்ள ஆற்றில்…
விபத்தில் சிக்கி மூலச் சாவடைந்த இளம் பெண்ணின்உடல் உறுப்பு தானம் 7 பேர் பயன்பெற்றனர்
விபத்தில் சிக்கி மூலச் சாவடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் அதன் மூலம் 7 பேர் பயன் அடைந்துள்ளதாக மருத்துவர் முருகேசன் தெரிவித்தார் தனது சகோதரி இல்லையென்றாலும் அவருடைய இதயம் எங்கோ ஓரிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது மனதுக்கு ஆறுதலாக இருப்பதாக உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சேர்ந்தவர் செல்வ கணபதி -சீதா தம்பதியினர், இவர்கள் கடந்த 11-ம் தேதி தனது இரண்டு குழந்தைகளுடன் குறிஞ்சிப்பாடியில் இருந்து கடலூரில் உள்ள கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பி பேட்டை பாலத்தின் அருகே வரும் பொழுது திடீரென ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் செல்வ கணபதி, மற்றும் அவருடைய 3 வயது குழந்தை சம்பவ…
அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் ஏறுகிறது- ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, 2026 தேர்தல் வரை நான்தான் தலைவராக இருப்பேன். அதன் பிறகு எல்லாம் அன்புமணிதான் என கூறினார். இந்த நிலையில் இன்று அவர் தைலாபுரம் தோட்டத்தில் திடீரென நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, என் மூச்சு உள்ளவரை நான்தான் தலைவராக இருப்பேன் என கூறினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:- அன்புமணியின் செயல்பாடுகளால் அவருக்கு தலைவர் பதவி வழங்க மாட்டேன். குடும்பத்தினர் அரசியலுக்கு வரக்கூடாது என கூறியதை காப்பாற்ற முடியவில்லை. பா.ம.க.வை தொய்வின்றி நடத்த எனக்கு ஆதரவு உள்ளது.கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறியதால்தான் அன்புமணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பெற்றோரை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும். தாய்-தந்தையை மதிக்க வேண்டும். ஆனால், அன்புமணி மைக்கை தூக்கி வீசுவதும்,…
தி.மு.க. நிர்வாகிகளுடன் நேருக்கு நேர் சந்திப்பு:தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்படும்படி முதலமைச்சர் அறிவுறுத்தல்
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு நிலவரம் எப்படி உள்ளது என்பதையும் அவர்களிடம் கேட்டறிந்து வருகிறார். இந்த நிலையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.இதற்காக உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந்தேதி முதல் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தொடங்க உள்ளது. இதற்கிடையே மதுரையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,” ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்னவென்றால், ”உடன்பிறப்பே…
அரிசி டெண்டரில் முதலமைச்சரின் அனுமதியோடு மிகப்பெரிய ஊழல் முறைகேடுகள்
புதுச்சேரியில் வழங்கப்படும் விலையில்லா ரேசன் அரிசி டெண்டரில் முதலமைச்சரின் அனுமதியோடு மிகப்பெரிய ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா கண்டனம் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக சட்டப்பேரவையில் அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்… புதுச்சேரியில் ஏழை மக்களுக்கு, ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் விலையில்லா அரிசியில் முதலமைச்சரின் துணையோடு பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். விலையில்லா அரிசிவிநியோகத்தில் முறையாக டெண்டர் விடுவது போல் நாடகமாடி, தனக்குசாதகமான ஒரு வடநாட்டுக் கம்பெனியுடன் கூட்டு சேர்ந்து முதலமைச்சர் ரங்கசாமியின் துணையோடு அதிகாரிகள்கொள்ளையடித்து வருவதாக கண்டனம் தெரிவித்தார். அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மோசடியால் புதுச்சேரி மாநில விவசாயிகளோ அரிசி ஆலை உரிமையாளர்களோ மக்களோ எந்தவித பயணம் அடையவில்லை அதற்கு மாறாகபுதுச்சேரியில் தற்போதுரேஷனில் வழங்கப்படும் அரிசி 100 சதவீதம் அண்டை மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதனால்புதுச்சேரிக்கு 20…
அகமதாபாத் விமான விபத்தில் 265 பேர் பலி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 (போயிங் 787 ட்ரீம்லைனர்), புறப்பட்ட சில வினாடிகளில் அருகில் உள்ள பி.ஜே. மருத்துக் கல்லூரி வளாகத்தில் மோதி நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். மருத்துவ வளாகத்தில் பயிற்சி மருத்துவர்கள் விடுதியும் அடங்கும். இங்கு மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இதனால் விடுதி மெஸ்சில் இருந்த மருத்துவ மாணவர்களில் சிலரும் உயிரிழந்தனர்.இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இதுவரை 265 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 பேர் உடல் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததில் உடல்கள் கருகின. இதனால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் டி.என்.ஏ.…
விஜய் ரூபானி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் பிரதமர் மோடி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட AI-171 விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள். மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 7 மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். AI-171 விமான விபத்தில் காயமடைந்தவர்களை சந்திக்க பிரதமர் மோடி அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு வந்தார். விமான விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்நிலையில்,…
ஏர் இந்தியா விமான விபத்தில் ஒருவர் உயிர்பிழைத்துள்ளதாக காவல் துறை தகவல்
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இன்று பகல் 1.43 மணிக்கு நேரிட்ட விமான விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்திருப்பதாக, ஆமதாபாத் காவல் ஆணையர் மாலிக் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா 171 விமானம் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த 242 பேரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்பட்ட நிலையில், இதுவரை 204 உடல்கள் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தின் 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்த விஸ்வாஸ் குமார் என்ற பயணி மட்டும் உயிர் பிழைத்திருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
