புதுச்சேரி உருளையன்பேட்டை கோவிந்தசாலை புதுநகர் கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்தவர் சலீம். இவரின் மனைவி சுமைனா பானு (24). இவர் சென்னையில் உள்ள தனது தங்கையின் வளைகாப்புக்காக மாமியார் ஜீவா (55) மற்றும்3 ஆண் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலை 5
மணிக்கு வீட்டிலிருந்து ஆட்டோவில் புதிய பேருந்து நிலையம் சென்றார். அங்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்தில் சென்னைக்கு ஏறினார். அப்போது கையில் வைத்திருந்த சூட்கேசை லக்கேஜ் வைக்கும் இடத்தில் வைத்திருந்தார். அந்த சூட்கேசில் 27 பவுன் நகை, பணம் இருந்தது. பேருந்து காலாப்பட்டு பிள்ளைச்சாவடி அருகே சென்ற போது லக்கேஜில் வைத்திருந்த, சூட்கேசை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த சுமைனா பானு, தமது மாமியாருடன் சேர்ந்து கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தினார்.
பேருந்து நடத்துநர் பேருந்தில் இருந்து யாரையும்இறங்கவிடாமல் காலாப்பட்டு போலீஸ் நிலையம்
கொண்டுசென்றார். அங்கு பயணிகளை சோதித்தபோதுசூட்கேஸ் கிடைக்கவில்லை. போலீசார் வழக்குப்பதிவுசெய்யாமல், உருளையன்பேட்டை காவல்நிலையம்
செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் உருளையன்பேட்டை போலீஸ்நிலையம் வந்து புகார் கொடுத்தனர். ஆனால் அவர்கள் புகாரை ஏற்க மறுத்து, சம்பவம் நடந்த இடத்தில் புகார் தெரிவிக்க கூறினர். இதனால் அவர்கள் கோட்டகுப்பம் போலீசாரிடம் சென்றனர். அவர்கள் எங்கள் மாநிலம் இல்லை என்பதால் புதுவையில் புகார் கொடுக்கும்படி கூறினார்.
இதனால் நள்ளிரவு ஒரு மணி வரைபாதிக்கப்பட்டவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.இதையடுத்து நேற்று காலை திமுக தொகுதி
பொறுப்பாளர் கோபாலை சந்தித்து போலீசார்புகார் எடுக்காததை பற்றி தெரிவித்தனர். பின்னர்பாதிக்கப்பட்டவர்களையும், அந்த பகுதி மக்களையும்
அழைத்து கொண்டு அமைப்பாளர் சிவாவை சந்தித்துகோபால் முறையிட்டார். பின்னர் அனைவரும் எதிர்க்கட்சி தலைவர்
தலைமையில், கோரிமேட்டில் முதல்வர் ரங்கசாமியை வீட்டில் சந்தித்தனர். அப்போது நடந்த சம்பவத்தை
முழுமையாக விளக்கினர். போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுப்பது குறித்தும் தெரிவித்தனர்.
உடன் முதல்வர் ரங்கசாமி, உருளையன்பேட்டைபோலீசாரை வீட்டுக்கு அழைத்து பேசி வழக்குப்பதிவுசெய்து குற்றவாளியை கண்டறிய உத்தரவிட்டார்.
மேலும், காவல் கண்காணிப்பாளர்கள் வீரவல்லபன்,லட்சுமி சவுஜாமியா, பக்தவச்சலம் ஆகியோர்தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு
தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.