புதுச்சேரி வில்லியனூர் கண்ணகி அரசு பள்ளி சந்திப்பு முதல் எம்.ஜி.ஆர். சிலை வரை தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் பைபாஸ் சாலையை இணைக்கும் கலைவாணன் நகர், எம்.என்.ஆர். நகர், கிருஷ்ணா நகர், ராஜா மஹால் தெரு, பெருமாள்புரம், பழநிசாமி நகர், கூடப்பாக்கம் இணைப்புச் சாலைகளை இணைக்கும் குறுக்குச் சாலைகளை மேம்படுத்தும் பொருட்டு, புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் ரூ. 35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, அப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை கிருஷ்ணா நகரில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்து கொண்டு, தேசிய நெஞ்சாலையை இணைக்கும் குறுக்குச் சாலைகளை மேம்படுத்தும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவிப் பொறியாளர் முனைவர் ஆறுமுகம், இளநிலைப் பொறியாளர் திருமுருகன் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், தொகுதி அவைத்தலைவர் ஜலால் அணிப், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு, மோகன்தாசு, சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், தொழிலாளர் முன்னேற்றப் பேரவை தலைவர் அங்காளன், அணிகளின் துணை அமைப்பாளர்கள் சுகந்தி, சரவணன், கோபி, காளி, அயலக அணி தலைவர் தாஹா, ஆதிதிராவிடர் அணி துணைத்தலைவர் கதிரவன், தொகுதி துணைச் செயலாளர்கள் ஜெகன்மோகன், ஹரி கிருஷ்ணன், பொருளாளர் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ராஜி, கிளைச் செயலாளர்கள் ரகுராமன், தங்கராசு, மிலிட்டரி முருகன், வேதாச்சலம், ஏழுமலை, சதாசிவம், ரங்கராஜ், முருகேசன், பாபு, சசிகுமார், திலகர், சரவணன், முருகையன், முத்துப்பாண்டி, சொக்கலிங்கம், வாசு, முருகேசன், முத்து, வீரக்கண்ணு, பாலு, நடராசன், சேகர், முத்துப்பாண்டி, பிரவீன், கோதண்டம், அன்பு, பவித்ரன், சிராஜி, அருள்மணி, நாகராஜி, அஞ்சாபுலி, அன்பு நிதி, ஞானவேல், சுந்தரகாசு (முன்னாள் கமிஷனர்), இளங்கோ, வேலு, கோவிந்தராஜ், அப்பாவு,ராமஜெயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.