ரஷியாவில் 13 வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிருடன் எழுந்த இளம்பெண்

ரஷியாவின் நோவோசிபிர்ஸ்க் [Novosibirsk] நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் 13 வது மாடியில் இருந்து விழுந்த இளம்பெண் அதிசயிக்கத்தக்க வகையில் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார்.

சைபீரியாவைச் சேர்ந்த 22 வயதான அந்த இளம்பெண் கடந்த ஜூலை 18 ஆம் தேதி அந்த கட்டிடத்தில் 13 வது மாடியில் இருந்த அறையின் ஜன்னலில் இருந்து இடறி விழுந்துள்ளார். இளம்பெண் கீழே புல் தரையில் விழுந்த உடனே நிதானித்து எழுந்து நின்ற காட்சிகள் வெளியாகி அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது.

இந்த விபத்தில் அவருக்கு சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இதற்கிடையில் இந்த வீடியோ இணையத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது.

Related posts

Leave a Comment