23 வயது இளம் கிரிக்கெட் வீரர் கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட சாமுவேல் ராஜ், விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கிரிக்கெட் பயிற்சியை முடித்து வீட்டுக்குத் திரும்பியபோது, இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து யாரோ ஒருவர் குதிப்பதை பார்த்ததும், அங்குள்ளவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கும் காவல் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சாமுவேல் ராஜ் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சாமுவேல் ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கத்திப்பாரா மேம்பாலத்தில் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.