ஏர் இந்தியா விமான விபத்தில் ஒருவர் உயிர்பிழைத்துள்ளதாக காவல் துறை தகவல்

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இன்று பகல் 1.43 மணிக்கு நேரிட்ட விமான விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்திருப்பதாக, ஆமதாபாத் காவல் ஆணையர் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா 171 விமானம் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த 242 பேரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்பட்ட நிலையில், இதுவரை 204 உடல்கள் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தின் 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்த விஸ்வாஸ் குமார் என்ற பயணி மட்டும் உயிர் பிழைத்திருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment